Tag Archives: திருநாங்கூர்

அருள்மிகு தெய்வநாயகப்பெருமாள் திருக்கோயில், திருநாங்கூர்

அருள்மிகு தெய்வநாயகப்பெருமாள் திருக்கோயில், திருநாங்கூர்-609 106 நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364-266 542 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தெய்வநாயகப்பெருமாள்
உற்சவர் மாதவப்பெருமாள்
தாயார் கடல் மகள் நாச்சியார்
தீர்த்தம் சோபன, தேவசபா புஷ்கரிணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கீழச்சாலை
ஊர் திருத்தேவனார்த்தொகை, (திருநாங்கூர்)
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

துர்வாச முனிவர், வைகுண்டத்தில் தனக்கு கிடைத்த பெருமாளின் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். அவன் அதை ஐராவத யானையின் மீது தூக்கி எறிந்தான். இதனால் ஆத்திரமடைந்த துர்வாசர், “பெருமாள் மார்பில் வாசம் செய்பவள் மகாலட்சுமி. அங்கிருந்து கிடைத்த மாலையை அவமதித்து விட்டாய். எனவே லட்சுமியாகிய செல்வம் உன்னை விட்டு வைகுண்டம் செல்லட்டும். உனக்கு தரித்திரம் பிடிக்கட்டும்என்று சாபம் கொடுத்தார்.

அதிர்ந்து போனான் இந்திரன். ஐராவதம் மறைந்தது. மாலையை பணிவாக ஏற்றதால் அது வைகுண்டம் சென்றது. துர்வாசரிடம் மன்னிப்பு கேட்டான் இந்திரன். துர்வாசரும், “இந்திரனே! இறைவனது பிரசாதமும், இறைவனும் ஒன்று தான். இறைவனது பிரசாதப்பொருள்களை அவமதிக்ககூடாது. இதை உனது குரு உனக்கு சொல்லி தரவில்லையா? நீ அவரிடமே சாப விமோசனம் கேள்என கூறிச் சென்று விட்டார்.

அருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோயில், திருநாங்கூர்

அருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோயில், திருநாங்கூர்– 609 106, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364-256221 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 9 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் புருஷோத்தமர்
தாயார் புருஷோத்தம நாயகி
தல விருட்சம் பலா, வாழை மரம்
தீர்த்தம் திருப்பாற்கடல் தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவன் புருஷோத்தமம்
ஊர் சீர்காழிதிருநாங்கூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

சைவ சமயத்தில் ஞான சம்பந்தருக்கு ஞானப்பாலை பார்வதி ஒரு கிண்ணத்தில் வைத்து ஊட்டி விட்டாள். அதே போல வைணவத்தில், மகாவிஷ்ணு பசியால் அழும் குழந்தைக்கு ஒரு பாற்கடலையே உருவாக்கி, பால் அமுது தந்திருக்கிறார். அவர் தான் சீர்காழி வன் புருஷோத்தமர். இங்கு பெருமாளை இராமனாகக் கருதி வழிபடுகின்றனர். வியாக்ரபாதர் என்ற மகரிஷி, தன் குழந்தை உபமன்யுவை அழைத்துக்கொண்டு இந்த பெருமாள் கோயிலில் உள்ள நந்தவனத்தில் பூப்பறித்து இறைவனுக்கு சார்த்த வந்தார். குழந்தையை நந்தவனத்தின் வாசலில் அமர செய்து விட்டு பூப்பறிக்கச் செல்கிறார். குழந்தை தந்தையை காணாததாலும், பசியாலும் அழுதது. குழந்தையின் அழுகுரல் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமனுக்கு கேட்டது. உடனே இத்தலத்தில் ஒரு பாற்கடலையே உண்டு பண்ணி குழந்தைக்கு ஊட்டினார். அழும் குழந்தைக்கு தாயார் புருஷோத்தம நாயகி பால் அமுது படைத்தாள்.

108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. இத்தலப் பெருமாளை திருமங்கையாழ்வார் அயோத்தி இராமராக மங்களாசாசனம் செய்துள்ளார்.

இத்தலப் பெருமாளைப் பற்றி பாடுபவர் மட்டுமல்லாது, கேட்பவருக்கும் எல்லா நலனும் கிடைக்கும் என கூறியுள்ளார்.