Tag Archives: காஞ்சிபுரம்

அருள்மிகு குமரக்கோட்ட முருகன் கோயில், காஞ்சிபுரம்

அருள்மிகு குமரக்கோட்ட முருகன் கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 2722 2049 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். ஆறுகால பூஜை நடக்கிறது.

மூலவர்

முருகன்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

புராணப்பெயர்

கச்சி

ஊர்

காஞ்சிபுரம்

மாவட்டம்

காஞ்சிபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

ஓம்என்னும் பிரணவத்தின் பொருளறியாத பிரம்மனை முருகன் சிறையிலடைத்தார். அதன் பின், பிரம்மனின் உருத்ராட்ச மாலை, கமண்டலத்தை பெற்று பிரம்ம சாஸ்தா கோலத்தில் படைப்புத் தொழிலை ஆரம்பித்தார். அவ்வாறு படைப்பை இத்தலத்தில் நடத்தியதாக நம்பிக்கை.

மேற்கு நோக்கியுள்ள இந்த முருகனை தரிசித்தால் பிரம்மா, விஷ்ணு, சிவனை தரிசித்த பலன் கிடைக்கும். எனவே இவரை ஒருவரில் மூவர்என விசேஷ பெயரிட்டு அழைப்பர்.

நாக வழிபாடு மிகவும் தொன்மையானது. இந்த வழிபாடு அனைத்து சமயங்களிலும் பரவிக்கிடக்கிறது. பொதுவாக பெருமாளுக்குத்தான் ஐந்துதலை நாகம் குடை பிடிப்பதை பார்த்திருப்போம். இங்கே முருகனுக்கு ஐந்துதலை நாகம் குடைபிடிக்கிறது. வள்ளி தெய்வானைக்கு மூன்று தலை நாகமும் குடை பிடிக்கிறது. இவரை குமரக்கோட்ட கல்யாணசுந்தரர்என அழைக்கிறார்கள்.

அருள்மிகு சத்யநாதசுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்

அருள்மிகு சத்யநாதசுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 2723 2327, 2722 1664 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சத்யநாதர், திருக்காலீஸ்வரர், காரைத்திருநாதர்
அம்மன் பிரமராம்பிகை
தல விருட்சம் காரைச்செடி
தீர்த்தம் இந்திர, சத்யவிரத தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கச்சிநெறிக்காரைக்காடு
ஊர் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

தேவர்களின் தலைவனான இந்திரன் தனது தவத்தினால் விரும்பிய வடிவம் எடுக்கும் திறன் பெற்றிருந்தான். ஒருசமயம் கவுதம மகரிஷியின் மனைவியான அகல்யா மீது அவனுக்கு ஆசை ஏற்பட்டது. எனவே, அகல்யாவை கவுதமரிடம் இருந்து பிரித்துக் கவர்ந்துசெல்ல வஞ்சக எண்ணம் கொண்டான். இதற்காக ஒருநாள் அதிகாலையில் கவுதமரின் ஆசிரமத்திற்கு சென்று, சேவல் போல கூவினான். பொழுது விடிந்தது என நினைத்த கவுதமர் வெளியில் சென்று விட்டார். இத்தருணத்திற்காக காத்திருந்த இந்திரன், அவர் சென்ற சிறிது நேரத்தில் அவரைப் போலவே உருவத்தை மாற்றிக் கொண்டு அகல்யாவிடம் சென்று அவளை ஏமாற்றி காமுற்றான்.