Category Archives: திருமால் ஆலயங்கள்

அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், ஆரமுளா (திருவாறன்விளை)

அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், ஆரமுளா (திருவாறன்விளை) – 689 533, பத்தனம்திட்டா மாவட்டம், கேரளா மாநிலம்.

+91- 468 – 221 2170 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 4.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருக்குறளப்பன் (பார்த்தசாரதி)
தாயார் பத்மாசனி
தீர்த்தம் வியாச தீர்த்தம், தேவபுஷ்கரிணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ஆரமுளா
ஊர் திருவாறன் விளை
மாவட்டம் பத்தனம் திட்டா
மாநிலம் கேரளா

பாரதப்போரில் கர்ணனின் தேர்ச்சக்கரம் பூமியினுள் பதிந்து விட்டது. அதனைத்தோள் கொடுத்து தூக்கி நிறுத்தி மீண்டும் போர்புரிய நினைத்தான் கர்ணன். அந்த நேரத்தில் அர்ஜுனன் கர்ணன் மீது அம்பெய்ததால் இறந்து போனான். இவ்வாறு ஆயுதம் ஏதும் இல்லாமல் இருந்த கர்ணனை கொன்றது அர்ஜுனனுக்கு நியாயமாகப் படவில்லை.

அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில், திருவித்துவக்கோடு

அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில், திருவித்துவக்கோடு– 679 303 (திருவிச்சிக்கோடு), பாலக்காடு மாவட்டம், கேரளா மாநிலம்.

+91- 98954 03524 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் உய்யவந்த பெருமாள்(அபயப்ரதன்)
தாயார் வித்துவக்கோட்டு வல்லி (பத்மாஸனி நாச்சியார்)
தீர்த்தம் சக்கரதீர்த்தம்
பழமை 2000-3000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமிற்றக்கோடு
ஊர் திருவித்துவக்கோடு
மாவட்டம் பாலக்காடு
மாநிலம் கேரளா

மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தென்னிந்தியப் பகுதிக்கு வந்தபோது இங்குள்ள நீளா நதிக்கரையோரம் ஒரு அழகான இடத்தை கண்டனர். அங்கிருந்த அழகும், தெய்வீகம் கலந்த அமைதியும் கண்ட அவர்கள் சில காலம் அங்கேயே தங்க முடிவு செய்தனர். அந்த நேரத்தில் தினமும் பூஜை செய்வதற்காகக் கோயில் கட்டிச் சிலைகளை அமைத்தனர். முதலில் அர்ஜுனன் மகாவிஷ்ணுவின் சிலையை அமைத்தான். இதுவே மூலஸ்தானமாக கருதப்படுகிறது.

சுற்றுப்பகுதியில் தர்மர் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனி சன்னதியிலும், நகுல சகாதேவர் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனி சன்னதியிலும், பீமன் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனி சன்னதியிலும் அருள்பாலிக்கிறார்கள். கோயிலில் நுழைந்தவுடன் கணபதியும் தெட்சிணாமூர்த்தியும் வீற்றிருக்கின்றனர். சாஸ்தா, நாகர், பகவதி தேவிக்கு தனித்தனி சன்னதி உள்ளது. பஞ்சபாண்டவர்கள் அனைவரும் தங்களது வன வாசத்தில் பெரும்பாலான நாட்களில் இங்கேயே தங்கிப் பூஜை செய்ததாக கூறப்படுகிறது.

வெகு காலத்திற்கு பின் பாண்டிய மன்னன் ஒருவனால் மிகப்பெரிய சுற்றுமதில் கட்டப்பட்டது.