Category Archives: பிரச்சனைகளும் தீர்வுகளும்

குடும்பம் செழிக்க

குடும்பம் செழிக்க

தேவையற்ற பொருட்கள்மீது ஆசை கொள்ளாதே! வரவுக்கு மீறி செலவு செய்யாதே!

தேவையற்ற செலவுகளைச் சுருக்குங்கள். பொருள் சேர்க்க சிறந்த வழி சிக்கனம்தான். நீங்கள் நீண்டகால பண சேமிப்புத் திட்டத்தில் சேருவதைவிட, தினமும் சிறுதொகை சிக்கனம் பிடிப்பதே பெரிய பலன் தரக்கூடியதாகும்.

முதலில் நீங்கள் பணத்தை எந்த வழியில் செலவு செய்கிறீர்கள் என்பதைக் கவனித்து தவிர்க்க வேண்டியதை தவிருங்கள். பிறகு தானாக செல்வம் பெருகத் தொடங்கும். செல்போன் அழைப்புகளை தேவையான நேரத்தில் மட்டும் பேசுங்கள். கண்டிப்பாக குறிபிட்ட தொகை மிஞ்சும். ஒரு நாளில் பலமுறை காபி குடிப்பவராக இருந்தால் பிளாஸ்க்கில் எடுத்துச் சென்று பயன்படுத்துங்கள். வங்கி சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து பணத்தை சேமிப்பது நல்ல வழி.

சேமிப்பு பழக்கத்தை கடைபிடிப்பதன் முலம் உங்களின் கடனைத் தீர்க்கும் நோக்கம் எளிமையாக நிறைவேறும். வீட்டுச் செலவுக் கணக்கை எழுதுங்கள். பணத்தைச் சேமிக்க இதைவிட சிறந்த வழியில்லை. பணம் வரும் வழியும், போகும் வழியும் தெரிந்தால்தான் `பணம் எப்படித்தான் காலியாகுதோ’ என்று புலம்பும் நிலைமையைத் தவிர்க்க முடியும்.

வீட்டு மளிகைச் சாமான்களை மொத்தமாக வாங்கி விடுவதும் பணத்தைச் சேமிக்கும் சிறந்த வழியே. மொத்தமாக வாங்கிய சமையல் பொருட்களையும் தேவைக்கு ஏற்ப பக்குவமாக பயன்படுத்த வேண்டும். தேவைக்கு அதிகமாக சமைத்து வீணாக்கக் கூடாது. அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவது, உங்கள் பணத்தைக் காலியாக்கி விடும். வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது பணத்தைச் சேமிக்கும் சிறந்த சக்தியாகும். இதனால் உடல்நலமும் பாதுகாக்கப்படும். ஏமாறாமல் இருப்பதுவும் சேமிப்பு வழிகளில் ஒன்றாகும். இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் சலுகை அறிவிப்புகள் வருவதை பார்க்கலாம். ஒன்று எடுத்தால் ஒன்று இலவசம், 50 சதவீதம் தள்ளுபடி என்று கவர்ச்சி அறிவிப்புகள் வருகின்றன. இவையெல்லாம் வியாபார தந்திரம் தான்.

கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் உங்கள் சிந்தனை மழுங்கடிக்கபடுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள். ஆழமாக சிந்தித்து பார்த்தால் உண்மை விலை, தள்ளுபடி விலையை விடக் குறைவாக இருக்கும். ஏற்கனவே பயன்படுத்தபட்ட பொருட்களை செகட் ஹேண்டாக வாங்குவது பணத்தை மிச்சம் பிடிக்கும் சிறந்த வழியாகும்.

வாங்கிய ஓராண்டு காலத்திற்குள்ளாக புதிய காரின் விலை முன்றில் ஒரு பங்கு குறைந்து விடுகிறது. தரமும் தாழ்ந்து போவதில்லை. அப்படி இருக்கும்போது இரண்டாம் தரமாக வாங்கி பயன்படுத்துவதில் என்ன பிழையிருக்கிறது? போதிய அளவு சோதனை செய்து பார்த்து வாங்கி பயன்படுத்தினால் நமக்குத்தானே லாபம். எலக்ட்ரானிக் சாதனங்களையும், வீட்டு உபயோக பொருட்களையும் கூட இந்தப்பட்டியலில் சேர்க்கலாம். மேற்படிப்பை தொடர்கிறவர்கள் தங்கள் பொருளாதார நிலையை உத்தேசித்து புதிய புத்தகங்களை விலைக்கு வாங்கிப் படிப்பதை விட, பொதுநுலகத்தைப் பயன்படுத்தினால் செலவு கட்டுப்படும். ஆனால் அத்தியாவசியம் என்னும் புத்தகங்களை மட்டும் விலை கொடுத்து சொந்தமாக வாங்கி விடுவது நல்லது.

