Category Archives: பாடல் பெற்றவை

அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி – திருவலிதாயம், சென்னை

அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி திருவலிதாயம், சென்னை மாவட்டம்.

+91 – 44 – 2654 0706 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30மணி முதல் 12மணி வரை, மாலை4.30 மணி முதல் 8.30இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார்
அம்மன் ஜெகதாம்பிகை
தல விருட்சம் பாதிரி, கொன்றை
தீர்த்தம் பரத்வாஜ் தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவலிதாயம்
ஊர் பாடி திருவலிதாயம்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞான சம்பந்தர்

வியாழபகவானின் மகனான பரத்வாஜர், கரிக்குருவியின்(வலியன்) பிள்ளையாக பிறந்தார். தான் பறவையாக பிறந்ததைக் கண்டு வருத்தமடைந்த பரத்வாஜர், பல புண்ணிய தலங்களுக்கும் சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது, கொன்றை மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தை கண்டார். இலிங்கத்திற்குப் பூஜை செய்து வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்து, பறவைகளின் தலைவனாகும்படி அருளினார். எனவேதான், இத்தலம் திருவலிதாயம்என்றும், சிவன் வலியநாதர்என்றும் அழைக்கப்படுகிறார்.

வியாழன், தான் செய்த தவறால், தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரை சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால், பாவம் நீங்கி மோட்சம் கிட்டும் என்றார். அதன்படி இங்கு வந்த வியாழன், புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி அருள் பெற்றார்.

அருள்மிகு படம்பக்கநாதர்(தியாகராஜசுவாமி) திருக்கோயில், திருவொற்றியூர்

அருள்மிகு படம்பக்கநாதர்(தியாகராஜசுவாமி) திருக்கோயில், திருவொற்றியூர், திருவள்ளூர் மாவட்டம்.

+91-44 – 2573 3703 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் படம்பக்கநாதர், ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர்
அம்மன் வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், திரிபுரசுந்தரி
தல விருட்சம் மகிழம், அத்தி
தீர்த்தம் பிரம்ம, நந்தி தீர்த்தம்
ஆகமம்/பூஜை காரணம், காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவொற்றியூர்
ஊர் திருவொற்றியூர்
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்

பிரளயகாலத்தில் உலகம் அழிவுற்று, மீண்டும் புதிதாக உலகம் தோன்றும். அப்போதெல்லாம் பிரம்மா தோன்றி, உயிர்களைப் படைப்பார். ஒரு பிரளயகாலம் வந்தபோது, உலகம் அழிவதை பிரம்மா விரும்பவில்லை. எனவே, உலகம் அழியாமல் காக்கும்படி சிவனை வேண்டி யாகம் நடத்தினார். யாகத்தின் மத்தியில் அக்னி வடிவில் தோன்றிய சிவன், அவரது வேண்டுதலை ஏற்றார். பின், பிரம்மாவின் வேண்டுதலுக்காக இலிங்க ரூபமாக எழுந்தருளினார். யாக குண்டம் கோயிலாக உருவானது. பிரளயம் நீங்கி, உலகம் மீண்டும் துவங்கிய வேளையில் இங்கு எழுந்தருளியதால் இத்தலத்து சிவன், “ஆதிபுரீஸ்வரர்என்று பெயர் பெற்றார். பிரளய வெள்ளத்தை ஒற்றச் செய்து (விலகச்செய்தல்) அருளியதால் தலம் திருவொற்றியூர்என்று பெயர் பெற்றது.

சப்தவிடங்கத் தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்து தியாகராஜர் பிரசித்தி பெற்ற மூர்த்தி என்பதால், இவரது பெயரிலேயே தலம் அழைக்கப்படுகிறது. இவ்வூரில் வசித்த ஏலேலசிங்கர் என்பவர், மன்னனுக்குக் கொடுப்பதற்காக மாணிக்க நகைகள் வைத்திருந்தார். அச்சமயத்தில் காசியில் வசித்த சிவபக்தர்கள் இருவர், இங்கு வந்தனர். அப்போது சிவன் ஏலேல சிங்கரிடம், அந்த பக்தர்களுக்கு மாணிக்கத்தைத் தரும்படி கூறவே, அவரும் கொடுத்துவிட்டார். மன்னன் ஏலேல சிங்கரிடம் மாணிக்கம் கேட்டபோது, அவர் செய்வதறியாது திகைத்தார். அப்போது, சிவனே அவருக்கு மாணிக்கம் தந்து அருள் செய்தார். எனவே இவர், “மாணிக்க தியாகர்என்றும் அழைக்கப்படுகிறார்.