Category Archives: பிரச்சனைகளும் தீர்வுகளும்

கடன் தொல்லைகள் தீர

கடன் தொல்லைகள் தீர

தேவையற்ற பொருட்கள்மீது ஆசை கொள்ளாதே! வரவுக்கு மீறி செலவு செய்யாதே! பின்னர் கடன் வாங்காதே! வாங்கிவிட்டு அல்லல்படாதே!

இந்தக் காலத்தில் கடன் இல்லாத மனிதரே இல்லை எனலாம். கொஞ்சம் கொஞ்சம் என்று ஆரம்பிக்கும் இந்த பழக்கம் கடைசியில் ஒரு மனிதரின் ஒட்டு மொத்த நிம்மதியை குலைத்து, சில சமயங்களில் குடும்பத்தைப் பிரித்து, ஏன் ஒரு சிலரின் உயிரையே எடுத்து இருக்கிறது.

தேவையற்ற செலவுகளைச் சுருக்குங்கள். பொருள் சேர்க்க சிறந்த வழி சிக்கனம்தான். நீங்கள் நீண்டகால பண சேமிப்புத் திட்டத்தில் சேருவதைவிட, தினமும் சிறுதொகை சிக்கனம் பிடிப்பதே பெரிய பலன் தரக்கூடியதாகும்.

முதலில் நீங்கள் பணத்தை எந்த வழியில் செலவு செய்கிறீர்கள் என்பதைக் கவனித்து தவிர்க்க வேண்டியதை தவிருங்கள். பிறகு தானாக செல்வம் பெருகத் தொடங்கும். செல்போன் அழைப்புகளை தேவையான நேரத்தில் மட்டும் பேசுங்கள். கண்டிப்பாக குறிபிட்ட தொகை மிஞ்சும். ஒரு நாளில் பலமுறை காபி குடிப்பவராக இருந்தால் பிளாஸ்க்கில் எடுத்துச் சென்று பயன்படுத்துங்கள். வங்கி சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து பணத்தை சேமிப்பது நல்ல வழி.

சேமிப்பு பழக்கத்தை கடைபிடிப்பதன் முலம் உங்களின் கடனைத் தீர்க்கும் நோக்கம் எளிமையாக நிறைவேறும். வீட்டுச் செலவுக் கணக்கை எழுதுங்கள். பணத்தைச் சேமிக்க இதைவிட சிறந்த வழியில்லை. பணம் வரும் வழியும், போகும் வழியும் தெரிந்தால்தான் `பணம் எப்படித்தான் காலியாகுதோ’ என்று புலம்பும் நிலைமையைத் தவிர்க்க முடியும்.

வீட்டு மளிகைச் சாமான்களை மொத்தமாக வாங்கி விடுவதும் பணத்தைச் சேமிக்கும் சிறந்த வழியே. மொத்தமாக வாங்கிய சமையல் பொருட்களையும் தேவைக்கு ஏற்ப பக்குவமாக பயன்படுத்த வேண்டும். தேவைக்கு அதிகமாக சமைத்து வீணாக்கக் கூடாது. அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவது, உங்கள் பணத்தைக் காலியாக்கி விடும். வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது பணத்தைச் சேமிக்கும் சிறந்த சக்தியாகும். இதனால் உடல்நலமும் பாதுகாக்கப்படும். ஏமாறாமல் இருப்பதுவும் சேமிப்பு வழிகளில் ஒன்றாகும். இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் சலுகை அறிவிப்புகள் வருவதை பார்க்கலாம். ஒன்று எடுத்தால் ஒன்று இலவசம், 50 சதவீதம் தள்ளுபடி என்று கவர்ச்சி அறிவிப்புகள் வருகின்றன. இவையெல்லாம் வியாபார தந்திரம் தான்.

கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் உங்கள் சிந்தனை மழுங்கடிக்கபடுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள். ஆழமாக சிந்தித்து பார்த்தால் உண்மை விலை, தள்ளுபடி விலையை விடக் குறைவாக இருக்கும். ஏற்கனவே பயன்படுத்தபட்ட பொருட்களை செகட் ஹேண்டாக வாங்குவது பணத்தை மிச்சம் பிடிக்கும் சிறந்த வழியாகும்.

வாங்கிய ஓராண்டு காலத்திற்குள்ளாக புதிய காரின் விலை முன்றில் ஒரு பங்கு குறைந்து விடுகிறது. தரமும் தாழ்ந்து போவதில்லை. அப்படி இருக்கும்போது இரண்டாம் தரமாக வாங்கி பயன்படுத்துவதில் என்ன பிழையிருக்கிறது? போதிய அளவு சோதனை செய்து பார்த்து வாங்கி பயன்படுத்தினால் நமக்குத்தானே லாபம். எலக்ட்ரானிக் சாதனங்களையும், வீட்டு உபயோக பொருட்களையும் கூட இந்தப்பட்டியலில் சேர்க்கலாம். மேற்படிப்பை தொடர்கிறவர்கள் தங்கள் பொருளாதார நிலையை உத்தேசித்து புதிய புத்தகங்களை விலைக்கு வாங்கிப் படிப்பதை விட, பொதுநுலகத்தைப் பயன்படுத்தினால் செலவு கட்டுப்படும். ஆனால் அத்தியாவசியம் என்னும் புத்தகங்களை மட்டும் விலை கொடுத்து சொந்தமாக வாங்கி விடுவது நல்லது.