வீணாக்காமல் பயன்படுத்துவதும் ஒரு சேமிப்புதான். நாம் வாழ்க்கை முழுவதும் நுகர்வோராகவே இருக்கிறோம். மற்றவைகளை அனுபவிப்பதன் முலமே நமது வாழ்க்கை நகர்கிறது. வாழ்வில் சிலவற்றை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். சிலவற்றைக் குறைவாக பயன்படுத்த வேண்டும். இன்னும் சிலவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த மூன்றையும் சரியாகச் செய்வதுதான் உண்மையான சேமிப்பாகும்.

மின்விளக்கு, விசிறி, .சி. போன்ற சாதனங்களை தேவைக்கேற்ப குறைவாக பயன்படுத்துவதன் முலம் நிறைய சேமிக்கலாம். மற்றவர்களுக்காக பகட்டாக காட்டிக் கொள்ளவும், அலங்காரத்திற்காகவும் கவர்ச்சிக்காகவும் பொருட்களை வாங்காமல் இருந்தால், அதுவும் சேமிப்புதான்.

அதிர்ஷ்டமானாலும் நிதானமாகவே வரும். கைக்கு மெய்யாய் கிடைப்பதே மேல். எதற்கும் ஓர் அளவுண்டு, எவர்க்கும் ஓர் அளவுண்டு. பெற்றோரைத் திருப்தி செய்ய வேண்டும். தவறான செலவு சொத்தை அழிக்கும். நல்ல செலவை அறிவோடு செய்ய ஒருவன் கற்றுக்கொண்டால், அந்தச் செலவு சொத்தைச் சேர்க்கும். தன்னைப் போல் மற்றவர்களிருப்பார்கள் என்பதை மறந்து விடாதே. தெய்வத்திடம் கேட்கும் மனப்பான்மை தவறானால், கேட்பது தவறு.”

 

சிக்கனம் என்னும் சொல்லிலேயே கெளரவம் நிறைந்து இருக்கிறது. இதனால், அத்தியாவசியத் தேவைகளைத் தவிர மற்றவற்றை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளும் மனோபாவம் வளர்ந்து மனிதனின் குணநலன்களை ஊன்று கோலாகிறது. இதுவும் தவிர பண்பட்ட மனத்தையும் அது உருவாக்குகிறது. இன்றைக்கும், நாளைக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொருளாதாரத் திட்டம்தான் சிக்கனம். செல்வம் உழைப்பால் சேருகிறது , சேமிப்பால் காப்பாற்றப்படுகிறது. விடாமுயற்சியால் அது வளர்க்கப்படுகிறது. சிக்கன உணர்வு, பிறவியில் தோன்றும் ஒரு குணம் அல்ல. அனுபவத்தாலும்,உதாரணங்களாலும் முன் யோசனையாலும் வளர்க்கப்படும் ஒன்றுதான் அது. மனிதன் புத்திசாலியாக சிந்தனையாளனாக மாறும் போதுதான் அவன் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கிறான். ஒருவன் எவ்வளவு செலவழித்தான், எப்படிச் செலவழித்தான் என்பதைக் கொண்டு தான் அவனது தகுதி நிர்ணயிக்கப்படுகிறது.

வித்யாராணி

இப்படியெல்லாம் சேமித்தால் குடும்பம் செழிக்கும்.

இதோடு கீழ்கண்ட ஆலயங்களுக்கும் சென்றூ வாருங்கள்(சிக்கனமாக!)

மலையாள மகாலட்சுமி

பள்ளிப்புரம்

ஆலப்புழை

அருங்கரையம்மன் சின்னதாராபுரம் கரூர்

மகாலட்சுமி

மேட்டு மகாதானபுரம்

கரூர்

ஆதிகாமாட்சி காஞ்சிபுரம் காஞ்சிபுரம்

மாரியம்மன்

கொழுமம்

கோயம்புத்தூர்

தண்டுமாரியம்மன்

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

இலட்சுமி நரசிம்மர்

தாளக்கரை

கோயம்புத்தூர்
திருப்பதி வெங்கடாசலபதி மேல்திருப்பதி சித்தூர்
இலட்சுமி நாராயண பெருமாள் வேப்பஞ்சேரி சித்தூர்
திருத்தளிநாதர் திருப்புத்தூர் சிவகங்கை

