Category Archives: காஞ்சிபுரம்

அருள்மிகு பச்சைவண்ணப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

அருள்மிகு பச்சைவண்ணப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் – 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்

+91- 44 – 2722 9540 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பச்சைவண்ணர்
தாயார் மரகதவல்லி
தீர்த்தம் சக்கர தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

சப்தரிஷிகளில் ஒருவரான மரீஷி மகரிஷி மகாவிஷ்ணுவின் மீது அதிக பக்தி கொண்டவராக இருந்தார். ஒருசமயம் அவருக்கு மகாவிஷ்ணுவின் அவதாரத்தின் மீது சந்தேகம் வந்தது. அனைத்திலும் உயர்ந்தவராக இருக்கும் விஷ்ணு எதற்காக மனிதனாக இராம அவதாரம் எடுக்க வேண்டும்? அப்படியே எடுத்திருந்தாலும் தன் மனைவியை இராவணன் கவர்ந்து செல்ல விட்டிருப்பாரா? என பல வகையிலும் தனக்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டார். பதில் தெரியாத நிலையில் மகாவிஷ்ணுவிடமே கேட்க எண்ணி அவரை வணங்கி இத்தலத்தில் தவம் செய்தார். மகாவிஷ்ணுவும் காட்சி தந்தார். அவரிடம், “நீங்கள்தான் உண்மையில் இராமாவதாரம் எடுத்தீர்களா? எல்லாம் தெரிந்திருக்கும் நீங்கள் எப்படி சீதையை இராவணன் கடத்திச்செல்ல விட்டீர்கள்? இது உங்களுக்கு தெரியாமல் நடக்குமா? அப்படியே இருந்தாலும் சீதையை மீட்க இலங்கைக்கு செல்ல வேண்டுமென உங்களுக்கு தெரியாதா? அதை ஆஞ்சநேயரின் உதவியுடன் தான் கண்டுபிடிக்க வேண்டுமா? என தனது சந்தேகங்களை பட்டியலிட்டார் மரீஷி மகரிஷி.

அவரிடம்,”நான்தான் இராமனாக அவதாரம் எடுத்தேன். இந்த அவதாரம் என் மீது அன்பு கொண்டவர்களுக்கு அருள்புரிவதற்காகவே எடுக்கப்பட்டது. எனக்கு சேவை செய்ய விருப்பம் கொண்ட சிவனே, ஆஞ்சநேயராக அவதரித்தார். எனது தரிசனம் பெற விரும்பிய அனைவருக்கும் இந்த அவதாரத்தில் காட்சி கொடுத்தேன்.

அருள்மிகு திரிசக்தி அம்மன் திருக்கோயில், தாழம்பூர்

அருள்மிகு திரிசக்தி அம்மன் திருக்கோயில் (கேளம்பாக்கம் அருகில்), பழைய மகாபலிபுரம் ரோடு, தாழம்பூர்-603 103, காஞ்சிபுரம் மாவட்டம்.

+91 93810 1919 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திரிசக்தி அம்மன்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் தாழம்பூர்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

ஒரு பக்தரின் கனவில் அன்னை தோன்றி உத்தர விட்டதால் உருவான கோயில் இது. கொட்டிவாக்கத்தில் ஓர் அழகிய ஆலயமெழுப்பும் எண்ணம் ஐயப்பன் பக்தர்களான சிலர் மனதில் மலர்ந்தது. அந்தக் கோயிலில் மூகாம்பிகை, சுவாலாம்பிகை, கன்னியாகுமரி அம்மன் ஆகிய மூன்று தேவியரையும் அமர்த்தி வழிபட விரும்பினார்கள். காலம் பல கடந்தது. அந்த பக்தர்களுள் ஒருவரின் கனவில், பட்டாடை உடுத்திய மூன்று சிறுமிகளும், கூடவே மூன்று நாகங்களும், சிம்மமும் அடிக்கடி தோன்றின. அந்த பக்தர் கனவுக்கான காரணம் தெரியாமல் திகைத்தார். தனக்கு அடிக்கடி வரும் இந்தக் கனவு குறித்து தனது குருசாமியிடம் கூறினார்.
மூன்று குழந்தைகள் எனில், சரசுவதி, இலட்சுமி, பார்வதி ஆகிய மூன்று சக்திகள். அவர்கள் உன் கனவில் தோன்ற ஏதேனும் காரணம் இருக்கும். நீ ஏதேனும் பிரார்த்தனை செய்து கொண்டு நிறைவேற்றாமல் இருக்கிறாயா?” என்று கேட்டார் குருசுவாமி.

பிரார்த்தனை என்று ஏதுமில்லை. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு மூன்று தேவியருக்கும் சேர்த்து ஒரு கோயில் கட்டும் திட்டம் இருந்ததுஎன்று பக்தர் பதிலளித்தார். உடனே அதை நிறைவேற்றும்படி கூறினார் குருசுவாமி. குருவின் வழிகாட்டுதலோடு ஆலயமெழுப்பிய பக்தர், ஞான சரசுவதி, மூகாம்பிகை, இலட்சுமி ஆகியோரை பிரதிட்டை செய்து கும்பாபிசேகம் நடத்தினார்.