சூரிய தோஷம் நீங்க
சூரிய தோஷம் நீங்க
சிவ ஆலயங்களில் சூரிய பகவான் தனித்தும், நவக்கிரகங்களுக்கு நடுவில் வீற்றிருப்பதை நாம் காண முடியும். சூரியனைச் சிவரூபமாக கொண்டு வழிபட்டு வருகின்றோம். சிவாலயங்களில் சிவசூரியனுக்கு தனிச்சந்நிதி உள்ளது. சிவசூரியனுக்கு ஒரு முகம். இரு கைகளில் வெண்தாமரையை வைத்திருக்கின்றார். ஏனைய இரு கரங்களும், அபய, வரத ஹஸ்தங்களாக உள்ளன. சூரியன் ஏழு குதிரைகளைப் பூட்டிய குதிரை வண்டியில் பயணம் செய்பவர் என்பர். அவர் மாதுளம் பழ நிறத்தவர்.
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது.
சூரிய தோஷம் உடையோர் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து காலையிலேயே வீட்டில் இருந்தவாறு சிவப்புப் பூவும் நீரும் கைகளில் ஏந்தி
“சூரிய பகவானே எனது சூரிய தோஷத்தை போக்கியருளும்” என வேண்டி, பூவையும், நீரையும் சூரியனைப் பார்த்தவாறு மரத்தடியில் போட்டு வணங்கவும். 16, 36, 108 தடவைகள் இதனைச் செய்யலாம். கோவிலில் சூரியனுக்கு அபிஷேகம் செய்யலாம். சர்க்கரைப் பொங்கல் நைவேதிக்கலாம். கோதுமை தானம் கொடுக்கலாம். சிவப்புப்பட்டு, சிவப்புப் பூமாலை அணியலாம். சிவப்புப் பூவால் அர்ச்சித்து வழிபடலாம். தினமும் சூரிய கவசம் படிப்பது மிக்க பலனைத் தரும்.
சூரிய வழிபாட்டால் தேக ஆரோக்கியம், உத்தியோகம், உத்தியோக உயர்வு, நன்மதிப்பு முதலானவற்றை நாம் பெறலாம்.
அத்துடன் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும் என சோதிடர்கள் நம்புகின்றனர்.
சூரியனார் | சூரியனார்கோயில் | தஞ்சாவூர் |
வைகுண்டநாதர் | ஸ்ரீ வைகுண்டம் | தூத்துக்குடி |
Leave a Reply