Monthly Archives: January 2012

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், ஆண்டான்கோவில்

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், ஆண்டான்கோவில், திருக்கடுவாய்க்கரைப்புத்தூர், வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்.

+91- 4374-265 130 (மாற்றங்களுக்குட்பட்டதுவை)

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சொர்ணபுரீஸ்வரர், செம்பொன்நாதர்
அம்மன் சொர்ணாம்பிகை, சிவசேகரி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் திரிசூலகங்கை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கடுவாய்க்கரை தென்புத்தூர்
ஊர் ஆண்டான்கோவில்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் அப்பர்

முசுகுந்த சக்கரவர்த்தி திருவாரூரில் தியாகராஜர் கோயில் கட்டிக்கொண்டிருந்த காலம் அது. கண்டதேவர் என்ற மந்திரி திருவாரூர் கோயில் கட்டுவதற்காக, மலையடிவாரத்திலிருந்து கல் கொண்டு வரச் சென்றார். இருட்டி விட்டது. இவர் சிவதரிசனம் செய்யாமல் எப்போதும் உணவருந்த மாட்டார். எனவே சாலையோரமாக படுத்துவிட்டார்.

சிவன் இவரது கனவில் தோன்றி, “நான் அருகே உள்ள வன்னிமரத்தின் அடியில் உள்ளேன். என்னை தரிசித்து விட்டு உணவருந்துஎன்று கூறிவிட்டு மறைந்து விடுகிறார். மந்திரி வந்து பார்த்த போது சிவன் கூறியபடியே வன்னிமரத்தடியில் ஒரு இலிங்கம் இருந்தது.

அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், குடவாசல்

அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், குடவாசல், திருவாரூர் மாவட்டம்.

+91- 94439 59839 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கோணேஸ்வரர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் வாழை
தீர்த்தம் அமிர்த தீர்த்தம்
ஆகமம் காரணாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்குடவாயில்
ஊர் குடவாசல்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர்

பிரம்மா, பிரளயகாலத்தில் வேதங்களை ஒரு அமுத குடத்தில் இட்டார். அந்தக் குடம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தென்திசையில் மிதந்து வந்தது. மீண்டும் உயிர்களைப் படைக்க சிவன், வேடன் வடிவில் சென்று, குடத்தின் மீது அம்பு எய்தார். அமுத குடத்தின் பாகங்கள் விழுந்த இடத்தில் சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். குடத்தின் வாய் பாகம் இத்தலத்தில் விழுந்தது. சிவன் இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தார். காலவெள்ளத்தில் இந்த இலிங்கம் புற்றால் மூடப்பட்டது.

பிற்காலத்தில் கருடனின் தாய் விநதை, சத்ரு என்பவளின் சூழ்ச்சியால் அவளிடம் அடிமையாக இருந்தாள். தாயை அடிமைத்தனத்திலிருந்து மீட்க, கருடன் தேவலோகம் சென்று அமுதக்குடம் எடுத்து வந்தார். வழியில் இத்தலத்தில் இறங்கினார். அப்போது அசுரன் ஒருவன், கருடனிடம் இருந்து அமுதக்குடத்தை பறிக்க முயன்றான். கருடன் அக்குடத்தை இங்கிருந்த புற்றின் மீது வைத்துவிட்டு, சண்டையிட்டார். அவனை வென்று அமுதக்குடத்தை எடுக்க வந்தபோது, குடம் புற்றுக்குள் புதைந்திருந்தது. எனவே தனது அலகால் கீறவே, அடியில் இலிங்கம் இருந்ததைக் கண்டு வணங்கினார். சிவன் அவருக்கு காட்சி தந்தார். கருடன் தனது தாயின் நிலையைக்கூறினார். அவரை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு அருளினார் சிவன். அதன்பின்பு கருடனே இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பினார்.