Category Archives: திருமால் ஆலயங்கள்

அருள்மிகு அபய ஆஞ்சநேயர் (வாலறுந்த ஆஞ்சநேயர்) திருக்கோயில், ராமேஸ்வரம்

அருள்மிகு அபய ஆஞ்சநேயர் (வாலறுந்த ஆஞ்சநேயர்) திருக்கோயில், ராமேஸ்வரம் – 623 526. ராமநாதபுரம் மாவட்டம்.

+91- 4573 – 221 093, 94432 05289 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

 

மூலவர் அபய ஆஞ்சநேயர்
தல விருட்சம் அத்திமரம்
தீர்த்தம் அனுமன் தீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் இராமேஸ்வரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

இலங்கை சென்று இராவணனை வென்று, சீதையை மீட்டு வந்த இராமருக்குத் தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்க பூஜை செய்ய எண்ணினார். அவரது பூஜைக்காக இலிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயர், கைலாயம் சென்றார். அவ்வேளையில் சீதாதேவி, மணலில் ஒரு இலிங்கம் பிடித்து வைத்தாள். ஆஞ்சநேயர் வரத் தாமதமாகவே, இராமர் மணல் இலிங்கத்தைப் பூஜை செய்து வழிபட்டார். அதன்பின்பு வந்த ஆஞ்சநேயர், நடந்ததையறிந்து கோபம் கொண்டார். வாலால் இலிங்கத்தை சுற்றி மணல் லிங்கத்தை பெயர்க்க முயன்றார். ஆனால் வால் அறுந்ததே தவிர, இலிங்கத்தை அசைக்கக்கூட முடியவில்லை. தவறை உணர்ந்த ஆஞ்சநேயர், செய்த குற்றம் நீங்க தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டார். இந்த ஆஞ்சநேயர், இத்தலத்தில் வாலறுந்த கோலத்தில் மூலவராக காட்சி தருகிறார்.

 

அருள்மிகு ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில், கும்பகோணம்

அருள்மிகு ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில், கும்பகோணம்-612001 தஞ்சாவூர் மாவட்டம்

+91- 94422 26413 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

மூலவர் ஆதிவராகப்பெருமாள்
உற்சவர் ஆதிவராகர்
தாயார் அம்புஜவல்லி
தீர்த்தம் வராகதீர்த்தம்
ஆகமம்/பூசை பாஞ்சராத்ரம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

 

ஒருசமயம் இரண்யாட்சன் என்னும் அசுரன், பூமியை பாதாள உலகிற்குள் எடுத்துச்சென்று மறைத்து வைத்தான். தன்னை மீட்கும்படி, பூமாதேவி திருமாலிடம் வேண்டினாள். திருமால் வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் சென்று பூமியை மீட்டு வந்தார். இவரே இத்தலத்தில் வராகமூர்த்தியாக அருள்புரிகிறார்.

கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா உண்டாவதற்கு முன்பாகவே இவர், இத்தலத்தில் எழுந்தருளியிருந்தார். எனவே இவரை,”ஆதிவராகர்என்று அழைக்கின்றனர். இவரே இங்குள்ள பெருமாள்களுக்கெல்லாம் முந்தியவர். மாசிமகத்திருவிழாவின்போது, கும்பகோணத்திலுள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, வரதராஜர், ராஜகோபாலர் மற்றும் இத்தலத்து மூர்த்தி ஆகிய ஐவரும் காவிரிக்கரைக்கு தீர்த்த நீராட எழுந்தருளுகின்றனர்.