குழந்தைகளுக்கு உள்ள பாலாரிஷ்ட தோஷம் நீங்க
குழந்தைகளுக்கு உள்ள பாலாரிஷ்ட தோஷம் நீங்க
பாலாரிஷ்டம் என்றால் பாலர்களுக்கு ஏற்படும் (ஆயுள்)தீங்கு எனப் பொருள்படும். இவை இரண்டு வகையாம். ஒன்று பாலாரிஷ்டம், மற்றொன்று எவ்வனாரிஷ்டம். 12 வயது வரை பாலாரிஷ்டம், 12 முதல் 20 வயதுவரை எவ்வனாரிஷ்டம்.
“தேயுமதி லக்கினகேந் திரத்தில் எட்டில் பொல்லாச்
சேய்முதல்பா பிகளிருக்க மரிக்குஞ்சன் மத்தில்
ஏயசசிக்குஇருபாலும் பாவர்நிற்கில் எட்டுஏழ்
நான்குஇடத்தும் இவ்வண்ணம் நிற்கில்உற்ற சேயும்
தாயும்சாம் என உரைப்பர் சுபக்கோள்பார்த் திடினே
தாயுடன்சீ விக்குமென வேசாற்றல் ஆகும்
மாயகதிர் பாக்கியத்தில் சுபர்நோக்குஇல் லாமல்
மருவசசி சுபருடனே மன்னிலரிட்ட மதாம்.”
(சாதக அலங்காரம்)
தேய்பிறைச் சந்திரன் இலக்கினத்தில் இருக்க, கேந்திரங்களிலாவது, எட்டாமிடத்திலாவது பாவக்கிரகங்கள் இருந்தால் பிறந்த குழந்தை இறக்கும். 1,4,7,8ல் சந்திரன் பாவக்கிரகங்களின் நடுவில் இருந்தால் பிறந்த குழந்தையும் தாயும் மரணமாவர். இச்சந்திரனை சுபக்கோள் பார்த்தால் தாயுடன் குழந்தை உயிரோடு வாழும் என்று சொல்லப்படும். சூரியன் ஒன்பதில் சுபர்களுடைய பார்வையில்லாதிருக்க சந்திரன் சுபர்களுடன் கூடியிருந்தால் குழந்தைக்குத் தீங்குண்டாம்.
இத்தோஷம் நீங்க கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று மனமுருகி வேண்டிக்கொள்ள நிவர்த்தியாக வாய்ப்பு மிகுதி என பக்தர்கள் நம்புகின்றனர்.
பரிகாரம் செய்யவேண்டுமெனப் பணம் செலவு செய்யாதீர்கள். அன்னதானம் செய்யுங்கள். உடை தானம் செய்யுங்கள்.
பனிசிகாடு |
கோட்டயம் |
|
ஆம்ரவனேஸ்வரர் | மாந்துறை | திருச்சி |
திருக்குறளப்பன் | திருவாறன்விளை | பந்தனம் திட்டா |
வத்திராயிருப்பு |
விருதுநகர் |
nalla karuthu
பரிகாரம் செய்யவேண்டுமெனப் பணம் செலவு செய்யாதீர்கள். அன்னதானம் செய்யுங்கள். உடை தானம் செய்யுங்கள்
பரிகாரம் I like this
nanri aasiriyarukku
நன்றி