Category Archives: மதுரை

சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில், சதுரகிரி

அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில், சதுரகிரி, மதுரை மாவட்டம்.

+91- 98436 37301, 96268 32131

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுந்தரமகாலிங்க சுவாமி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் சதுரகிரி
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி சுயமாகத் தோன்றிய இலிங்கம். சதுரகிரி மலை மீது பச்சைமால் என்பவர் பசு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்பசுக்களின் பாலை விற்பனை செய்து வந்தார். அதில் ஒரு பசு மட்டும் பால் கொடுப்பதில்லை. இவ்வாறு பல நாட்கள் கொடுக்காததைக் கண்டு பச்சைமால் காரணம் புரியாமல் சிந்தித்துக் கொண்டிருந்தார். பசுக்கள் காலையில் மேய்ந்துவிட்டு மாலையில் கொட்டிலுக்கு வரும்போது பால் கொடுக்காத ஒரு பசு மட்டும், ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் நின்று தன்மடிப்பாலை சொரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த பச்சைமால் தன்கையில் வைத்திருந்த கம்பால் பசுவை அடித்தார். அப்பொழுது பசுமாடு விலகி ஒடிவிட்டது. அந்த பால் சொரிந்த இடத்தில் சிவபெருமான் அடியார் கோலத்தில் தலையில் இரத்தம் வடிய நின்றார். இதைப்பார்த்த பச்சைமால் அதிர்ச்சியடைந்து அடியாரை வணங்கி மன்னிப்பு கேட்டு இரத்தம் வடிந்த இடத்தில் அருகிலிருந்த செடியின் இலையைப் பிடுங்கி வைத்து கட்டினார். உடனே இரத்தம் நின்று வடுவும் தெரிந்தது. அடியார் வடிவத்தில் வந்த சிவன்,”யாம் இங்கே தங்கியிருக்க விரும்புகிறோம். எனவே இங்கே கோயில் கட்டி வழிபாடு செய்யுங்கள். அவ்வாறு செய்து வந்தால் அனைவருக்கும் வேண்டிய பலன் கிடைக்கும்என்று கூறிவிட்டு இலிங்கமாகி மறைந்துவிட்டார்.

சொக்கநாதர் திருக்கோயில், திருமங்கலம்

அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில், திருமங்கலம், மதுரை மாவட்டம்.

+91- 452 – 234 2782.

காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சொக்கநாதர்
அம்மன் மீனாட்சி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் ஆகாயகங்கை
ஆகமம் காரணாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமாங்கல்யபுரம்
ஊர் திருமங்கலம்
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

மீனாட்சியைத் திருமணம் செய்ய, கயிலையில் இருந்த சிவன் மதுரைக்கு வந்தார். அவர்களின் திருமணம் மதுரையில் நடந்தது. திருமணத்திற்கு முன்பு, தேவர்கள் மதுரை அருகிலுள்ள ஒரு பகுதிக்கு வந்தனர். பொன்னை உருக்கி மாங்கல்யம் செய்தனர். மாங்கல்யம் செய்வதற்கு முன்பு, சிவனை வழிபட, தேவர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பத்தை உணர்ந்த சிவன், இவ்விடத்தில் தனது திருமணத்திற்கு முன்பே பார்வதி சமேதராக எழுந்தருளி, காட்சி தந்தார். எனவே இங்கும் இறைவனை சுந்தரேஸ்வரர் என்றும், சக்தியை மீனாட்சி என்றும் அழைத்து, அந்த இடத்திலும் தங்க வேண்டும் என தேவர்கள் கேட்டுக் கொண்டனர். அங்கு திருமாங்கல்யம் செய்யப்பட்டதால், அப்பகுதியை தேவர்கள் திருமாங்கல்யபுரம்என அழைத்தனர். காலப்போக்கில் திருமங்கலம்எனப் பெயர் மாறியது. பிற்காலத்தில், மன்னர்கள் இங்கு கோயில் கட்டினர்.

இத்தலத்தில், யோகசனீஸ்வரர் தனிச்சன்னதியில் தெற்குநோக்கியபடி அருளுகிறார். இவரை, சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் எள்விளக்கு போட்டு, காக்கைக்கு அன்னமிட்டு மனமுருக வேண்டிக்கொண்டால், துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும்.