Category Archives: பாடல் பெறாதவை

பொதுஆவுடையார் கோவில், பரக்கலக்கோட்டை

அருள்மிகு பொதுஆவுடையார் கோவில், பரக்கலக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 4373 – 283 295, 248 781

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பொதுஆவுடையார் (மத்தியபுரீஸ்வரர்)
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் பரக்கலக்கோட்டை
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

வான் கோபர், மகா கோபர் என்ற இரு முனிவர்களுக்கு, “இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?” என்று சந்தேகம் வந்தது. தங்களுக்குத் தீர்ப்பு சொல்லும்படி இருவரும் சிதம்பரம் சென்று நடராஜரிடம் வேண்டினர். அவர் இத்தலத்தில் காத்திருக்கும்படி சொல்லி, தான் அவர்களுக்கு தீர்ப்பு வழங்குவதாக கூறினார். அதன்படி இத்தலம் வந்த இரு முனிவர்களும் புளிய மரத்தின் கீழ் அமர்ந்தனர். நடராஜர், ஒரு கார்த்திகை மாத, திங்கட்கிழமையன்று சிதம்பரத்தில் பூஜைகள் முடிந்த பிறகு இங்கு வந்து, ஒரு வெள்ளால மரத்தின் கீழ் நின்று இருவருக்கும் பொதுவாக, “இல்லறமாயினும், துறவறமாயினும் நல்லறமாக இருந்தால் இரண்டுமே சிறப்புஎன்று பொதுவாக தீர்ப்புக் கூறிவிட்டு, பின்பு வெள்ளால மரத்திலேயே ஐக்கியமானார். தீர்ப்பு சொல்வற்காக வந்த சிவன் என்பதால் இவர் பொது ஆவுடையார்என்றும், “மத்தியபுரீஸ்வரர்என்றும் பெயர் பெற்றார்.

ரூபமாகவும் (வடிவம்), அரூபமாகவும் (வடிவம் இல்லாமல்), அருவுருவமாகவும் (இலிங்கம்) வழிபடப்பெறும் சிவன், இத்தலத்தில் வெள்ளால மரத்தின் வடிவில் அருள் செய்கிறார்.

செண்பகவல்லி உடனுறை பூவனாதர் திருக்‌கோயில், கோவில்பட்டி

அருள்மிகு செண்பகவல்லி உடனுறை பூவனாதர் திருக்‌கோயில், கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.

+91 4632 2520248

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பூவனாதர்
அம்மன் செண்பகவல்லி
தல விருட்சம் களா மரம்
தீர்த்தம் அத்தியர்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கோவிற்புரி (மங்கைநகர்)
ஊர் கோவில்பட்டி
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

ஈசன் திருமணத்தின் போது வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்த நிலையில், உலகைச் சமன்செய்யும் பொருட்டு, இறைவன் ஆணைப்படி, அகத்தியர் பொதிகை நோக்கிப் வந்தார். வழியில் எதிர்த்த அரக்கர்களான வாதாபி மற்றும் விலவனன் ஆகிய‌ேரை வதைத்தனால் உண்டான பிரம்மகத்தி தோசம் நீங்கப்பெற்றார்.

பொன்ம‌லை முனிவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, அகத்தியர் தீர்த்தத்தை ஏற்படுத்திவிட்டு, தன் பயணத்தைத் ‌தொடர்ந்தார். வெள்ளிமலை வாமனன், நந்திதேவரின் சாபத்தால்  வெம்பக்‌கோட்டை ‌வேந்தனாகப் பிறந்து செண்பக மன்னன் எனப் பெயர் பெற்றான். இறைவன் ஆணைப்படி கோவிற்புரியையும் (கோவில்பட்டியையும்), அதில் பூவனாதருக்‌கு கோவிலும் அமைத்து சாபநிவர்த்தி பெற்றான். செண்பக மன்னனால் தோற்றுவிக்கப்பட்ட இத்திருக்கோயிலில் அம்பாள் செண்பகவல்லி என்று பெயர் பெற்றாள். உள்ளமுடையான் (புலவர் கி.பி.1029க்கு முற்பட்டவர்) என்பவரால் புதுப்பிக்கப்பட்டது.

மது‌‌ரையில் எப்படியோ அதுபோல் இங்கும் அம்பாளுக்குத்தான் முக்கியத்துவம். இந்த சந்நிதி நு‌ழைவாயிலில் பிரம்மாண்டமான துவாரபாலகிகள் உள்ளனர். மூல விக்ரகம் எப்படியுள்ள‌தோ அப்படியேதான் அலங்காரம் செய்வது எல்லா கோயில்களிலும் உள்ள வழக்கம். அருள் தரும் அம்பிகை செண்பகவல்லி அம்பாள் 7 ஆடி உயரத்தில் எழில் ‌‌கொஞ்சும் தோற்றத்துடன் காட்சி தருகிறார். இங்கு மட்டும் நிற்கும் அம்பாளை, அமர்ந்துள்ளது போல அலங்காரம் செய்கிறார்கள்.