Monthly Archives: March 2012

அருள்மிகு இலட்சுமிநாராயணப்பெருமாள் திருக்கோயில், அம்பாசமுத்திரம்

அருள்மிகு இலட்சுமிநாராயணப்பெருமாள் திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்.

+91- 94420 64803 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 9 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 6.30 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

லட்சுமிநாராயணர்

உற்சவர்

சீனிவாசர்

தல விருட்சம்

வில்வம்

தீர்த்தம்

கிணறு தீர்த்தம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஆகமம்

வைகானசம்

ஊர்

அம்பாசமுத்திரம்

மாவட்டம்

திருநெல்வேலி

மாநிலம்

தமிழ்நாடு

முற்காலத்தில் இக்கோயிலில் சிவன், இலிங்கரூபமாக எழுந்தருளியிருந்தார். ஒரு சமயம் பொதிகை மலைக்கு அகத்தியரை சந்திக்கச் சென்ற சனகாதி முனிவர்கள், இங்கு வந்தனர். அப்போது அவர்களுக்குள் சிவன், திருமால் இருவரும் ஒன்றா? என்ற சந்தேகம் வந்தது. தங்கள் குழப்பத்தை தீர்க்கும்படி சிவனிடம் முறையிட்டனர். உடன் இங்கிருந்த இலிங்கத்தில் பெருமாள், மகாலட்சுமியுடன் காட்சி கொடுத்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு, இலட்சுமி நாராயணர் சிலை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பப்பட்டது.

மூலஸ்தானத்தில் பெருமாள், மடியில் மகாலட்சுமியை வைத்தபடி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பெருமாள், புதன் கிரகத்திற்கும், தாயார் சுக்ரனுக்கும் அதிபதி ஆவர். எனவே இத்தலம், “புதசுக்ர பரிகார க்ஷேத்ரம்என்றும் அழைக்கப்படுகிறது. புதன் கிரக தோஷம் உள்ளவர்கள் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தும், சுக்ரதோஷம் உள்ளவர்கள் மகாலட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு புதன்கிழமைகளில், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ள பெண்கள் சுவாமி முன்பு பச்சரியின் மீது தேங்காயில் நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள்.

அருள்மிகு புருஷோத்தமப்பெருமாள் திருக்கோயில், அம்பாசமுத்திரம்

அருள்மிகு புருஷோத்தமப்பெருமாள் திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4634 – 255 609 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7.30 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

புருஷோத்தமப்பெருமாள்

உற்சவர்

புருஷோத்தமர்

தாயார்

அலர்மேலுமங்கை

தல விருட்சம்

புன்னை

தீர்த்தம்

பொங்கிகரை தீர்த்தம்

ஆகமம்

பாஞ்சராத்ரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

அம்பாசமுத்திரம்

மாவட்டம்

திருநெல்வேலி

மாநிலம்

தமிழ்நாடு

முற்காலத்தில் இப்பகுதியை பராந்தகசோழ மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு புத்திரப்பேறு இல்லை. குழந்தை வரம் வேண்டி தேவர்களைப் பிரார்த்தித்து, பல யாகங்கள் செய்தும் பயனில்லை. ஒரு சமயம் மகரிஷி ஒருவர் இப்பகுதிக்கு வந்தார். அவரை வணங்கிய மன்னன், தனது நிலையை விவரித்து, எதிர்காலத்தில் நாடாள புத்திரன் ஒருவன் பிறக்க வழி சொல்லுமாறு ஆலோசனை கேட்டான். மகரிஷி மன்னனிடம், எந்த பரிகாரத்தாலும் குழந்தை பிறக்க வழியில்லாதவர்கள், சிவனுக்கும், விஷ்ணுவிற்கும் கோயில் எழுப்பி வழிபட்டால் புத்திரப்பேறு கிடைக்கும் என்றார். அதன்படி மன்னன் தாமிரபரணி நதிக்கரையில் பல கோயில்களைக் கட்டினான். இதில் முதன்முதலில் கட்டிய கோயில் இது. இங்கு சுவாமி, மடியில் மகாலட்சுமி தாயாரை அமர்த்திய கோலத்தில், “புருஷோத்தமர்என்ற பெயரில் அருளுகிறார்.

தாமிரபரணி நதியின் வடகரையில், வயல்களின் மத்தியில் இக்கோயில் அமைந்திருக்கிறது. இந்திர விமானத்தின் கீழ் எழுந்தருளியுள்ள சுவாமி, கருடாழ்வாரின் தோள் மீது அமர்ந்திருக்கிறார். கருடாழ்வாரின் வலதுகையில் சுவாமியின் பாதமும், இடதுகையில் உள்ள மலர் மீது தாயாரின் பாதமும் இருக்கிறது. தாயையும், தந்தையையும் பாதுகாப்பது ஒரு பிள்ளையின் கடமை என்பதற்கு உதாரணம் இது. கருடாழ்வாருக்கு கீழே தாமரை மலர் பீடம் இருக்கிறது. சுவாமி கருடாழ்வாரின் மீது காட்சி தருவதால் இவருக்கு, “நித்ய கருடசேவை பெருமாள்என்றும் பெயர் உண்டு. சுவாமியின் தலைக்கு மேலே, ஆதிசேஷன் ஏழு தலைகளுடன், குடை போல காட்சி தருகிறார். இத்தலத்தில் சுவாமி ஒரு தாயாருடன் காட்சி தருவதால், “புருஷோத்தமர்என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு, “ஏகபத்தினி விரதர்என்றும் பெயருண்டு. புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள், தாயாரையும் சுவாமியையும் வணங்கினால் வாழ்க்கை முழுவதும் இணைபிரியாமல் இருப்பர் என்பது நம்பிக்கை.