Monthly Archives: April 2012

லட்சுமி கடாட்சம் கிடைக்க

லட்சுமி கடாட்சம் கிடைக்க

செல்வத்துக்கு அதிபதி இலக்குமி. அவளின் கடாட்சம் கிட்டவேண்டுமாயின் அவளின் கால்களில் சரண் அடைவதைத் தவிர வேறு வழியில்லை. ஆகவே, கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபட, சிறப்பாக இலக்குமியை வழிபட அவளின் கடாட்சம் கிட்டும்; செல்வம் பெருகும்என்கின்றனர் பக்தர்கள்.

இலட்சுமி நாராயணர் புதூர் ஈரோடு
திருப்பதி வெங்கடாசலபதி மேல்திருப்பதி சித்தூர்
இலட்சுமி நாராயண பெருமாள் வேப்பஞ்சேரி சித்தூர்
இலட்சுமி கோபாலர் ஏத்தாப்பூர் சேலம்
இலட்சுமிநாராயணர் வரகூர் தஞ்சாவூர்
லட்சுமிநாராயணப்

பெருமாள்

அம்பாசமுத்திரம் திருநெல்வேலி

இலட்சுமி நரசிம்மர்

கீழப்பாவூர்

திருநெல்வேலி

அனந்த பத்மநாபசுவாமி திருவனந்தபுரம் திருவனந்தபுரம்
வெள்ளிமலைநாதர் திருத்தங்கூர் திருவாரூர்
இலட்சுமி நாராயணப்பெருமாள் சின்னமனூர் தேனி
தாமரையாள் கேள்வன் பார்த்தன் பள்ளி நாகப்பட்டினம்
திருவாழ்மார்பன் திருவல்லவாழ் பந்தனம் திட்டா
பதினெட்டுக்கை(அஷ்டதசபுஜ) மகாலட்சுமி துர்க்கை குறிச்சி புதுக்கோட்டை
லெட்சுமி ஹயக்ரீவர் முத்தியால் பேட்டை புதுச்சேரி
இலட்சுமி நாராயணர் காரிசேரி விருதுநகர்

லலிதசெல்வாம்பிகை (செல்லப்பிராட்டி)

செஞ்சி

விழுப்புரம்
லட்சுமி நரசிங்க பெருமாள் திண்டிவனம் விழுப்புரம்
இலட்சுமி நரசிம்மர் பூவரசன்குப்பம் விழுப்புரம்

லட்சுமி நாராயணி

திருமலைக்கோடி (ஸ்ரீபுரம்)

வேலூர்

ராகு தோஷம் நீங்க

ராகு தோஷம் நீங்க

ராகு கேது தோஷம்:

ஆண், பெண் இருவர் ஜாதகங்களிலும், லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து 2,4,5,7,8,12வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷம்.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 2ல் ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷம். கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு, அல்லது விவாகரத்து உண்டாகலாம்.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 4ல் ராகு அல்லது கேது உள்ளது நாகதோஷம்தான். இருதய சம்பந்தமான நோய், சொத்து விஷயமான தகராறு, மனைவிக்கு ரோகம், குடும்பவாழ்க்கையில் அதிருப்தி, முதலிய கஷ்டங்கள் வர வாய்ப்பு உள்ளது.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 5 ல் ராகு அல்லது கேது இருப்பதால் புத்திரபாக்யம் தடைபடக்கூடும். ஆனால் 5ம் அதிபதி சுபர் சேர்க்கை பெற்று பலமாக இருப்பின் இந்த நாகதோஷம் நிவர்த்தி அடைந்து குழந்தைச் செல்வம் ஏற்படும்.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 7ல் ராகு அல்லது கேது நிற்பது களத்திர தோஷம். இதனால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படலாம். தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு,
மனஸ்தாபம், அவநம்பிக்கை ஏற்படக்கூடும். சில தம்பதிகளிடையே பிரிவினை கூட நேரலாம்.
ஆனால் ஜாதகத்தில் 7ம் அதிபதி சுக்கிரன் பலமாக காணப்பட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும்,
லக்னம் அல்லது சந்திரனுக்கு 8 மிடத்தில் ராகு அல்லது கேது இருக்கும் நாகதோஷத்தால்
விஷக்கடி, நோய், குடும்பத்தில் சண்டைசச்சரவு, பிரிவினை, ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால்
8
வது வீட்டை சுபர் பார்த்தாலோ, 8ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும்.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 12ம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பதும் நாகதோஷம். இதனாலும் நோய் தொல்லை, விஷக்கடி ஏற்பட வாய்ப்பு உண்டு, பண விரயமும் ஏற்படும். 12ம் வீட்டை சுபர் பார்த்தாலோ அல்;லது 12ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும்.
லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்.

ஜாதகத்தில் இருப்பதை மாற்றமுடியாது. இந்த தோஷத்திலிருந்து விடுபட பரிகாரம் செய்யப் பணமில்லை. என்ன செய்ய? வேறு வழியில்லை. “பத்து பத்ததக்குச் செட்டியார் இருக்கிறார்.” அவர்தான் இறைவன். கீழுள்ள ஆலயங்களுக்குச் சென்று மனமுருக வேண்டிக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

நாகராஜா சுவாமி நாகர்கோவில் கன்னியாகுமரி
நீலகண்டேஸ்வரர் (சவுந்தர்யேஸ்வரர்) இருகூர் கோயம்புத்தூர்
காளத்தியப்பர் காளஹஸ்தி சித்தூர்
சேஷபுரீஸ்வரர் திருப்பாம்புரம் திருவாரூர்
நாகநாதர் பாமணி திருவாரூர்
காளாத்தீஸ்வரர் உத்தமபாளையம் தேனி
நீலகண்டேஸ்வரர் இலுப்பைபட்டு நாகப்பட்டினம்
சொர்ணபுரீஸ்வரர் தெற்கு பொய்கைநல்லூர் நாகப்பட்டினம்
நாகநாதசுவாமி நாகநாதர் சன்னதி நாகப்பட்டினம்

பேச்சியம்மன்

சிம்மக்கல், மதுரை

மதுரை

காசி விஸ்வநாதர் (விசாலாட்சி) பழங்காநத்தம் மதுரை மதுரை

நாககன்னியம்மன்

தும்பூர்

விழுப்புரம்

நாகேஸ்வர சுவாமி பூவரசன் குப்பம் விழுப்புரம்