மன வலிமை பெற

மன வலிமை பெற

ஒரு காரியத்தை செய்யும் பொழுது முழு கவனத்தையும் அதிலேயே செலுத்தவும். வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடாதீர்கள். “என்றும் நன்றே செய்; நன்றும் இன்றே செய்என்பதை மனதில் கொண்டு தாமதமின்றி தொடங்கி விடுங்கள். எப்போதும் விழிப்பாய் இருங்கள். நம்மை கவிழ்க்க ஒருவன் இருக்கிறான் என்பதை மனதில் கொண்டிருங்கள். எப்போதும் அறிவுப் பசியுடனே இருங்கள். நல்ல நேரத்தை தவறவிடாதீர்கள். எந்த காரியத்தையும் ஊன்றிப்பார்த்து கவனமாய்ப் படித்து ஆழ்ந்து யோசித்து, அது குறித்து இன்னும் தெரிந்து கொள்ள ஆவலாய் இருங்கள். அது உங்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும். சிறியவர் பெரியவர் என்றில்லாமல் அனைவரிடமும் இன் முகத்தோடு அன்புடன் பழகுங்கள். எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள். உங்களைச் சுற்றி சந்தோஷக் காற்றைப் பரப்புங்கள்.

ஓய்வு நேரத்தை என்றும் வீணாக்காதீர்கள். ஓய்வாக இருக்கும் போது நாம் அடுத்து செய்ய வேண்டிய காரியத்தை எப்போதும் அசை போடுங்கள். உடலுக்கு ஓய்வு அவசியம். மூளைக்கு ஓய்வு என்பது ஒன்றை பற்றியே சிந்திக்காமல் மாற்றி யோசிப்பது தான்.

துடிப்பாக வாழ்பவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வர். சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பர். பயம், ஆழ்ந்த கவலை நம் மனதையும் உடலையும் கெடுக்கிறது. மனவெழுச்சியும் தீவிர எண்ணமும் எந்த காரியத்தையும் அவசியம் வெற்றி பெறச்செய்யும்.

குடியா முழுகிடும், எழவாய் போச்சு, ஏதும் நடக்காதுபோன்று எதிர்மறையாகப் பேசுவதை தவிருங்கள். வாக்கு சுத்தத்தை மறக்காதீர்கள் எதிலும் ஒரு நேர்மையை கடைப்பிடியுங்கள். அவசரப்பட்டு எந்த காரியத்தையும் உடனே தீர்மானிக்காதீர்கள். மனதினை கேளுங்கள் அதுவே சரியானது. கோபத்தை விட்டொழியுங்கள். அடுத்தவரையும் கோபப்படுத்தாதீர்கள்.

வாழ்க்கையில் முன்னேற்றமடைய ஆசையும் ஆர்வமும் எப்போதும் வளர வேண்டும். அதுவே மனோவலிமை. மனோதிடம் நம் வாழ்வின் முதுகெலும்பு. மனோவலிமை உள்ள இடத்தில் பகுத்தறிவு பளிச்சிடும்.

தெரியாததை தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள என்றும் கூச்சப்படாதீர்கள். நல்ல குணம் படைத்த நண்பர்களிடம் பழகுங்கள் உயர்ந்த சிந்தனை தரத்தக்க நூல்களைப் படியுங்கள். தன்னம்பிக்கை பெற இது அவசியம் உதவிபுரியும்.

  • வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கணும்.
  • யானையின் பலம் தும்பிக்கையிலே;
    மனிதனின் பலம் நம்பிக்கையிலே
  • நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை; நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை.
  • எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்; இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது;
    பாதையெல்லாம் மாறி வரும்; பயணம் முடிவதில்லை; மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்.
  • துணிந்தவர் தோற்றதில்லை; தயங்கியவர் வென்றதில்லை.
  • தோல்வி என்றால் இறைவன் உங்களை கைவிட்டு விட்டான் எனப்பொருளில்லை; உங்களுக்கு வேறு நல்ல எதிர்காலத்தை நிர்ணயித்துள்ளான் என்றே பொருளாகும்.
  • ஏமாற்றங்களைத் எரித்துவிட வேண்டும்; பாடம் பண்ணிப் பத்திரப் படுத்தக்கூடாது.
  • புரிந்து கொண்டால் வாழ்க்கை என்பது புதிரும் அல்ல; புதினமும் அல்ல.
  • பிரிவென்பதால் நெஞ்சிலே பாரமில்லை; மழை என்பது நீருக்கு மரணம் இல்லை.
  • வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.
  • காலுக்கு செருப்பு எப்படி வந்தது; முள்ளுக்கு நன்றி சொல்.
  • நல்லது செய்யாவிட்டாலும், தீமை செய்வதையாவது கைவிட வேண்டும்.
  • தீதும் நன்றும் பிறர் தர வாரா. – கணியன் பூங்குன்றனார்.
  • சுறுசுறுப்பான தேனீக்களுக்கு துக்கப்பட நேரம் இல்லை.
  • சோம்பேரியியின் மனம் பிசாசின் பட்டறை.
  • எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
  • எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம். என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.
  • எங்க விழுந்தோம் என்று பார்ப்பதைவிட எங்கே வழுக்கினோம் என்று பார்.
  • எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.
  • முயலும் வெல்லும்; ஆமையும் வெல்லும்; முயலாமை வெல்லாது.
  • தோல்வி நிலையென நினைத்தால், மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
  • நல்ல மனப்பாங்கை உருவாக்கிக்கொள்ள நீங்கள் விரும்பினால், இப்பொழுதே நம் வேலையைச் செய்ய வேண்டும்.
  • நாளை என்பது நிச்சயம் இல்லாத போது, இன்றைய வேலையை உடனே செய்ய உத்வேகம் வரும்.
  • எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.
  • இதயத்தில் எழுதிய உறவுகள் என்றும் இறப்பதில்லை.
  • நீ வெளிச்சத்தில் இருந்தால் எல்லாம் உன்னைப் பின் தொடரும். ஆனால் நீ இருட்டில் நுழைந்தால் உன் நிழல் கூட உன்னை பின் தொடராது.
  • காலம் சில மனிதர்களை மறக்கடிக்கும்.
    ஆனால் சில மனிதர்கள் காலத்தை மறக்கடிப்பர்.
  • வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு. அதில் நீ காரணம் இல்லாமல் ஒரு காயை நகர்த்தக்கூடாது. அப்படித் தப்பான இடத்திற்கு நகர்த்தி விட்டால் பின்னர் அதை பழைய இடத்தில் வைப்பது கடினம்.
  • நீ அமைதியாக இருக்கும் போது தைரியமாக இரு. ஆனால் நீ வெற்றி பெரும் சமயத்தில் அமைதியாக இரு.
  • இறைவன் கொடுப்பதைத் தடுப்பவர் எவருமில்லை; இறைவன் தடுப்பதை கொடுப்பவர் எவருமில்லை. – நபிமொழி
  • உன் பிரச்சனைகள் எவ்வளவு பெரியது என்று கடவுளிடம் சொல்லாதே; உன் கடவுள் எவ்வளவு பெரியவர் என்று உன் பிரச்சனைகளிடம் சொல்.
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நாமாக இருப்போம்.
  • தலைக்கு மேல் பறவை பறப்பதை உன்னால் தடுக்க முடியாது. ஆனால் அது உன் தலையில் கூடு கட்டுவதை உன்னால் தடுக்க முடியும்.
  • நண்பன் இல்லாத போது உன் கைத்தடியுடன் (மனசாட்சி) கலந்தாலோசனை செய்.
  • வாங்குகிறவனுக்கு நூறு கண்கள் தேவை. விற்பவனுக்கு ஒன்று போதும்.
  • ஆண்டவன் ஒரு கையால் நம்மை அடிக்கிறான்; மற்ற கையால் நம்மை அணைக்கிறான்.
  • உள்ளே நுழையும் முன்னே வெளியே வருவதைப்பற்றி சிந்தனை செய்.
