Category Archives: பாடல் பெற்றவை
அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், திருமாகறல்
அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், திருமாகறல், காஞ்சிபுரம் மாவட்டம்.
+91 – 94448 10396 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 6 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | திருமாகறலீஸ்வரர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர், நடராஜர் | |
அம்மன் | – | திரிபுவனநாயகி | |
தல விருட்சம் | – | எலுமிச்சை | |
தீர்த்தம் | – | அக்னி தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருமாகறல் | |
ஊர் | – | திருமாகறல் | |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
முன்னொரு காலத்தில் பிரம்மா இத்தலத்தில் சிவபூஜை செய்து விட்டு, சத்தியலோகம் செல்லும் போது ஆண்டு முழுவதும் காய்க்கும் அதிசயப்பலாமரம் ஒன்றை நட்டார். அப்பலாமரம் நாள்தோறும் கனி கொடுத்து வந்தது. ராஜேந்திர சோழ மன்னன் இந்த அதிசய பலாமரத்தைக் கண்டு வியந்து, அந்த ஊரிலிருந்து தினமும் ஒருவர் தலைச்சுமையாக இந்த பழத்தை எடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் சேர்க்க வேண்டுமென உத்தரவிட்டான். நடராஜருக்கு இப்பழத்தை மதிய வேளையில் நைவேத்தியம் செய்து அதை மன்னருக்கு கொடுப்பது வழக்கம். ஒருமுறை, அந்தண சிறுவனின் முறை வந்தது. “இந்த மரத்தில் இருந்து தினமும் பழம் பறித்துப் போக மக்களை ஏவும் மன்னன், வேலைக்காரர்களை இதற்கென நியமித்திருக்கலாமே” என எண்ணிய அவன் ஒரு தந்திரம் செய்தான்.
அந்த ஊர் மக்களிடம், “நான் சிறுவன். பழத்தை சுமக்க சிரமப்படுவேன். நீங்கள் எல்லோரும் போய் இந்த பழத்தை கொடுத்து வாருங்கள். நான் இங்கிருந்து உங்கள் வீடுகளை பார்த்து கொள்கிறேன்” என்று கூற, அனைவரும் சிதம்பரம் சென்று விட்டனர். இந்த மரம் இருந்தால் தானே பிரச்னை வரும். இதை அழித்து விட்டால், நம் ஊர் மக்கள் தினமும் பழம் சுமக்கும் தொல்லை இருக்காதே எனக் கருதியவன், அந்த மரத்தை எரித்து விட்டான். ஊர் திரும்பிய மக்களிடம் பலாமரத்தில் தானாக தீப்பிடித்து சாம்பலாகி விட்டதாக தெரிவித்தான். ஊராரும் நம்பிவிட்டனர். மறுநாள் பலாப்பழம் சிதம்பரம் செல்லவில்லை. அந்த சிறுவனை அழைத்து மன்னர் விசாரித்தார். அப்போது அவன்,”பலாப்பழத்தை சிதம்பரம் கொண்டு வருவதற்கு, தாங்கள் எங்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. எனவே தான் மரத்தை எரித்தேன்” என்றான். அதற்கு மன்னன், “தகுந்த வசதி வேண்டும் என நீ இதை என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். இதை நீ செய்யாததால் உனது கண்களை கட்டி, நாடு கடத்த உத்தரவிடுகிறேன்” என்றான். காவலர்கள் சிறுவனை அழைத்துச் சென்ற போது, மன்னனும் உடன் சென்றான். ஊர் எல்லையில் அவனை விட்டுவிட்டுத் திரும்பிய போது, ஓரிடத்தில் பொன்னிற உடும்பு தென்பட்டது. அதை பிடிக்க காவலாளிகள் சென்ற போது அது ஓர் புற்றினுள் சென்று மறைந்தது. காவலாளிகள் ஆயுதங்களால் அந்த புற்றை கலைத்த போது, உடும்பின் வாலிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அப்போது அசரீரி தோன்றி, சிறுவன் என்றும் பாராமல் நாடு கடத்தியதற்காக கண்டனக்குரல் எழுந்தது. மன்னன் மயங்கி விழுந்தான். மயக்கம் தெளிந்த மன்னனிடம் மீண்டும் அசரீரி தோன்றி, சிவபெருமானே உடும்பாக வந்ததாகவும், அவ்விடத்தில் ஓர் சிவாலயம் கட்டி வழிபாடு செய்யும்படியும் ஆணையிட்டார். மன்னனும் அதன்படியே செய்தான். இன்றும் கூட உடும்பின் வால் அளவிலுள்ள இலிங்கம் தான் மூலஸ்தானத்தில் உள்ளது.
அருள்மிகு சத்யநாதசுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்
அருள்மிகு சத்யநாதசுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44 – 2723 2327, 2722 1664 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சத்யநாதர், திருக்காலீஸ்வரர், காரைத்திருநாதர் | |
அம்மன் | – | பிரமராம்பிகை | |
தல விருட்சம் | – | காரைச்செடி | |
தீர்த்தம் | – | இந்திர, சத்யவிரத தீர்த்தம் | |
ஆகமம் | – | காமீகம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | கச்சிநெறிக்காரைக்காடு | |
ஊர் | – | காஞ்சிபுரம் | |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
தேவர்களின் தலைவனான இந்திரன் தனது தவத்தினால் விரும்பிய வடிவம் எடுக்கும் திறன் பெற்றிருந்தான். ஒருசமயம் கவுதம மகரிஷியின் மனைவியான அகல்யா மீது அவனுக்கு ஆசை ஏற்பட்டது. எனவே, அகல்யாவை கவுதமரிடம் இருந்து பிரித்துக் கவர்ந்துசெல்ல வஞ்சக எண்ணம் கொண்டான். இதற்காக ஒருநாள் அதிகாலையில் கவுதமரின் ஆசிரமத்திற்கு சென்று, சேவல் போல கூவினான். பொழுது விடிந்தது என நினைத்த கவுதமர் வெளியில் சென்று விட்டார். இத்தருணத்திற்காக காத்திருந்த இந்திரன், அவர் சென்ற சிறிது நேரத்தில் அவரைப் போலவே உருவத்தை மாற்றிக் கொண்டு அகல்யாவிடம் சென்று அவளை ஏமாற்றி காமுற்றான்.