செல்வலலிதாம்பிகை அம்மன்

செல்லப்பிராட்டி

செஞ்சி

அட்டலட்சுமி

பெசன்ட் நகர்சென்னை

சென்னை

இலட்சுமி கோபாலர் ஏத்தாப்பூர் சேலம்
இலட்சுமிநாராயணர் வரகூர் தஞ்சாவூர்
மாற்றுரைவரதீஸ்வரர் திருவாசி திருச்சி
லட்சுமிநாராயணப்பெருமாள் அம்பாசமுத்திரம் திருநெல்வேலி
சொரிமுத்து அய்யனார் காரையார் திருநெல்வேலி

கோட்டைமாரியம்மன்

திருப்பூர்

திருப்பூர்

அனந்த பத்மநாபசுவாமி திருவனந்தபுரம் திருவனந்தபுரம்
பதினெட்டுக்கை(அஷ்டதசபுஜ) மகாலட்சுமி துர்க்கை குறிச்சி புதுக்கோட்டை
அழகிய சாந்த மணவாளப் பெருமாள் அர்ஜுனாபுரம், வத்திராயிருப்பு விருதுநகர்

லட்சுமி நாராயணி

திருமலைக்கோடி (ஸ்ரீபுரம்)

வேலூர்

குடும்ப ஒற்றுமைக்கு

குடும்ப ஒற்றுமைக்கு

இன்முகத்துடன் முன் மாதிரியாக நடந்து கொள்வது. யாரையும் குறை கூறாமல் இருப்பது. சொன்னதை செய்து கொடுப்பது. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது. பிறர் வேலைகளில் உதவுவது.
பிறருக்கு விட்டுக் கொடுப்பது. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது. சிறிய விசயங்களைக் கூட பாராட்டுவது. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
தற்பெருமை பேசாமல் இருப்பது. தெளிவாகப் பேசுவது. நேர்மையாய் இருப்பது. பிறர் மனதை புண்படுத்தாமல் இருப்பது.

இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள். உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள். பிறர் குறைகளை அலட்சியப்படுத்துங்கள். இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

இத்துடன் கீழ்கண்ட ஆலயங்களுக்கும் சென்று இறைவனிடம் வேண்டுங்கள். அனைத்து தலங்களுக்கும் செல்ல பொருட்செலவு அதிகம் ஆவதால், இயன்றவரை சுற்றுலா செல்வதுபோல் எண்ணிக்கொண்டு, ஒவ்வொரு ஆலயமாக, குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்று வரலாம்.

ஆலந்துறையார் (வடமூலநாதர்) கீழப்பழுவூர் அரியலூர்
வெற்றி வேலாயுதசுவாமி கதித்த மலை ஈரோடு

சீதேவி அம்மன்

காஞ்சிக்கோயில்

ஈரோடு

இலட்சுமி நாராயணர் புதூர் ஈரோடு

பச்சைவாழியம்மன்

எழுமேடு

கடலூர்

காத்தாயி அம்மன்

காட்டுமன்னார் கோவில்

கடலூர்

இளமையாக்கினார் சிதம்பரம் கடலூர்

ஐயனார்

திருநாரையூர்

கடலூர்

கொளஞ்சியப்பர் மணவாளநல்லூர் விருத்தாசலம் கடலூர்
பாண்டவதூதப் பெருமாள் திருப்பாடகம் காஞ்சிபுரம்
தழுவக் குழைந்தீஸ்வரர் (காமாட்சி அம்பாள்) படப்பை காஞ்சிபுரம்
ஏரிகாத்த இராமர் மதுராந்தகம் காஞ்சிபுரம்
சதுர்புஜ கோதண்டராமர் பொன்பதர்கூடம் காஞ்சிபுரம்
மகாதேவர் (இரட்டையப்பன்) சேர்பு பெருவனம் கேரளா
இராஜராஜேஸ்வரர் தளிப்பரம்பா கேரளா
மகாதேவர் திருவைராணிக்குளம் கேரளா
அமணீஸ்வரர் தேவம்பாடி வலசு கோயம்புத்தூர்
விருந்தீஸ்வரர் வடமதுரை கோயம்புத்தூர்
கல்யாண வீரபத்திரர் நாராயணவனம் சித்தூர்
திருநோக்கிய அழகிய நாதர் திருப்பாச்சேத்தி சிவகங்கை
கொடுங்குன்றநாதர் பிரான்மலை சிவகங்கை
பிரம்மபுரீஸ்வரர் (மீனாட்சி சுந்தரேஸ்வரர்) கீழப்பூங்குடி சிவகங்கை
ஏகாம்பரேஸ்வரர் சவுகார்பேட்டை சென்னை
வரதராஜப்பெருமாள் பூந்தமல்லி சென்னை
அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலர் பேளூர் சேலம்
நாகேஸ்வரர் கும்பகோணம் தஞ்சாவூர்
செம்மேனிநாதர் திருக்கானூர் தஞ்சாவூர்
சிவக்கொழுந்தீசர் திருச்சத்தி முற்றம் தஞ்சாவூர்
ஒப்பிலியப்பன் திருநாகேஸ்வரம் தஞ்சாவூர்
நீலகண்டேஸ்வரர் திருநீலக்குடி தஞ்சாவூர்
கம்பகரேசுவரர் திருப்புவனம் தஞ்சாவூர்
பிரம்மஞான புரீஸ்வரர் கீழக்கொருக்கை தஞ்சாவூர்
அழகிய மணவாளர் உறையூர் திருச்சி
பிரம்மபுரீஸ்வரர் திருப்பட்டூர் திருச்சி
கைலாசநாதர் மணக்கால் திருச்சி