  • நீங்கள் அன்பு செலுத்தும் எதுவும் உங்களை விட்டு விலகினால் விட்டு விடுங்கள்;
    உங்கள் அன்பு நிஜமானது என்றால்
    மீண்டும் அது உங்களிடமே திரும்ப வரும்.
  • என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை. – தோல்வி.
  • மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்.
  • விடியும் என்ற எண்ணத்தில் உறங்கச் செல்லும் நீ, முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு; அனைத்தையும் சாதிக்கலாம்.
  • கோடி வந்தாலும் சரி; கோடி போனாலும் சரி; மனம் கோணாமல் இருப்பது ஒரு கோடி.
  • உன் கெளரவம் உன்னுடைய நாக்கு நுனியில் இருக்கிறது.
  • வாழ்க்கை என்பது சந்திரன் மாதிரி; சில சமயம் இருட்டு; சில சமயம் முழு நிலவு.
  • எதிர்ப்பார்த்தவன் ஏமார்ந்து போகலாம். எதிர்ப்பாராதவனே மிகவும் பாக்கியச்சாலி.
  • உன் நண்பனை அளவோடு நேசி; ஒரு நாள் அவன் உன் பகைவன் ஆகலாம். உன் எதிரியை அளவோடு வெறு; ஒரு நாள் அவன் உன் நண்பன் ஆகலாம்.
  • வாழ்க்கையில் வருவதை ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்; நல்லதே நடக்கும்.
  • சிந்தித்து எதையும் செய்; செய்த பின் சிந்திக்காதே.
  • வசந்த வாழ்வைத்தேடி அலைவதை விட, வாழும் வாழ்வை வசந்தமாக்கிக்கொள்வதே அறிவுடைமை.
  • நிதானத்தைக் கடைப்பிடி; அதுவே வெற்றியின் முதற்படி.
  • அறிவை விட தைரியத்தினால் நிறைய விடயங்கள் சாதிக்கப்படுகின்றன.
  • நீ காட்டின் அருகாமையில் இருந்தாலும் விறகை சிக்கனமாகவே செலவிடு.
  • வாழ்க்கை வாழ்வதற்கே. இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல.
  • கிட்டாதாயின் வெட்டென மற.
  • என் அனுமதியின்றி யாரும் என்னை காயப்படுத்த முடியாது.
  • வெற்றியாளர்கள் வேறு வேறு வகையான தொழில்களைச் செய்து வெற்றி பெறுவதில்லை. அனைவரும் செய்வதிலேயே சற்று வேறுபட்டு வித்தியாசமாக செய்து வெற்றியாளர்களாகிறார்கள்.
  • ஒரு விதைக்குள்ளே அடைபட்ட ஆலமரம் கண்விழிக்கும்; அதுவரை பொறு மனமே.
  • முடிவு பண்ணி இறங்கியபின் பின்வாங்காதே. முன்னேறு.
  • கோபுரத்தின் கலசத்தில் எச்சமிடும் காகங்களைப் பார்த்து ஆண்டவன் கோபிப்பதில்லை.
  • மனத்திருப்தி என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள செல்வம்; ஆடம்பரம் என்பது நாமாகத்தேடிக்கொண்ட வறுமை.
  • நீ ஒரு நண்பனைப் பெற விரும்பினால், நீயே ஒரு நல்ல நண்பனாக இருக்கப் பழகிக் கொள்.
  • மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும், வசதிகளுமல்ல; இடையூறுகளும் துன்பங்களுமே.
  • எப்போது உன்னிடம் இருட்டை ஒளிமயமாக்க விளக்கு இல்லையோ, அப்போது, இருட்டில் வழிதேட, இருட்டையே பயன்படுத்து.
  • எதிர்பார்க்காதவனுக்கு, எதிர்பாராத தருணங்களில், எதிர்பபார்க்காத திசைகளில் இருந்தெல்லாம் மகிழ்ச்சி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதீத கற்பனைகளை வளர்த்துக்கொள்ளாத மனிதனுக்கு, எல்லாக் காலங்களும் வசந்தகாலமே.
  • கிழக்கு வெளுக்காத நாள் என்று இதுவரை வந்ததில்லை; காற்று அடிக்காத திசை என்று எதுவுமில்லை.

இவற்றையெல்லாம் படித்தபின்னும் மன வலிமை கிட்டவில்லையெனின் கீழ்கண்ட ஆலயங்களிலுள்ள இறைவனின் காலடியில் சரணடைந்து விடுங்கள்.

வீரபத்திரசுவாமி ராயசோட்டி கடப்பா

சுவாமி நாதர்

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

பிரசன்ன வெங்கடாஜலபதி செவ்வாய்ப்பேட்டை சேலம்
அகோர வீரபத்திரர் கும்பகோணம் தஞ்சாவூர்
நரசிம்ம பெருமாள்

வேடசந்தூர்

திண்டுக்கல்

கல்யாண வீரபத்திரர் சென்னிவாக்கம் திருவள்ளூர்
கருப்பண்ண சுவாமி ராங்கியம், உறங்காப்புளி புதுக்கோட்டை

சுப்பிரமணிய சுவாமி

புத்தூர், உசிலம்பட்டி

மதுரை
அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் விராதனூர் மதுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *