Tag Archives: மதுரை

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில், மதுரை

அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில், மேலமாசி வீதி, மதுரை, மதுரை மாவட்டம்.

+91- 452- 6522 950, +91- 94434 55311,+91-93451 55311,+91- 92446 55311

காலை 6.15 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு மணி 9.30 வரை திறந்திருக்கும்.

மூலவர் இம்மையிலும் நன்மை தருவார்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் மத்தியபுரி நாயகி
தல விருட்சம் தசதள வில்வம்
தீர்த்தம் ஸ்ரீபுஷ்கரணி
ஆகமம் காரணாகமம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மதுரையம்பதி
ஊர் மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

மதுரையை ஆண்ட மலையத்துவஜனின் மகளாகப் பிறந்த மீனாட்சியை, சிவபெருமான் மணந்த கொண்டார். பின்னர் மதுரையில் மன்னராக பொறுப்பேற்றார். எச்செயலையும் செய்யும் முன்பு சிவலிங்க பூஜை செய்ய வேண்டும் என்பது ஐதீகம். எனவே ஒரு இலிங்கத்தை ஸ்தாபித்து, அதற்கு பூஜித்தபின்பு பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த வரலாற்றின் அடிப்படையில் இங்கு சிவன், இலிங்கத்தை பூஜிக்கும் அமைப்பில் காட்சி தருகிறார்.

அருள்மிகு கூடலழகர் திருக்கோயில், மதுரை

அருள்மிகு கூடலழகர் திருக்கோயில், மதுரை – 625 001, மதுரை மாவட்டம்.

+91- 98940 63660 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கூடலழகர்
உற்சவர் வியூகசுந்தரராஜர்
தாயார் மதுரவல்லி (வகுளவல்லி, வர குணவல்லி, மரகதவல்லி)
தல விருட்சம் கதலி
தீர்த்தம் ஹேமபுஷ்கரிணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கூடல்
ஊர் மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

பிரம்மாவின் புத்திரரான சனத்குமாரருக்கு, பெருமாளை அர்ச்சாவதார(மனித ரூபம்) வடிவில் தரிசிக்க வேண்டுமென ஆசை எழுந்தது. தன் விருப்பம் நிறைவேற, இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் அவருக்குக் காட்சி தந்தார். பின்பு சனத்குமாரர், தேவசிற்பி விஸ்வகர்மாவை வரவழைத்து, தான் கண்ட காட்சியை அப்படியே வடிவமைக்கச் செய்தார். அதை மிக அழகிய அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்டைசெய்தார். அவரே கூடலழகர் எனப்பட்டார். இத்தலம் கிருதயுகத்திலேயே அமைக்கப்பட்டு விட்டது. கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கு யுகங்களிலும் சிறப்புற்று விளங்குகிறது. எனவே இத்தல பெருமாள், “யுகம் கண்ட பெருமாள்எனப்படுகிறார்.

வெற்றி தரும் பெருமாள் : இங்குள்ள உற்சவர் வியூக சுந்தர்ராஜன்என்று அழைக்கப்படுகிறார். எந்த ஒரு செயலையும் செய்யும்முன்பு, சரியாக திட்டமிட்டு வியூகம் அமைத்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். இவ்வாறு எதிலும் வெற்றி தரும் அழகராக இவர் திகழ்வதால், இப்பெயரில் அழைக்கப்படுகிறார். இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் போர் புரியச் செல்லும் முன்பு, இவரை வேண்டி வெற்றிக்காக வியூகம் அமைத்துக் கொண்டனர். இதனாலும் இப்பெயர் ஏற்பட்டதாகவும் சொல்வர்.