வீணாக்காமல் பயன்படுத்துவதும் ஒரு சேமிப்புதான். நாம் வாழ்க்கை முழுவதும் நுகர்வோராகவே இருக்கிறோம். மற்றவைகளை அனுபவிப்பதன் முலமே நமது வாழ்க்கை நகர்கிறது. வாழ்வில் சிலவற்றை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். சிலவற்றைக் குறைவாக பயன்படுத்த வேண்டும். இன்னும் சிலவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த மூன்றையும் சரியாகச் செய்வதுதான் உண்மையான சேமிப்பாகும்.

மின்விளக்கு, விசிறி, .சி. போன்ற சாதனங்களை தேவைக்கேற்ப குறைவாக பயன்படுத்துவதன் முலம் நிறைய சேமிக்கலாம். மற்றவர்களுக்காக பகட்டாக காட்டிக் கொள்ளவும், அலங்காரத்திற்காகவும் கவர்ச்சிக்காகவும் பொருட்களை வாங்காமல் இருந்தால், அதுவும் சேமிப்புதான்.

இப்படியெல்லாம் சேமித்தால் கடனை அடைத்துவிடலாம். அட! போங்கப்பா! இதெல்லாம் நம்மால் ஆகாது! என்பவர்கள் கீழ்கண்ட ஆலயங்களின் இறைவனை மனதால் வேண்டிக்கொள்ளுங்கள்.

அந்த ஆலயங்களுக்குச் செல்லும் செலவாவது மிச்சப்படும்.

உடையீஸ்வரர் இளநகர் காஞ்சிபுரம்
அருளாலீசுவரர் அழிசூர் காஞ்சிபுரம்
வீரஆஞ்சநேயர் சண்முகபுரம் கோயம்புத்தூர்

இலட்சுமி நரசிம்மர்

தாளக்கரை

கோயம்புத்தூர்
சாரபரமேஸ்வரர் திருச்சேறை தஞ்சாவூர்
வீரமார்த்தாண்டேஸ்வரர் அம்பாசமுத்திரம் திருநெல்வேலி

இலட்சுமி நரசிம்மர்

கீழப்பாவூர்

திருநெல்வேலி

நரசிங்கப்பெருமாள் மேலமாட வீதி, திருநெல்வேலி திருநெல்வேலி
தியாகராஜர் திருவாரூர் திருவாரூர்
அபிமுக்தீஸ்வரர் மணக்கால் ஐயம்பேட்டை திருவாரூர்
ஸ்ரீநிவாசப் பெருமாள் குடவாசல் திருவாரூர்
குடமாடு கூத்தன் திருநாங்கூர் நாகப்பட்டினம்

சுப்பிரமணிய சுவாமி

பெரம்பூர் நாகப்பட்டினம்
சகஸ்ரலட்சுமீஸ்வரர் தீயத்தூர் புதுக்கோட்டை

ஏமாற்றப்பட்டவர்கள் முறையிட

ஏமாற்றப்பட்டவர்கள் முறையிட

ஏமாற்றப்பட்டவர்கள் முறையிட கிராமப் பஞ்சாயத்துக்கள் உள்ளன. காவல் நிலையங்கள் உள்ளன. அங்கே சென்றால் இன்னும் பொருள் செலவு செய்யவேண்டும். நீதி மன்றங்கள் உள்ளன. பொருள் செலவுடன் குறைந்தது 16ஆண்டுக்குப்பின்தான் தீர்ப்பு கிட்டும். அங்கும் பணம் விளையாடும். தீர்ப்பு யார் பக்கமோ? கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

திக்கற்றோரும் கதியற்றோரும், வசதியற்றோரும் அந்தக் கடவுளிடம்தான் சென்று முறையிடுகிறார்கள். நம்பிக்கை உடைய பக்தர்கள் நீதி கிடைத்துள்ளதாகக் கூறுகின்றனர்.

புல்வநாயகி

பாகனேரி

சிவகங்கை

பண்ணாரி மாரியம்மன்

சத்தியமங்கலம், பண்ணாரி

ஈரோடு

பத்திர காளியம்மன் மடப்புரம் சிவகங்கை

பிரத்யங்கிராதேவி

அய்யாவாடி

தஞ்சாவூர்

நாவலடி கருப்பசாமி மோகனூர் நாமக்கல்
மொக்கணீஸ்வரர் கூழைய கவுண்டன்புதூர் கோயம்புத்தூர்
கருப்பண்ண சுவாமி ராங்கியம், உறங்காப்புளி புதுக்கோட்டை