Category Archives: பாடல் பெறாதவை

சங்கரலிங்கசுவாமி திருக்கோயில், கோடரங்குளம்

அருள்மிகு சங்கரலிங்கசுவாமி திருக்கோயில், கோடரங்குளம், திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4634 – 223 821, 93602 19237

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சங்கரலிங்கசுவாமி
அம்மன் கோமதி அம்பாள்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் கோடரங்குளம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வசித்த சிவபக்தர் உஞ்சவிருத்தி (தானம்) பெற்று வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவர் காகத்திற்கு சாதம் வைத்தபோது அவை சாதத்தை வனத்திற்குள் கொண்டு சென்றதை கண்டு பின்தொடர்ந்தார். காகம் ஓரிடத்தில் சாதம் வைத்து, மலர் தூவி வழிபட்டதைக் கண்டு தோண்டியபோது சுயம்பு இலிங்கம் இருந்ததைக் கண்டார். அதற்குப் பூஜை செய்து வழிபட்டார். ஒருசமயம் அவர் ஊருக்குள் வராமல் போகவே, மக்கள் வனத்தினுள் சென்று பார்த்தனர். அங்கு சிவன் குடியிருப்பதாக கூறிவிட்டு, அவர், இலிங்கத்தில் ஐக்கியமானார். அதுவே சங்கரலிங்கம் ஆனது. பின் மக்கள் இவ்விடத்தில் கோயில் எழுப்பினர்.

சங்கமேஸ்வரர் திருக்கோயில் , கோட்டைமேடு

அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் , கோட்டைமேடு, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 422- 239 3677

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சங்கமேஸ்வரர்
அம்மன் அகிலாண்டேஸ்வரி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கோட்டைமேடு
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

சிவபக்தனான கரிகால் சோழ மன்னன் தனக்குப் பின் நாட்டை ஆள, புத்திரன் இன்றி தவித்தான். தனக்கு ஏற்பட்ட குறை நீங்கவேண்டி, சிவனிடம் மனம் உருகி வழிபாடு செய்து முறையிட்டான். அவ்வாறு அவன் வழிபட்டு வர, ஓர்நாள் இரவில் தன் கனவில் சிவன் அற்புதங்கள் புரிந்த சில தலங்களில் ஆலயங்கள் எழுப்புவது போல கனவு கண்டான். இது குறித்தும், வாரிசு இல்லாமை நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் குறித்தும் அவன் தனது குருவிடமும், ஆன்றோர்களிடமும் ஆலோசனை கேட்டான். அவர்களது ஆலோசனையின் படி, சிவன் அற்புதங்கள் புரிந்த இடங்களில் எல்லாம் கோயில்களை எழுப்பி வணங்கினான். அவன் கட்டிய 36 சிவத்தலங்களில் இத்தலம் 31வது தலமாக விளங்குகிறது.