அருள்மிகு மோகன கிருஷ்ணன் கோயில், திருவாய்ப்பாடி

அருள்மிகு மோகன கிருஷ்ணன் கோயில், திருவாய்ப்பாடி, கோகுலம், தில்லி

கிருஷ்ணர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார். மதுராவிலுள்ள கிருஷ்ணன் பிறந்தாலும் அவர் வளர்ந்ததெல்லாம் ஆயர்ப்பாடியில் தான் என்பதால் கிருஷ்ணனை முழுமையாக அனுபவித்துப் பார்த்தவர்கள் இங்கு தான் அதிகம். இதற்கு மற்றொரு பெயர் கோகுல் அல்லது கோகுலம் என்று அழைக்கப்படுகிறது.

மதுரா நகரிலிருந்து 4 கி. மீட்டர் தொலைவில் திருவாய்பாபாடி காணப்படுகிறது. யமுனை நதியைக் கடந்து அங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் சென்றால் திருவாய்ப்பாடி என்ற ஊர் உள்ளது. மூலவர் மோகன கிருஷ்ணன். கிழக்கே திருமுக மண்டலம். தாயார் ருக்மணி, சத்யபாமா பிராட்டியார்கள். தீர்த்தம் யமுனா நதி. விமானம் ஹேமகூட விமானம். நந்தகோபருக்கு கிருஷ்ணர் நேரிடையாகத் தரிசனம் தந்த இடம்.

ஆழ்வார்கள் பாடிய கோவில்களும் உருவச் சிலைகளும் இப்போது இல்லை புராண கோகுல் என்று ஒன்றுண்டு. கோயில் வாசலில் யமுனை நதி ஓடுகிறது. நந்தகோபர், யசோதா பலராமர் விக்ரகங்களுக்கடியில் குழந்தையாக கிருஷ்ணனை ஒரு மரத் தொட்டிலில் வைத்திருக்கிறார்கள். மற்றபடி பஞ்சலோக விக்ரகங்கள் எதுவுமில்லை.

பரிகாரம்:
குழந்தை இல்லாதவர்களும் நோயினால் வறுமையினால் அவதிப்படும் குழந்தைகளைப் பெற்றவர்களும் இந்த திருவாய்ப்பாடி கோயிலுக்கு வந்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை சேவித்தால் அவர்களுடைய புத்திர பாக்கியம் வலுப்பெறும். குழந்தைகளும் நோய்நொடி வறுமைப் பிணி இல்லாமல் வாழ்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *