Monthly Archives: November 2011

மகிமாலீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு

அருள்மிகு மகிமாலீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு, ஈரோடு மாவட்டம்.

+91-424- 2267578

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மகிமாலீஸ்வரர்
அம்மன் மங்களாம்பிகை
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மகிமாலீஸ்வரம், ஈரோடை
ஊர் ஈரோடு
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

இக்கோயிலின் தல வரலாறு குறித்து இருவேறு கதைகள் சொல்லப்படுகிறது. இலங்கை மன்னன் இராவணனின் வம்சா வழியினர் சிறந்த சிவ பக்தர்களாக இருந்தனர். அவர்களில் மாலி, சுமாலி, மகிமாலி ஆகியோர் சிவன் குடிகொண்டிருக்கும் இமயமலைக்கு யாத்திரை சென்று விட்டு, தங்களுடைய நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். சிவ பக்தர்கள் மாலைப் பொழுதில் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்பது வழிபாட்டு முறைகளுள் ஒன்று. அவர்கள் மூவரும் இன்றைய ஈரோடு பகுதிக்கு வந்த போது இரவு நெருங்கிக் கொண்டிருந்தது.

மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில், விராலிப்பட்டி

அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில், விராலிப்பட்டி, ஒடுக்கம் தவசி மேடை, நத்தம் வழி, திண்டுக்கல் மாவட்டம்.

+91 93624 05382

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மகாலிங்கேஸ்வரர்
அம்மன் மரகதவல்லி, மாணிக்கவல்லி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் விராலிப்பட்டி
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய இராமர், தேவ குருவின் புத்திரரான பரத்வாஜரை சந்தித்தார். அவரது உபசரிப்பை ஏற்றார். அவர்களுடன் ஆஞ்சநேயரும் வந்திருந்தார். அப்போது, தனக்கு உதவிய ஆஞ்சநேயருக்கு மரியாதை செய்யும்விதமாக, தனக்கு உணவு பரிமாறிய இலையின் நடுவில் ஒரு கோடு போட்டார். ஒரு பக்கத்திலிருந்த உணவை அவரை உண்ணும்படி பணித்தார்.

இந்நிகழ்விற்குப் பிறகுதான் வாழை இலையின் நடுவில் கோடு வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்று கூறுகிறது. இத்தகு சிறப்பு மிக்க பரத்வாஜர் இத்தலத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்டதாகத் தலபுராணம் கூறுகிறது. மதுரையில் மீனாட்சியை பிரதிஷ்டை செய்த ஐந்து முனிவர்களில் இவரும் ஒருவர். இதனால் மீனாட்சிக்கு பஞ்ச ராஜ மாதங்கிஎன்றும் பெயர் ஏற்பட்டது.