Category Archives: திருவாரூர்

அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில், கூத்தனூர்

அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில், கூத்தனூர்– 609 503. திருவாரூர் மாவட்டம்.

+91-4366-238445,+04366- 239909, 9444635427, 9976215220 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சரஸ்வதி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்பு
ஊர் கூத்தனூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு

பிரம்மனும், சரஸ்வதியும் சத்தியலோகத்தில் வாழ்ந்து தேவர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். அப்போது கலைவாணி, “இந்த சத்தியலோகமே, கல்விக்கரசியான தன்னால் தான் பெருமையடைகிறது,” என்றாள். பிரம்மாவோ, தான் படைக்கும் தொழிலைச் செய்வதால்தான் பெருமையடைகிறது என்றும், தனது துணைவி என்பதாலேயே சரஸ்வதி பெருமையடைகிறாள் என்றும் சொன்னார்.

இருவருக்கும் இதுகுறித்து வாதம் ஏற்பட்டது. இது பெரும் பிரச்னையாகி, பிரம்மனும் சரஸ்வதியும் ஒருவரையொருவர் சபித்துக் கொண்டனர். இதனால் இருவரும் பூலோகத்தில் சோழநாட்டில் புண்ணியகீர்த்தி, சோபனை என்னும் அந்தண தம்பதியினருக்கு, பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் அவதரித்தனர். இவர்களுக்கு திருமண வயது வந்ததும் பெற்றோர்கள் இவர்களுக்கேற்ற வரன் தேடினர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது.

சகோதர நிலையிலுள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்குமே என அஞ்சினர். தம்பதிகள் ஒற்றுமையாக இல்லாவிட்டால், இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டவே இப்படி ஒரு நாடகத்தை உலகத்தின் முன்னால் அவர்கள் நடத்திக்காட்டினர்.

பெற்றோருக்கு இவ்விஷயம் தெரியவந்தது. அவர்களை சமாதானம் செய்யும் விதத்தில், சிவனை நினைத்து உள்ளம் உருகிப் பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவள் முன்தோன்றி,”இப்பிறவியில் சகோதரர்களாக அவதரித்த நீங்கள், திருமணம் செய்வதென்பது இயலாத காரியம். எனவே, நீ மட்டும் இங்கே தனியாகக் கோயில் கொண்டிரு. இங்கு வரும் பக்தர்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்குஎன்று அருள்பாலித்தார். அதன்படி கன்னி சரஸ்வதியாக இக்கோயிலில் இவள் அருள்பாலிக்கிறாள்.

அருள்மிகு நல்ல மாரியம்மன் திருக்கோயில், தொழுதூர்

அருள்மிகு நல்ல மாரியம்மன் திருக்கோயில், தொழுதூர்– 612 804, திருவாரூர் மாவட்டம்.
***************************************************************************************************

+91- 94443 54461, +91- 94437 45732 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நல்ல மாரியம்மன்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்பு
ஊர் தொழுதூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு

சமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா. இவர்களது மகன் பரசுராமன். ரேணுகாதேவி தன் கற்பின் வலிமையால், ஆற்றங்கரையில் இருக்கும் ஈர மணலில் குயவர்கள் செய்வது போல் குடம் செய்து அதில் தண்ணீர் எடுத்துக் கொண்டு தங்கள் ஆசிரமத்து பூசைக்காக கொண்டு செல்வாள்.

பச்சை மணலில் குடம் செய்வதே கடினம். அது காயவேண்டும். அப்புறம் அதில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு போவதென்பது முடியாத ஒன்று. இதைச் சாதிக்கும் அளவுக்குக் கற்புத்திறமுடையவள் அவள்.

ஒருநாள் வானத்தில் அழகே வடிவான கந்தர்வன் ஒருவன் தன் தேரில் சென்று கொண்டிருந்தான். அவனது உருவம் தண்ணீரில் தெரிந்தது. ஏறிட்டுப் பார்த்த ரேணுகா,”உலகத்தில் இவ்வளவு அழகானவர்களும் இருப்பார்களா?” என சாதரணமாகத்தான் நினைத்தாள். இதனால் அவளது மனம் களங்கப்பட்டு விடவில்லை. இருப்பினும், அவள் அன்று செய்த குடம் உடைந்து விட்டது. வெறுங்கையுடன் ஆசிரமம் திரும்பிய ரேணுகாவின் நிலையை சமதக்னி முனிவர் தன் ஞானக்கண்ணால் கண்டு அறிந்து கொண்டார்.