Monthly Archives: January 2012

அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், புதுவண்டிப்பாளையம்

அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், புதுவண்டிப்பாளையம், கடலூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சிவசுப்பிரமணிய சுவாமி

அம்மன்

வள்ளி, தெய்வானை

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

புதுவண்டிப்பாளையம்

மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

சமயக்குரவர் நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசர் சமணர்களின் கொடுமைக்கு ஆளானார். சமணர்களின் தலைவனும், அரசனுமான மகேந்திரவர்மன் அவரைக் கல்லோடு சேர்த்துக் கட்டி, வங்கக் கடலில் வீசி எறிந்தான். இருந்தும் அந்த கல்லையே தெப்பமாக்கி நமசிவாயஎன்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்து திருப்பாதிரிப்புலியூருக்கு தென் திசை நோக்கி மிதந்து வந்து, கெடில நதி வாயிலாகக் கரையேறினார் நாவுக்கரசர். இவருக்கு சிவன் பார்வதியுடன் ரிஷப வாகனத்திலும், முருகப்பெருமான் மயில் வாகனத்திலும் காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் இத்தலத்தில் முருகனுக்கு தனி கோயில் அமைக்கப்பட்டது.

அப்பர் பெருமான் கரையேறிய அருங்காட்சியினை ஆண்டு தோறும் சித்திரை அனுஷத்தில் கொண்டாடுவார்கள். அப்படிக் கொண்டாடும்போது திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி உடனாய பாடலீஸ்வரரும், புதுவண்டிப்பாளையம் முருகப்பெருமானும் அந்த தலத்துக்கு எழுந்தருளி அப்பருக்கும், பக்தர்களுக்கும் காட்சி கொடுக்கின்றனர். இத்தலம் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தலம்.

அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், குமாரசாமி பேட்டை

அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், குமாரசாமி பேட்டை, தர்மபுரி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சிவசுப்ரமணிய சுவாமி

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

குமாரசாமி பேட்டை

மாவட்டம் தர்மபுரி
மாநிலம் தமிழ்நாடு

சுமார் 300 வருடங்களுக்கு முன்பு, முருகப்பெருமானை நோக்கிக் கடும் தவம் இருந்தார் சித்தர் ஒருவர். தவத்தின் போது ஒருநாள் இரவு, அவருடைய கை வேறு, கால் வேறு, உடல் வேறு எனத் தனித்தனியாகக் கிடந்தது. அதைக் கண்டு ஊரே சிலிர்த்தது; அவரை வணங்கியது. அதையடுத்து, “நான் சமாதி நிலையை அடைந்ததும், அந்த இடத்தில் முருகப்பெருமான் சிலை வைத்து, அவருக்கு ஆலயம் அமைத்து வழிபடுங்கள்என்று சித்தர் அருளினார். அதன்படி ஒருநாள் அவர் சமாதி அடைய, அங்கே அழகிய சிவசுப்ரமணிய ஸ்வாமி சிலை வைத்து, ஊர்மக்கள் ஒன்றுகூடி, அங்கே முருகனுக்கு கோயில் அமைத்தனர். அன்று துவங்கி இன்றளவும், அனைவருக்கும் அருளையும் பொருளையும் அள்ளித் தருகிறார் முருகக் கடவுள்.