புதன் தோஷம் நீங்க

புதன் தோஷம் நீங்க

ஜோதிடத்தில் புதனை வித்தைக்காரர் என்று கூறுவர். மூளையின் செயல்திறனை புதன் தசை விரைவுபடுத்தும். மற்றவர்கள் கால்குலேட்டர் உதவியுடன் போடும் கணக்குகளைக்கூட புதன் ஆதிக்கம் பெற்றவர்கள் மனதிலேயே போட்டு விடை கூறுவர். ஒருவர் ஜாதகத்தில் புதன் நன்றாக அமைந்து, புதன் தசை நடந்தால் அவருக்கு சோர்வு என்பதே தெரியாது. குறைந்தளவு உணவு உட்கொண்டாலும் சோர்வின்றி உற்சாகமாக பணியாற்றுவர். உடலில் நரம்பு இவன். புதன் சரியில்லை என்றால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டவனாக இருப்பான். குறிப்பாக ஒற்றைத் தலைவலி, கழுத்து நரம்பு வலி ஆகியவை வரலாம். அதற்கும் புதன் சரியில்லாததே காரணம்.

முக்கியமாக ஆண்மைக்குறைவு, கணவன் மனைவி உறவில் ஆண்குறி விரைப்புத்தன்மை இன்மை, அலித்தன்மை ஆகியவை உருவாகலாம். அதனால் கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டு விவகாரத்து வரை செல்லலாம். குடும்பங்கள் பிரிகின்றன. இதற்கு முக்கிய காரணம் புதன் பகவான் சரியில்லாததே காரணம். மேலும் ஹோமோசெக்ஸ் என்று சொல்லக்கூடிய ஆணும், ஆணும் உடலுறவும், பெண்ணும், பெண்ணும் உடலுறவும் பாலியியல் வக்கிரங்கள், தோல் நோய், எடுப்பில்லாத தோற்றம், முகம் பொலிவு இல்லாத நிலை ஆகியவற்றுக்கும் புதன் பகவானே காரணம்.

ஒரு பொருளை வைத்த இடத்தை விட்டு வேறு இடத்தில் தேடல், எந்த ஒரு செயலையும் திட்டமிடாமல் செய்வது, சபை அறியாமல் பேசுவது, சுவையான உணவு கிடைக்காமல் போவது போன்றவற்றிற்கு புதன்பகவான் சரியில்லாததே காரணம்.

ஆடை வகைகளில் பச்சை நிற ஆடை அணிவதாலும் இரத்தினங்களில் மரகத கல் அணிவதாலும் பித்தளை பொருட்களை உபயோகப்படுத்துவதாலும் உணவு வகைளில் உவர்ப்பு சுவைகளை விரும்பி உண்ணுவதாலும் மாதுளை, போரிச்சை, திராட்சை, முந்திரி, கேப்பைக் கூழ் செய்து சாப்பிடுவதாலும் பாசிப்பயறு வகைகளை உண்பதாலும் புதனின் ஆதிக்கம் பெறலாம்என்றும், “புதன் தோஷம் நீங்க வங்யங்நசிமசி என்று மந்திரம் ஜெபித்தால் புதன் தோஷம் நீங்கும்என்றும் சொல்கின்றனர் சோதிடர்கள்.

பரிகாரம் செய்யவேண்டுமெனப் பணம் செலவு செய்யாதீர்கள். அன்னதானம் செய்யுங்கள். உடை தானம் செய்யுங்கள்.

தோஷங்களுக்குப் பரிகாரங்கள் செய்தால் தோஷங்கள் நீங்குமோ இல்லையோ தெரியாது. பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். ஆனால் கீழ்கண்ட ஆலயங்களுக்குப் பிரதோஷத்தில் சென்று இறைவனை மனமுருக வேண்டிக்கொண்டாலே பலன் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பூமிபாலகர் திருப்புளியங்குடி தூத்துக்குடி
அலங்கார செல்வி அம்மன் வசவப்புரம் தூத்துக்குடி
சுவேதாரண்யேஸ்வரர் திருவெண்காடு நாகப்பட்டினம்
சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) மதுரை மதுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *