Category Archives: விழுப்புரம்

அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோயில், அன்னம்புத்தூர்

அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோயில், அன்னம்புத்தூர், விழுப்புரம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

நிதீஸ்வரர்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

அன்னம்புத்தூர்

மாவட்டம்

விழுப்புரம்

மாநிலம்

தமிழ்நாடு

பிரம்மனும் விஷ்ணுவும் சிவனாரின் அடிமுடியை தேடிச் சென்றனர். அப்போது முடி தேடி சென்று தோற்றுப் போன பிரம்மன், முடியைக் கண்டேன் என்று பெயாய் சொன்னார். அன்னமூர்த்தி, அன்ன வாகனன் என்றெல்லாம் புகழப்பட்ட பிரம்மனுக்கு பொய் சொன்னதால் இழுக்கு ஏற்பட்டதுதான் மிச்சம். இதில் வேதனையுற்ற பிரம்மன், இந்த தலத்து இறைவனுக்கு கைநிறைய மலர்களை அள்ளிச் சூட்டி, மனம் கனிந்து வணங்க, அள்ளிச் சூட்டி, மனம் கனிந்து வணங்க, இழுக்கினால் நேர்ந்த துன்பங்கள் யாவும் விலகியதாம். ஆகவே, இந்த ஊருக்கு அன்னம்புத்தூர் என்று பெயர் அமைந்ததாக சொல்கிறது சோழ மன்னனின் கல்வெட்டு.

நம் தலையெழுத்தையே நிர்ணயித்து அருளும் பிரம்மனின் தலையெழுத்தை, கனிவும் கருணையும் பொங்க சிவனார் திருத்தி எழுதிய திருத்தலம் இது. ஆகவே, நிதீஸ்வரரை வணங்கி வழிபட்டால், சிவனாரும் அருள்வார். பிரம்மனும் நம் தலையெழுத்தைத் திருத்தி எழுதி அருள்வார். இதுவரை பட்ட கஷ்டங்களில் இருந்தும் பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை கிடைக்கப் பெறலாம். வேதனைகள் நீங்க பெறலாம். நிதிகளில் பதும நிதி, மகாபதும நிதி, மகா நிதி, கச்சப நிதி, முகுந்த நிதி, குந்த நிதி, நீல நிதி, சங்க நிதி என எட்டு வகை நிதிகள் உண்டு. இந்த எட்டு நிதிகளையும் தனது கடும் தவத்தால் ஈசனிடம் இருந்து பெற்றவர், நிதிகளுக்கெல்லாம் தலைவரானார். அவர் குபேரன்.

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில், அந்திலி

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில், அந்திலி, விழுப்புரம் மாவட்டம்.

+91-413-225 238, 94867 89200

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7.30 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

நரசிம்மர்

தல விருட்சம்

அரசமரம்

ஆகமம்

பாஞ்சராத்ரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

அந்திலி

மாவட்டம்

விழுப்புரம்

மாநிலம்

தமிழ்நாடு

தனது உண்மையான பக்தனுக்கு ஒரு கஷ்டம் என்றால் ஓடோடி வந்து காப்பாற்றும் நாராயணன், குழந்தை பிரகலாதனுக்கு அவனது தந்தையால் ஆபத்து என்பதை அறிந்ததும், அவனை காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்தார். நாராயணன் எங்கு சென்றாலும் கருடனின் மீது ஏறி செல்வார். ஆனால் பிரகலாதனை உடனே காப்பாற்ற வேண்டும் என்ற அவசரத்தில் தூணில் தோன்றினார். இதனால் பரமபதத்தில் இருந்த கருடனுக்கு மிகுந்த மன வருத்தம் ஏற்பட்டது. நாராயணன் எங்கு சென்றாலும் தன் மீது தானே ஏறிச்செல்வார். இப்போது திடீரென பரமபதத்தில் இருந்து எங்கோ சென்று விட்டாரே! தன் மீது ஏதேனும் கோபமா? என்பது தெரியாமல் குழம்பினார். இதனால் வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு வந்தார். பூமியில் நிம்மதியின்றி தவித்தார். கடைசியில் தெட்சிண பினாகினிஎனப் போற்றப்படும் புனித நதியான தென்பெண்ணை ஆற்றின் கரையில் அந்திலி எனும் அமைதியான பகுதிக்கு வந்தார். நாராயணனை வேண்டி தண்ணீர், உணவு ஏதுமின்றி அங்கிருந்த பாறைமீது கடும் தவம் இருந்தார். இதனால் பலசாலியான கருடன் மிகவும் பலவீனமானார். இவரது கடும் தவத்தினால் வைகுண்டம் முதல் திருக்கைலாயம் வரை வெப்பத்தினால் தகித்தது. தேவர்கள் முதலானோர் நாராயணனிடம் சென்று கருடனை காப்பாற்றும்படி வேண்டினர். இவர்களது வேண்டுதலின்படியும், கருடனின் விருப்பப்படியும் கருடனின் முன்பு நாராயணன் தோன்றினார். “கருடா. உனது தவத்தில் மகிழ்ந்தேன். வேண்டும் வரம் கேள்என்றார் நாராயணன். நாராயணனைத் தரிசித்து மகிழ்ந்த கருடன், “பகவானே. குழந்தை பிரகலாதனை காப்பாற்ற உடனே சென்று, தூணில் நரசிம்மராக தோன்றினீர்கள். அதே நரசிம்ம தரிசனம் எனக்கும் காட்டியருளி, இப்பூவுல மக்களையும் காக்க வேண்டும்என வேண்டினார். கருடனின் விருப்பப்படி நாராயணன் இத்தலத்தில் நரசிம்மராக காட்சி தந்து அருளினார். மகாலட்சுமியும் நரசிம்மரின் மடியில் அமர்ந்தாள். அதனடிப்படையில் இங்கு லட்சுமி நரசிம்மருக்கு கோயில் எழுப்பப்பட்டது.