Category Archives: தூத்துக்குடி

அருள்மிகு கைலாசநாதர் கோயில், சேர்ந்தபூமங்கலம்

அருள்மிகு கைலாசநாதர் கோயில், சேர்ந்தபூமங்கலம், தூத்துக்குடி மாவட்டம்.

 

மூலவர் : கைலாசநாதர்

அம்பிகை : சௌந்தர்யநாயகி

நவகயிலாயத்தில் ஒன்பதாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் சுக்கிர அம்சமாக விளங்குகிறார். அகத்தியர் தனது சீடர் உரோமச முனிவருக்காகத் தாமிரபரணி ஆற்றில் விட்ட ஒன்பது மலர்களில் ஒன்பதாவது மலர் சேர்ந்த இடம். இதனால் இவ்வூருக்குச் சேர்ந்த பூமங்கலம் என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது தாமிரபரணி ஆறு கடலோடு சங்கமிக்கும் இடம் என்பதால் சேர்ந்தமங்கலம் என்ற பெயர் வந்ததாகவும் ஒரு சிலர் கூறுகிறார்கள். இரண்டும் சேர்ந்து சேர்ந்தபூமங்கலம்ஆயிற்று.

கோயிலுக்கு கோபுரம் கிடையாது. கொடிமரம் உள்ளது. இக்கோயில் கல்வெட்டில் குடநாட்டு ஆத்தூர் சேர்ந்தமங்கலம் என்றும் அவனிய சதுர்வேதிமங்கலம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது இக்கோயில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் சிலர். சேந்தன் என்று குறிப்பிடப்பட்ட பாண்டியன் குலசேகரன் காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள் சிலர். நவகைலாயங்களுக்கும் சென்று வழிபட்டால் நவக்கிரக தலங்களுக்கும் சென்று வழிபட்ட பலன் உண்டு.

வழிகாட்டி: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரிலிருந்து வடக்கில் சுமார் 15 கி.மீ தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து தெற்கே 20 கி.மீ தொலைவிலும் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ளது.

செண்பகவல்லி உடனுறை பூவனாதர் திருக்‌கோயில், கோவில்பட்டி

அருள்மிகு செண்பகவல்லி உடனுறை பூவனாதர் திருக்‌கோயில், கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.

+91 4632 2520248

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பூவனாதர்
அம்மன் செண்பகவல்லி
தல விருட்சம் களா மரம்
தீர்த்தம் அத்தியர்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கோவிற்புரி (மங்கைநகர்)
ஊர் கோவில்பட்டி
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

ஈசன் திருமணத்தின் போது வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்த நிலையில், உலகைச் சமன்செய்யும் பொருட்டு, இறைவன் ஆணைப்படி, அகத்தியர் பொதிகை நோக்கிப் வந்தார். வழியில் எதிர்த்த அரக்கர்களான வாதாபி மற்றும் விலவனன் ஆகிய‌ேரை வதைத்தனால் உண்டான பிரம்மகத்தி தோசம் நீங்கப்பெற்றார்.

பொன்ம‌லை முனிவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, அகத்தியர் தீர்த்தத்தை ஏற்படுத்திவிட்டு, தன் பயணத்தைத் ‌தொடர்ந்தார். வெள்ளிமலை வாமனன், நந்திதேவரின் சாபத்தால்  வெம்பக்‌கோட்டை ‌வேந்தனாகப் பிறந்து செண்பக மன்னன் எனப் பெயர் பெற்றான். இறைவன் ஆணைப்படி கோவிற்புரியையும் (கோவில்பட்டியையும்), அதில் பூவனாதருக்‌கு கோவிலும் அமைத்து சாபநிவர்த்தி பெற்றான். செண்பக மன்னனால் தோற்றுவிக்கப்பட்ட இத்திருக்கோயிலில் அம்பாள் செண்பகவல்லி என்று பெயர் பெற்றாள். உள்ளமுடையான் (புலவர் கி.பி.1029க்கு முற்பட்டவர்) என்பவரால் புதுப்பிக்கப்பட்டது.

மது‌‌ரையில் எப்படியோ அதுபோல் இங்கும் அம்பாளுக்குத்தான் முக்கியத்துவம். இந்த சந்நிதி நு‌ழைவாயிலில் பிரம்மாண்டமான துவாரபாலகிகள் உள்ளனர். மூல விக்ரகம் எப்படியுள்ள‌தோ அப்படியேதான் அலங்காரம் செய்வது எல்லா கோயில்களிலும் உள்ள வழக்கம். அருள் தரும் அம்பிகை செண்பகவல்லி அம்பாள் 7 ஆடி உயரத்தில் எழில் ‌‌கொஞ்சும் தோற்றத்துடன் காட்சி தருகிறார். இங்கு மட்டும் நிற்கும் அம்பாளை, அமர்ந்துள்ளது போல அலங்காரம் செய்கிறார்கள்.