மனநலம் பாதிப்பு நீங்க

மனநலம் பாதிப்பு நீங்க

குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக இருப்பதாலும் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக, மன நலம் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படுபவர்கள் மற்ற யாருக்கும் எந்தக் கஷ்டத்தையும் கொடுக்க நினைப்பதில்லை. தங்கள் சக்திக்கு ஏற்ப மற்றவர்களுக்கு உதவவே விரும்புகிறார்கள். மற்றவர்களைச் சந்தோஷப் படுத்துவதற்காக எவ்வளவு ஆபத்தான செயல்களையும் தங்களை அறியாது செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஆத்திரம், ஆவேசத்துக்கு உள்ளாவதில்லை. சில நேரங்களில் மூர்க்கத்தனமாகத் தாக்குவதும் உண்டு. குழந்தைகளை அவர்கள் அன்புடன் நேசிக்கிறார்கள். தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதையே, அவர்களால் உணரமுடியாது. அவர்களுக்குத் தூக்கம் வருவது அரிது.

இங்கிலாந்தின் எச்செக்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி ஜூல்ஸ் ப்ரெட்டி (University of Essex researcher Jules Pretty) நடத்திய ஆய்வின் முடிபு: ஒரு மனிதனின் சராசரி வாழ்க்கையில், ஒரு நாளில் குறைந்தது 5 நிமிடங்கள், நகரிலுள்ள ஒரு பூங்காவில், தங்கள் வீட்டு தோட்டத்தில், தண்ணீருள்ள ஒரு பசுமையான இடத்தில் என ஏதோ ஒரு இடத்தில், விளையாடியோ, நடந்தோ, உட்கார்ந்து அளவளாவி இப்படி ஏதாவது ஒரு விதத்தில் கழித்தாலே சீரான ஒரு மன நிலையை ஒரு மனிதன் எளிதில் பெற்றுவிட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட, குறித்த நேரத்தில் உணவு உண்ண மாட்டார்கள். தொடர்ந்து சோகமாக இருப்பதால் உடலில் வேதியல் மாற்றங்கள் ஏற்பட்டு நோய் வருகிறது. இந்தவிதமான நோய்களை Psycho-somatic Disorder என்று அழைக்கின்றனர்.

மனநோய் எதனால் ஏற்படுகிறது?

நடந்துவிட்ட ஒரு நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டே இருப்பது. வேறு எதையும் நினைக்காமல் இருப்பது. இன்னும் சொல்லப் போனால் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பது. சிலர் காலப்போக்கில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்த நிலைக்கு முக்கிய காரணம் கவலை. நாம் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதால்தான் கவலை ஏற்படுகின்றது. மன அழுத்தம், சோர்வு, பாதிப்பின் அறிகுறிகள்.

இவைகளை மாற்ற:

மரங்கள் அடர்ந்த சோலையில் சில நிமிடங்கள் நடக்கலாம். அல்லது ஓய்வறைக்கு சென்று சிறிது தண்ணீர் அருந்தலாம். இதனால் மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. இயன்றால் மனதிற்குப் பிடித்த இசை கேட்கலாம். இடியே விழுந்தாலும் பதற்றம் வேண்டாம். ஏனென்றால் பதற்றத்தோடு எழுபவன் தோல்வியோடு உட்காருவான் என்ற பழமொழியே உள்ளது. உங்களுக்கு டென்சன் ஏற்படுத்திய சம்பவத்தை கொஞ்சம் அசடுவழியும் புன்னகையுடன் சமாளியுங்கள். எதனால் இது நேர்ந்தது என்பதை கொஞ்சம் நிதானமாக யோசித்தாலே பிரச்சினையின் தீர்வு தெரிந்துவிடும்.

மனநலம் பாதிப்பு அடைந்தவர்களுக்கு மருத்துவ மனைகளில் தூக்க மருந்துதான் கொடுக்கிறார்களாம்.

மனநலம் பாதிப்பு என்பது பாதிக்கப்படவரின் பூர்வஜன்ம வினை எனவும், இதில் பெற்றோரின் பாவமும் சேர்ந்துள்ளது எனவும், பரிகாரம் செய்தால் சரியாகிவிடுமென்றும் போலி சாமியார்கள் பணம் பறிக்கிறார்கள். எச்சரிக்கை.

சாட்சிக்காரன் கால்களில் விழுவதைவிட சண்டைக்கரனின் கால்களில் விழுங்கள். கீழ்கண்ட ஆலயங்களிலுள்ள இறைவனை நெஞ்சுருகி வேண்டுங்கள். நம் கையில் எதுவுமில்லை எனும் நிலையில் இறைவனே கதி.

சுவாமிநாத சுவாமி

குண்டுக்கரை

இராமநாதபுரம்

வேதகிரீஸ்வரர் திருக்கழுகுன்றம் காஞ்சிபுரம்
நீர்வண்ணப்

பெருமாள்

திருநீர்மலை காஞ்சிபுரம்
பிரசன்ன வெங்கடாஜலபதி குணசீலம் திருச்சி
கிருபாசமுத்திரப்

பெருமாள்

திருச்சிறுபுலியூர் திருவாரூர்
சத்திய கிரீஸ்வரர் திருமயம் புதுக்கோட்டை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *