Category Archives: சிவகங்கை

அருள்மிகு அக்னி வீரபத்திரர் ஆலயம், சூரக்குடி

அருள்மிகு அக்னி வீரபத்திரர் ஆலயம், சூரக்குடி, சிவகங்கை மாவட்டம்.

அக்னி வீரபத்திரருக்கு மதுரை சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவில் என்ற கிராமத்தின் அருகில் உள்ள சூரக்குடி என்ற சிறு ஊரில் பிரபலமான ஆலயம் உள்ளது. அங்கு உள்ள ஒரு அரச மரத்தடியில்தான் வீரபத்திரர் வந்து தங்கி இருந்து தவம் இருந்து தோஷத்தைக் களைந்து கொண்டாராம். அது மட்டும் அல்ல அந்த நேரத்தில் அவர் அந்த கிராமத்தின் தேவதையாக இருந்து ஊரைக் காத்து வந்தாராம். ஆகவே, ஊர் மக்கள் அவருக்கு ஒரு ஆலயம் எழுப்ப முயன்றனர். ஆனால் பல காலம் எத்தனை முயன்றும் கோவில் எழுப்ப முடியாமல் இருந்தது எனவும், ஆனால் ஒரு நாத்தீகருடைய கனவில் ஒரு நாள் வீரபத்திரர் தோன்றி தனக்கு அந்த இடத்தில் ஆலயம் அமைத்து வழிபடுமாறு கூற அவரும் ஊர் பஞ்சாயத்தில் அந்த செய்தியைக் கூறி ஆலயம் அமைத்ததாகவும் ஆலயத்தின் கதை உள்ளது. ஆலயத்தைப் பற்றிய கல்வெட்டுக்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆலயம் எந்த காலத்தில் முதலில் தோன்றியது என்பதும் தெரியவில்லை அக்னி வீரபத்திரர் அங்கு வந்த கதை இது.

வெண்பட்டு பைரவர் (திருத்தளிநாதர்) கோயில், திருப்புத்தூர்

அருள்மிகு வெண்பட்டு பைரவர் (திருத்தளிநாதர்) கோயில், திருப்புத்தூர், சிவகங்கை மாவட்டம்.

+94420 47593 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5.30 முதல் 12.30வரை, மாலை 3.30 முதல் இரவு 8.30 மணிவரை திறந்திருக்கும்.

 

சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அஷ்ட பைரவர் தலங்கள் உள்ளன. பொதுவாக பைரவர், ஆடையில்லாமல், நாய் வாகனத்துடன் காட்சி தருவார். ஆனால், இவர் வெண்ணிற பட்டாடை அணிந்து, நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருகிறார்.

முன்னொரு காலத்தில் கொலை, கொள்ளை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டு வந்த வால்மீகி, தன்னை திருத்திக்கொள்ள வேண்டி கொன்றை மரங்கள் நிறைந்த ஒரு வனத்தில் சிவனை நோக்கி, கடுந்தவம் இருந்தார். நீண்டகாலம் தவம் செய்ததால், அவர் அமர்ந்திருந்த இடத்தை சுற்றிலும் கரையான்கள் புற்று கட்டின. அவரது தவத்தை மெச்சிய சிவன் அவருக்கு காட்சி கொடுத்தார். புற்றில் இருந்த வால்மீகிக்கு காட்சி கொடுத்ததால், இவர் புற்றீஸ்வரர்எனப்பட்டார். அவ்வாறு காட்சி கொடுத்ததின் அடிப்படையில் எழுப்பப்பட்ட தலமே இது. புற்றின் முன் சிவன் காட்சி தந்ததால், “புத்தூர்என்று அழைக்கப்பட்ட இத்தலம், பின்னர் திருஎன்ற அடைமொழி சேர்க்கப்பட்டு, “திருப்புத்தூர்ஆனது. அதுவே திருப்பத்தூர். பிற்காலத்தில், இவ்விடத்தில் மன்னர்கள் கோயில் கட்டினர்.