Category Archives: தோஷ நிவர்த்தி தலங்கள்

அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை

அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை, சிவகங்கை மாவட்டம்.

+91-4577 – 246 170, +91-94431 91300 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 – மதியம் 12 மணி, மாலை 4 – இரவு 8 மணி வரை. மலை மீதுள்ள மங்கைபாகர் சன்னதி மட்டும் மாலையில் 6.30 வரை திறந்திருக்கும்.

மூலவர் கொடுங்குன்றநாதர், விஸ்வநாதர், மங்கைபாகர்
அம்மன் குயிலமுதநாயகி, விசாலாட்சி, தேனாம்பாள்
தல விருட்சம் உறங்காப்புளி
தீர்த்தம் மதுபுஷ்கரணி
ஆகமம் காரணாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் எம்பிரான்மலை, திருக்கொடுங்குன்றம்
ஊர் பிரான்மலை
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் என அனைவரும் கைலாயம் சென்றனர். இதனால் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த சிவன், அகத்தியரை தென்திசையில் பொதிகை மலைக்குச் செல்லும்படி கூறினார்.

அகத்தியருக்கோ, சிவனின் திருமணத்தைக் காண வேண்டுமென்ற ஆசை இருந்தது. தனது எண்ணத்தை சிவனிடம் முறையிட்டார். தென்திசையில் அவருக்கு தனது திருமணக்காட்சி கிடைக்கும் என்றார் சிவன். அப்போது அகத்தியர் சிவனிடம், தான் விரும்பும் இடங்களில் எல்லாம் அவரது திருமணக்கோல காட்சி கிடைக்க வேண்டும் என வேண்டினார். அதன்படி அகத்தியர் பொதிகை மலைக்குச் செல்லும் வழியில், பல இடங்களில் சிவனின் திருமணக்கோலத்தை தரிசித்தார். அவ்வாறு அவர் தரிசித்த தலங்களில் இத்தலமும் ஒன்று.

அருள்மிகு ஏடகநாதசுவாமி திருக்கோயில், திருவேடகம்

அருள்மிகு ஏடகநாதசுவாமி திருக்கோயில், திருவேடகம், மதுரை மாவட்டம்.

+91- 4543-259 311 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஏடகநாதேஸ்வரர்
அம்மன் ஏலவார்குழலி, சுகந்த குந்தளாபிகை
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் பீரம தீர்த்தக்குளம், வைகைநதி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருஏடகம்
ஊர் திருவேடகம்
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

பாண்டியநாட்டை கூன்பாண்டியன் என்னும் மன்னன் ஆட்சிசெய்தபோது திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்திருந்தார். அப்போது,
சமணர்கள் ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு தீயிட்டனர். ஒரு தேசத்தில் அராஜகம் நடக்கிறது என்றால், அதன் பலனை அரசனே அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கையுடைய சம்பந்தர், “அந்தத் தீ அரசனையே சாரட்டும்என்று சொல்லி பாடினார். உடனே, கூன்பாண்டியனை தீயின் வெப்பம் வெப்புநோயாகத் தாக்கியது. அதைத் தாங்க முடியாமல் அவன் தவித்தான். அவன் சார்ந்திருந்த சமணமதத் துறவிகளால் அதைச் சரி செய்ய முடியவில்லை. தன் வெப்பு நோயைத் தீர்க்க, அவன் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்தான். கருணை மனம் கொண்ட ஞானசம்பந்தர் மந்திரமாவது நீறுஎன்ற பதிகம் பாடி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் மடப்பள்ளி சாம்பலை அவனுக்கு பூசியதும், நோய் நீங்கியது. இதையடுத்து மன்னனின் மனம் சைவத்தை நோக்கிச் சென்றது. இதைத் தடுக்க நினைத்த சமணர்கள், சம்பந்தர் செய்தது சித்துவேலை என்றும், தாங்கள் அறிவிக்கும் போட்டியில் சம்பந்தர் வெற்றி பெற்றால், மதுரையை விட்டே போய்விடுவதாகவும் அறிவித்தனர். அதாவது, “அத்திநாத்திஎன்று எழுதிய ஏட்டினை சமணர்களும்,”வாழ்க அந்தணர்என்று எழுதிய பதிக ஏட்டினை ஞானசம்பந்தரும் வைகையாற்றில் விட வேண்டும். எந்த ஏடு வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்படாமல் கரை ஒதுங்குகிறதோ அவரே வென்றவராவர் என முடிவு செய்யப்பட்டது.