நல்லாண்டவர்

மணப்பாறை

திருச்சி

திருக்காமேஸ்வரர் வெள்ளூர் திருச்சி
மகாதேவர் திருவஞ்சிக்குளம் திருச்சூர்
கிருஷ்ணசுவாமி அம்பாசமுத்திரம் திருநெல்வேலி
சங்கரலிங்கசுவாமி கோடரங்குளம் திருநெல்வேலி
சங்கரநாராயணர் சங்கரன்கோவில் திருநெல்வேலி
நாறும்பூநாத சுவாமி திருப்புடைமருதூர் திருநெல்வேலி
சிந்தாமணிநாதர் (அர்த்தநாரீஸ்வரர்) வாசுதேவநல்லூர் திருநெல்வேலி
லட்சுமிநாராயணப்பெருமாள் அம்பாசமுத்திரம் திருநெல்வேலி
திரிபுராந்தகர் கூவம் திருவள்ளூர்
சிவாநந்தீஸ்வரர் திருக்கண்டலம் திருவள்ளூர்
வடாரண்யேஸ்வரர் திருவாலங்காடு திருவள்ளூர்
புஷ்பரதேஸ்வரர் ஞாயிறு திருவள்ளூர்
சூஷ்மபுரீஸ்வரர் திருச்சிறுகுடி, செருகுடி திருவாரூர்
அபிஷ்ட வரதராஜர் பெருமாள் திருத்துறைப்பூண்டி திருவாரூர்
கோதண்டராமர் முடிகொண்டான் திருவாரூர்
வாஞ்சிநாதசுவாமி ஸ்ரீ வாஞ்சியம் திருவாரூர்

சேர்மன் அருணாசல சுவாமி

ஏரல்

தூத்துக்குடி

கற்குவேல் அய்யனார்

காயாமொழி

தூத்துக்குடி

நதிக்கரை முருகன் ஸ்ரீவைகுண்டம் தூத்துக்குடி

கண்ணகி

கூடலூர்

தேனி

சனீஸ்வர பகவான் குச்சனூர் தேனி
நாகநாதசுவாமி கீழ்ப்பெரும்பள்ளம் நாகப்பட்டினம்
உத்வாகநாதர் திருமணஞ்சேரி நாகப்பட்டினம்
இரத்தினகிரீஸ்வரர் திருமருகல் நாகப்பட்டினம்
கோமுக்தீஸ்வரர் திருவாவடுதுறை நாகப்பட்டினம்

பாலசுப்ரமணியசுவாமி

அலவாய்ப்பட்டி

நாமக்கல்

அர்த்தநாரீஸ்வரர் திருச்செங்கோடு நாமக்கல்
நாகேஸ்வரர் பெரியமணலி நாமக்கல்
ரகுநாயகன் (ராமர்) சரயு, அயோத்தி பைசாபாத்
கல்யாண சுந்தரேஸ்வரர் அவனியாபுரம் மதுரை
யோக நரசிம்மர் ஒத்தக்கடை, மதுரை மதுரை

செல்லத்தம்மன், கண்ணகி

சிம்மக்கல், மதுரை

மதுரை

காசி விஸ்வநாதர் (விசாலாட்சி) பழங்காநத்தம் மதுரை மதுரை

காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர்

மதுரை

மதுரை

மும்பாதேவி

மும்பை

மும்பை

நீர் காத்த ஐய்யனார் இராஜபாளையம் விருதுநகர்
அங்காளபரமேசுவரி மேல்மலையனூர் விழுப்புரம்
பள்ளிகொண்ட பெருமாள் பள்ளிகொண்டான் வேலூர்