நரம்புத்தளர்ச்சி நோய் நீங்க

நரம்புத்தளர்ச்சி நோய் நீங்க

சாதாரண மனித வாழ்க்கையில் பல்வேறு வகையான அனுபவங்களையும், அவை சார்ந்த உடல் இயக்கங்களையும் நேரடியாக கண்ட நாம், ஒரு வித்தியாசமான உடல் மற்றும் செயல் இயக்கங்களை பொதுவாக நரம்புத்தளர்ச்சி (ஹிஸ்டீரியா) நோயாளிகளிடம் காண முடியும். அறிவியல் ஆய்வுகளின்படி பாலுணர்வில் ஏற்படும் சிக்கல்களும் அவை சார்ந்த அச்சங்கள், ஏமாற்றங்களுமே இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன. இத்தகைய நோயாளிகள் பெரும்பாலோர் வெளி வாழ்க்கையில் அதிக திறமைசாலிகளாகத் தங்களை காட்டிக் கொள்வர். ஆனால், நிஜவாழ்க்கையில் கோழைகளாகவோ அல்லது அச்சம் நிறைந்தவர்களாகவோ காணப்படுவர்.

இளம் வயது போதனைகளும் அதற்குள் ஊறிப்போன எண்ணங்களும் இடைவிடாமல் தனக்குள் மையங்கொண்டு விடுவதால், தான் செய்வதெல்லாம் ஏதோ தவறானது என்றோ அல்லது தன்னால் முடியாது என்றோ ஓர் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடுவதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

சிறுவயதில் தன் வாழ்க்கைப்பாதையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், வீடுகளில் ஏற்படும் சண்டைகள், பெற்றோர்கள், உடன் பிறந்தார் ஒற்றுமையின்மை போன்ற பல்வேறு காரணங்கள் ஆழ் மனதை பாதித்துவிடுவதும் இந்நோய்க்கான காரணமாகும்.

கற்பனை உலகில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் இத்தகைய நோயாளிகள் தனக்கு சாதகமான சூழ்நிலை அமையாத பட்சத்தில் சிறு பிள்ளைத்தனமாக தாழ்ச்சியடைந்து விடுவதாலும், தன்னையுமறியாமல் குழப்பமடைவதாலும் பல்வேறு பரபரப்புகளும் படபடப்பும் ஏற்பட்டு சதா அச்சத்துடனும் அசதியுடனும் காணப்படுவர், சிலருக்கு மயக்கமும் தோன்றிவிடும்.

திருமணமான புதுப்பெண்கள் பலருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்படும். பல்வேறு கற்பனைகளில் ஆழ்மனதை நிறைத்து அடியெடுத்து வைக்கும் புதுப்பெண்ணின் அடிமனதில் அதற்கு எதிரான அச்சங்களும் கற்பனைகளும் கொஞ்சம் கொஞ்சமாக தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதால் இத்தகைய நோய்கள் தோன்றுகின்றன.

நோயின் அறிகுறிகள்

  • 1. உடலியக்க மாற்றங்கள் (Conversion Hysteria)
  • 2. வலிப்புகள் (Convulsion)
  • 3. நினைவு மாற்றங்கள் (Dissociative changes)
  • 4. இரட்டை வாழ்க்கை (Dual personality)
  • 5. பன்முக வாழ்க்கை (Multiple personality)
  • நன்றி விக்கிபீடியா

இதை மருத்துவ ரீதியாக சரி செய்ய முடியும். இதுவொரு குறைபாடுதான். நோய் அல்ல. ஆகவே, இதனை எளிய மூலிகை மருந்துகள் மூலம் சரி செய்ய முடியும். நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். முதலில் நரம்புத் தளர்ச்சியினால் தனது வாழ்வே இருளாகிவிட்டது என்று தவறாகப் புலம்பக் கூடாது. குடிப்பழக்கம் இருந்தால் அதனைக் கைவிட வேண்டும். இவர்கள் வெந்நீர் குளியல் செய்யலாம். ஒரே வேலை வேலை என்று இருக்காமல் குடும்பத்தாருடன் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். மனதை வேலைகளில் இருந்து விலக்கி வைத்து குடும்பம், மனைவி, மக்கள் என்று ஈடுபடுத்தவும் வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் மனதளவிலான நரம்புத்தளர்ச்சி நீங்கி புத்துணர்வு பெறலாம்.

வசம்பை தூளாக்கி சிறிதளவு வாயில் போட்டு சுவைத்து வெந்நீர் குடிக்கலாம். சூடான சாதத்தில் அரைக்கீரையை துவரம் பருப்புடன் நெய் சேர்த்து சாப்பிடலாம்.

தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்தமடையும். மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும்.

அத்துடன் சேலத்தில் உள்ள அருள்மிகு அழகிரிநாதர் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டுவர நோயின் தாக்கம் சிறிது சிறிதாகக் குறைகிறது என்கின்றனர் சேலம்வாசிகள்.

2 Responses to நரம்புத்தளர்ச்சி நோய் நீங்க

  1. prakasam says:

    this information very useful for me.i feel this information.thank you very much.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *