Monthly Archives: March 2012

அரியலூர் மாவட்டம் – ஆலயங்கள்

அரியலூர் மாவட்டம் ஆலயங்கள்

அருள்மிகு

ஊர்

கலியுகவரதராஜப் பெருமாள் கல்லங்குறிச்சி
பிரகதீஸ்வரர் கங்கை கொண்ட சோழபுரம்
ஆலந்துறையார் (வடமூலநாதர்) கீழப்பழுவூர்
வைத்தியநாதர் திருமழபாடி

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், சிவகாசி

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், சிவகாசி, விருதுநகர் மாவட்டம்.

+91 95009 16870, 4562 272 411

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5.45 மணி முதல் 12.15 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.15 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

காசிவிஸ்வநார்

அம்மன்

விசாலாட்சி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

சிவகாசி

மாவட்டம்

விருதுநகர்

மாநிலம்

தமிழ்நாடு

குற்றால மலைச்சாரலை ஒட்டிய தென்காசியில் சிவன் கோயில் ஒன்றைக்கட்டினான் அரிகேசரி பராங்குச மன்னன். அங்கு பிரதிஷ்டை செய்ய, காசியில் இருந்து சிவலிங்கம் ஒன்றைக் கொண்டு வர, தன் மனைவியுடன் சென்றான். கங்கையில் புனிதநீராடி ஒரு காராம் பசு மீது இலிங்கத்தை ஏற்றிக்கொண்டு தென்காசி சென்றான். பல நாள் பயணம் செய்து வரும் வழியில், தற்போது சிவகாசி நகரம் உள்ள இடத்தில் தங்கினான். அப்போது சிவகாசி வில்வனக் காடாக இருந்தது. மறுநாள் அவனுடன் வந்த அரசிக்கு பயணம் செய்யமுடியாதபடி உடல்நிலையில் கோளாறு ஏற்பட்டது. உடன் வந்த காராம்பசுவும் அவனுடன் வர மறுத்தது. இதனால் சிவலிங்கத்தை தென்காசிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த வில்வ வனத்தடியிலேயே காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கத்தை மன்னன் பிரதிஷ்டை செய்தான். காசி விஸ்வநாதரின் பெயரால் சுவாமிக்கு விஸ்வநாதர் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. அரிகேசரி பராங்குச மன்னனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த பாண்டிய மன்னர்கள், இக்கோயிலில் மண்டபங்கள், பிரகாரம், தீர்த்தம், சுற்றுமதில், ரத வீதிகளை அமைத்தனர். சிவகாசி காசி விஸ்வநாதர் கோயில் பணிகள் 1445ம் ஆண்டில் துவங்கப்பெற்று 16ம் நூற்றாண்டின் இறுதியில் நிறைவு பெற்றதாக தகவல் இருக்கிறது.