Category Archives: விழுப்புரம்

அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயில், திண்டிவனம்

அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயில், திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்.

+91- 4147-225 077, 99432 40662 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

லட்சுமி நரசிங்கப்பெருமாள்

உற்சவர்

வரதராஜப்பெருமாள்

தாயார்

மகாலட்சுமி

தல விருட்சம்

மருதமரம், நெல்லி

தீர்த்தம்

ராய தீர்த்தம்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

திண்டிவனம்

மாவட்டம்

விழுப்புரம்

மாநிலம்

தமிழ்நாடு

இரணியன் என்ற அசுரனின் மகன் பிரகலாதன். அசுரகுலத்தில் பிறந்தாலும், நாராயணனின் பக்தனாக இருந்தான். அந்நாட்டில், இரணியனையே மக்கள் கடவுளாக வணங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதை மகனே மீறியதால், அவனைத் துன்பம் செய்தான் இரணியன். நாராயண பக்தி செய்ததற்காக, பெற்ற பிள்ளையையே கொடுமை செய்ததைக் கண்ட திருமால் அவனை அழிப்பதற்காக மனித உடலும், சிங்கத்தலையும் கொண்டு, நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை அழித்தார். “நரன்என்றால் மனிதன்.” “சிம்மம்என்றால் சிங்கம். நரசிம்மரின் கோபத்தினால் உலகம்நடுங்கியது. இதையறிந்த மார்க்கண்டேய மகரிஷி, நரசிம்மரின் கோபம் தணிந்து, சாந்த சொரூபியாக அருள்பாலிக்கும்படி மகாலட்சுமியை வேண்டினார். தாயார் பெருமாளிடம் சினம் தணியும் வகையில் ஆசுவாசப் படுத்தினாள். இதன் அடிப்படையில் லட்சுமியை மடியில் இருத்திய நரசிம்மர் வழிபாடு உருவானது. இந்தத் தலத்தில், நரசிம்மர் கோபம் தணிந்து மக்களுக்கு அருள்செய்ய வேண்டுமென தாயாகிய இலட்சுமி, அவரை வணங்கிய நிலையில் இருக்கிறாள். நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது. லட்சுமிக்கு இக்கோயிலில் முக்கியத்துவம் என்பதால் நரசிம்ம லட்சுமிகோயில் என்று இதற்கு பெயர் வந்து விட்டது.

முன்காலத்தில் திண்டிவனம் புளியமரக்காடாக இருந்தது. வட மொழியில் திந்திருணிஎன்பது புளியமரத்தை குறிக்கும். “திந்திருணி வனம்என்பது மருவியே திண்டிவனம் ஆனது. திந்திருணி வனத்தில் இருந்த திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி என்ற அரக்கர்கள், இப்பகுதியில் தவம் செய்து வந்த முனிவர்களை கொடுமைப்படுத்தினர். அரக்கர்களிடமிருந்து தங்களை காக்க வேண்டி முனிவர்கள் திருமாலிடம் முறையிட்டனர்.

அருள்மிகு சிங்கவரம் பெருமாள் திருக்கோயில், சிங்கவரம்

அருள்மிகு சிங்கவரம் பெருமாள் திருக்கோயில், சிங்கவரம், விழுப்புரம் மாவட்டம்.

+91- 94432 85923 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

அரங்கநாதர்

உற்சவர்

அரங்கநாதர்

தாயார்

அரங்க நாயகி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

சிங்கவரம்

மாவட்டம்

விழுப்புரம்

மாநிலம்

தமிழ்நாடு

இரணியகசிபு என்ற அசுர மன்னன் தன்னையே வணங்கவேண்டும் என்றும், பெருமாளை வணங்கக்கூடாது என்றும் நாட்டு மக்களுக்கு உத்தர விட்டான். இதை அனைவரும் பின்பற்றினர். ஆனால் அஞ்சா நெஞ்சம் படைத்த அவனது மகன் பிரகலாதன் இதற்கு மறுத்தான். பெற்ற பிள்ளை என்றும் பார்க்காமல் அவனைக் கொல்லப் பலவித வழிகளைக் கையாண்டான். இதனால் கோபம் கொண்ட பெருமாள் அசுரனை கொன்று பிரகலாதனை தன்னருகில் வைத்துக்கொண்டார். அசுர குலத்தில் பிறந்தாலும் நற்குணத்துடன் வாழலாம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இத்தலம் அமைந்துள்ளது.

குடவரைக்கு தென்புறத்தில் சற்று கீழே உள்ள பாறையை ஒட்டி தாயார் அரங்கநாயகியும், அங்குள்ள பாறையில் புடைப்பு சிற்பமாக துர்க்கையும் காட்சி தருகிறார்கள். குடவரைக் கோயிலுக்கு செல்லும் வழியில் படிக்கட்டின் ஆரம்பத்தில் நாலு கால் மண்டபம் உள்ளது. சங்கு, சக்கரம், நாமம், திருப்பாதம், மற்றும் ஐந்து அனுமனின் சிற்பங்களும் உள்ளன. மலைக்கு மேலே செல்லும் வழியில் இலட்சுமி தீர்த்தம் என்ற சுனையும் அருகில் இலட்சுமி கோயிலும் அமைந்துள்ளது.