Category Archives: நவகிரகத் தலங்கள்

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தென்குடித்திட்டை

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தென்குடித்திட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.

+91-94435 86453 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வசிஷ்டேஸ்வரர்
அம்மன் உலகநாயகியம்மை
தல விருட்சம் முல்லை, வெண்செண்பகம், செவ்வந்தி
தீர்த்தம் சக்கர தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருத்தென்குடித்திட்டை, திட்டை
ஊர் தென்குடித்திட்டை
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர்

திட்டை என்பது திட்டு அல்லது மேடு ஆகும். ஒரு பிரளய காலத்தில் இவ்வுலகமானது நீரால் சூழப்பட்டது. “ஓம்என்ற மந்திர ஓடத்தில் இறைவன், இறைவி இருவர் மட்டும் ஏறி வர, அது ஒரு திட்டில் வந்து நின்றது. அதுவே சீர்காழி என்னும் தோணிபுரம் ஆகும். ஆதிகாலத்தில் இறைவன் விரும்பி இருந்த 28 தலங்களில் 26 தலங்கள் ஊழிக்காலத்தில் மூழ்கிவிட்டன. இரண்டு தலங்கள் மட்டும் திட்டாக நின்றது. இறைவன், இறைவியுடன் விரும்பிக் குடியிருக்கும் திட்டுகள் குடித்திட்டை எனப்படும். அவற்றுள் ஒன்று சீர்காழி. மற்றொன்று தென்குடி திட்டை. சீர்காழியில் ஊழிக்காலத்தில் ஓம்என்ற மந்திர ஒலி எழுந்தது போலவே திட்டையில் ஹம்என்னும் மந்திர ஒலி வெளிப்பட்டதுடன் வேறு பல மந்திர ஒலிகளும் வெளிப்பட்டன. எனவே இத்தலம் ஞானமேடுஎனவும் தென்குடி திட்டைஎனவும், சீர்காழி வடகுடி திட்டை எனவும் வழங்கலாயிற்று. வசிஷ்ட முனிவர் ஆசிரமம் அமைத்து இத்தல ஈஸ்வரனை பூஜித்தமையால் இத்தல ஈஸ்வரன் வசிஷ்டேஸ்வரர்எனப் பெயர் பெற்றார். அம்பாள் உலகநாயகியம்மை.”

அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு

அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்.

+91-436 -2260 332, 94430 08104 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஐயாறப்பன், பஞ்சநதீஸ்வரர்
அம்மன் தரும சம்வர்த்தினி
தீர்த்தம் சூரிய புஷ்கரணி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருவையாறு
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

சிலாது மகரிஷி என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர். பிறக்கும்போது இந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. சிலாது மகரிஷி, ஒரு பெட்டியில் இந்தக் குழந்தையை வைத்துவிட்டு மூடித் திறந்தார். அப்போது குழந்தையின் இரண்டு கைகள் நீங்கி அழகான குழந்தையாக விளங்கியது. குழந்தையை திருவையாறு தலத்தில் விட்டுச் சென்றார். பரமேஸ்வரன் அந்த குழந்தைக்கு, அம்பிகையின் பால், நந்தி வாய் நுரை நீர், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரணி தீர்த்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தார். இந்த காரணத்தால் இறைவன் ஐயாறப்பர்எனப்பட்டார்.

கரிகால் சோழன் பல்லக்கில் இப்பக்கமாக வந்துகொண்டிருந்த போது தேர்ச் சக்கரம் நிலத்தில் புதையுண்டது . அதனை எடுக்கத் தோண்டும்போது குருதி வெளிப்பட்டது . சிவலிங்கமிருப்பதை கண்ட அரசன் தன் தவறுணர்ந்து, தலையை துணிக்க முற்படுகையில் ஈசன் அசரீரியால் தடுத்தார் என வரலாறு கூறும். ஆகையால் கரிகாலன் இக்கோயிலைக் கட்டுவித்தான். சுந்தரரும், சேரமான் பெருமாளும் வந்த போது இறைவன் காவிரி வெள்ளத்தை ஒதுக்கி வழிவிடச்செய்த தலம்.