Category Archives: நாகப்பட்டினம்

அருள்மிகு அழகியசிங்கர் கோயில், திருநகரி

அருள்மிகு அழகியசிங்கர் கோயில், திருநகரி-609 106, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91-4364-256 927, 94433 72567 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அழகிய சிங்கர்(இலட்சுமி நரசிம்மன்) வீற்றிருந்த திருக்கோலம்
உற்சவர் திருவாலி நகராளன்
தாயார் பூர்ணவல்லி (அம்ருத கடவல்லி)
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் இலாட்சணி புஷ்கரிணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ஆலிங்கனபுரம்
ஊர் திருவாலி
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது, இரண்யனை வதம் செய்த சீற்றம் அடங்காமல் இருந்தார். இதனால் பயந்து போன தேவர்களும், ரிஷிகளும் பூலோகம் மேலும் அழியாது காக்கப்பட வேண்டும் என லட்சுமி தேவியை வேண்டினர். இவர்களது வேண்டுகோளை ஏற்ற தாயார் பெருமாளின் வலது தொடையில் வந்து அமர்ந்தாள். தேவியை பெருமாள் ஆலிங்கனம்(அணைத்தல்) செய்து கொண்டார். எனவே இவ்வூர் திருஆலிங்கனம்என்ற பெயர் பெற்று திருவாலி” (திருவாகிய லட்சுமியை ஆலிங்கனம் செய்தல்) ஆயிற்று. குலசேகர ஆழ்வார் இத்தலப் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். ஆலிநாட்டின் குறுநில மன்னனாகத் திருமங்கை ஆழ்வார் திகழ்ந்தார். எனவே அவருக்கு ஆலிநாடன்என்ற பெயர் உண்டாயிற்று.

அருள்மிகு கோழிக்குத்தி வான முட்டிப்பெருமாள் திருக்கோயில், சோழன் பேட்டை

அருள்மிகு கோழிக்குத்தி வான முட்டிப்பெருமாள் திருக்கோயில், சோழன் பேட்டை கிராமம், மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம்.

+91 4364 223395, 98424 23395 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8.00 முதல் 12.00 – மாலை 4.30 முதல் 8.00 வரை சனிக்கிழமை காலை 7.00 முதல் 12.00 – மாலை 4.00 முதல் 8.00 வரை

மூலவர் ஸ்ரீவானமுட்டிப் பெருமாள் (ஸ்ரீனிவாச பெருமாள்)
தாயார் ஸ்ரீதயா லெட்சுமி
தீர்த்தம் விஸ்வரூபபுஷ்கரணி
புராணப் பெயர் கோடிஹத்தி
மாநிலம் தமிழ்நாடு

சோழநாட்டில் பிப்பலர் என்றொரு மகரிஷி வாழ்ந்து வந்தார். அவருக்கு திடீரென கடுமையான சரும நோய் ஏற்பட்டது. தாங்கமுடியாத சரும நோயினால் அவதிப்பட்ட பிப்பல மகரிஷி பெருமாளை நினைத்து, தனக்கு ஏற்பட்ட நோயிலிருந்து தன்னை விடுவிக்கும்படி வேண்டினார். ஒருநாள் பிப்பல மகரிஷின் கனவில் தோன்றிய பெருமாள், அவரிடம்,”முன் ஜென்மத்தில் நீ அரசனாக இருந்தாய். அப்போது, ஒரு உயிரிழப்பிற்குக் காரணமாக இருந்திருக்கிறாய். அதன் காரணமாக இந்த ஜென்மத்தில் சரும நோயால் பாதிக்கப் பட்டுள்ளாய்எனவும் அந்த பாவம் தீர, காவிரிக் கரையோரமாகவே உனது பயணத்தைத் தொடங்குஎனப் பெருமாள் கூறினார். மூவலூரில் குடிகொண்டுள்ள ஸ்ரீமார்க்கசகாயேசுவரர் பிப்பல மகரிஷிக்கு வழிகாட்டுவார் எனவும் கூறினார். அந்த வழிகாட்டுதலின் படி நடக்க மகரிஷியின் சரும நோய் தீரும் என அருளினார் பெருமாள்.