Category Archives: திருப்பூர்

அகத்தீசுவரர் கோயில், தாராபுரம்

அருள்மிகு அகத்தீசுவரர் கோயில், தாராபுரம், திருப்பூர் மாவட்டம்.

98420 16848

காலை 6.30 முதல் பகல் 11.30 மணி, மாலை 4.30 முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

நாம் எல்லாவற்றிலுமே வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், பல முட்டுக்கட்டைகள் நம் இலக்கை அடையவிடாது தடுக்கின்றன. இவற்றையெல்லாம் தகற்துத் தள்ளுபவராக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அகஸ்தீஸ்வரர் அருளுகிறார். இவர் மணலால் செய்யப்பட்ட லிங்கமாக இங்கு அருளுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கயிலாயத்தில் சிவபிரான், பார்வதிதேவியை திருமணம் செய்த போது, வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த பொதிகை மலைக்கு செல்லுமாறு, அகத்தியருக்கு சிவன் கட்டளையிட்டார். அங்கு செல்லும் வழியில், அகத்தியர் பல இடங்களில் இலிங்கப் பிரதிட்டை செய்து வழிபட்டார். அமராவதி ஆற்றங்கரைக்கு வந்த போது, மணலில் ஒரு இலிங்கம் வடித்தார். அகத்திஸ்தியர் வடித்த இலிங்கம் என்பதால் சுவாமிக்கு அகத்தீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில், இலிங்கம் இருந்த இடத்தில், பிற்காலத்தில் கோயில் வடிக்கப்பட்டது. இந்த ஊரே தற்போதைய தாராபுரம்.


பஞ்சபாண்டவர்கள் ஒரு ஆண்டு இங்கு வாழ்ந்ததாக கூறப்படுகிறது. திருமலை சுவாமி சித்தர் வழிபட்டுள்ளார். ராமேசுவரம், கும்பகோணம், காஞ்சிபுரம் நகரிலுள்ள கோயில்களில் உள்ள மணல் இலிங்கங்களுக்கு அபிசேகம் நடப்பதில்லை. ஆனால், இங்கு தினமும் அபிசேகம் நடந்து வருகிறது. எண்ணெய் காப்பு சாத்தும் முன் இந்த இலிங்கத்தில், மணலில் சேர்ந்துள்ள காக்கா பொன்என்னும் துகள் ஒளிர்வதைக் காணலாம். இந்த இலிங்கத்தை இங்கு நிறுவுமுன், இத்தலத்தின் மகிமையால் ஈர்க்கப்பட்ட அகத்தியர், இவ்வூரில் காசியில் இருந்து ஒரு லிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ய விரும்பினார். அது முடியாமல் போனதால், அமராவதி ஆற்றை கங்கையாக எண்ணி, அதிலுள்ள மணலை பிடித்தே இலிங்கம் வடித்தார். இதனால், தடையில்லாமல் விரைவில் செயல்களை முடிக்க இந்த அகத்தீசுவரரை வணங்குகின்றனர். குறிப்பாக நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரவும், தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் நடக்கவும், படித்து முடித்ததும் தாமதமின்றி வேலை கிடைக்கவும், முன்னேற்ற திருப்பங்கள் ஏற்படவும் பூஜை செய்து வரலாம்.

அருள்மிகு கோட்டைமாரியம்மன் திருக்கோயில், திருப்பூர்

அருள்மிகு கோட்டைமாரியம்மன் திருக்கோயில், திருப்பூர்.
*****************************************************************

+91- 0421 – 247 2200, 2484141 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – கோட்டை மாரியம்மன் (கோடீஸ்வரி மாரி)

அம்மன்: – மாரியம்மன்

தல விருட்சம்: – வேம்பு

தீர்த்தம்: – தாமரைத் தெப்பம்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – திருப்போர்

ஊர்: – திருப்பூர்

மாவட்டம்: – திருப்பூர்

மாநிலம்: – தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த விவசாயி ஒருவர், அம்பாள் மீது தீவிர பக்தி கொண்டவராக இருந்தார். பசு வளர்க்கும் தொழில் செய்து வந்த அவர், தனது பயன்பாட்டிற்குப் போக, மீதிப் பாலை குழந்தைகளுக்கு கொடுத்து விடுவார். ஒருசமயம், அவர் வளர்த்த பசுக்களில் ஒன்று மட்டும் தொடர்ந்து பால் கறக்கவில்லை.

சந்தேகமடைந்த விவசாயி பசுவிடமிருந்து யாரோ பாலைத் திருடுவதாக எண்ணி அதனைக் கண் காணித்தார். அப்போது பசுக்கூட்டத்தில் இருந்து தனியே சென்ற அப்பசு, ஓரிடத்தில் தானாக பால் சுரந்தது. இதனைக்கண்டு வியப்படைந்த பக்தர், அருகில் சென்று பார்த்தார். அங்கு ஒரு ஜோதி தெரிந்தது. பயந்துபோன அவர் வீட்டிற்கு திரும்பிவிட்டார். அன்றிரவில், அவரது கனவில் தோன்றிய மாரியம்மன், பசு பால் சொரிந்த இடத்தில் தான் எழுந்தருளியிருப்பதாக கூறினாள்.

மறுநாள் அவர் நடந்ததை மக்களிடம் கூறினார். அதன்பின், மக்கள் இணைந்து ஜோதி தோன்றிய இடத்தை ஆய்வு செய்தனர். அங்கே ஒரு அம்பாள் சிலை இருந்தது. அந்த சுயம்புவுக்கு (தானாகத் தோன்றியது) கோயில் கட்டினர்.