அருள்மிகு சிங்கிரி கோயில், காவலூர்

அருள்மிகு சிங்கிரி கோயில், காவலூர், வேலூர் மாவட்டம்.

வேலூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் 20 km தொலைவில் கண்ணமங்கலம் என்ற மலைகள் சூழ்ந்த அழகிய ஊர் உள்ளது. கண்ணமங்கலத்தில் இருந்து காட்டுக்கானல்லூர் சாலையில் சென்றால் 5 km தொலைவில் இந்த சிங்கிரிகோயில் உள்ளது. ஊரின் பெயரும், கோயிலின் பெயரும் ஒன்றே. இந்த கோயில் பல மலைகள் சூழ நடுவே சிறிய குன்றின் மேல் உள்ளது.

இங்கே எழுந்தருளியுள்ள ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் நான்கு கரங்களுடன் பக்தர்களுக்கு கருணையோடு அருள் பாலிக்கிறார். மற்ற கோயில்களில் லக்ஷ்மி தேவி, நரசிம்மரின் இடது மடியில் அமர்ந்திருப்பார். இத்திருக்கோயிலில் ஸ்ரீலக்ஷ்மி தேவி நரசிம்மரின் வலது மடியில் அமர்ந்து பக்தர்களின் கோரிக்கைகளை நரசிம்மரிடம் கூறி நிறைவேற்றி வைக்கிறார். ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் சன்னதியின் இடப் பக்கம், என் இதயத்தை திறந்து பார்த்தால் அதில் என் தாய் தந்தை வடிவில் இராமரும் சீதா தேவியும் இருப்பார்கள் என்று இதயத்தை பிளந்து காட்டி பக்திக்கு இலக்கணம் வகுத்த அனுமனின் சன்னதி உள்ளது.



கண்ணமங்கலத்தில் இருந்து 15 km தொலைவில் படவேடு என்று ஒரு கிராமம் உள்ளது. அங்கு சுமார் 15 மிகப் பழைமையான திருக்கோயில்கள் உள்ளன. கைலாச விநாயகர் ஆலயம், படவேடு ரேணுகாதேவி ஆலயம், சுப்பிரமணியர் ஆலயம், ஸ்ரீயோக நரசிம்மர் ஆலயம், கோட்டைமலையில் உள்ள பெருமாள் ஆலயம், சிவன் கோயில், ராமர் கோயில், ஆஞ்சநேயர் கோயில் என்று இன்னும் பல கோயில்கள் உள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *