அருள்மிகு பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோயில், பிள்ளைவயல், பையூர்
அருள்மிகு பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோயில், பிள்ளைவயல், பையூர், சிவகங்கை
******************************************************************************************************
மாவட்டம்
************
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | காளியம்மன் |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | பையூர் |
மாவட்டம் | – | சிவகங்கை |
மாநிலம் | – | தமிழ்நாடு |
500 ஆண்டுகளுக்கு முன் பையூர் கிராம பகுதியில் வசித்த மக்கள் தங்களைப் பாதுகாக்க அம்மனின் உதவியை வேண்டினர். அவர்களின் கருத்தாக்கத்தால் உருவானாள் காளியம்மன்.
பல ஆண்டுகளாக அவர்கள் காளியை சிங்காரத்தோப்பு ஊரணிக்கரையில் வைத்து வழிபட்டனர்.
அம்பாள் மக்களை சோதிப்பாள், தன் பிள்ளைகள் சோதனையில் வெற்றி பெறுகிறார்களா எனக் கவனிப்பாள். இப்படித்தான் சிவகங்கை மாவட்டம் பையூர் பிள்ளைவயல் காளியம்மன் 500 ஆண்டுகளுக்கு முன் மக்களை சோதித்தாள். முசுலிம் மன்னர்களின் படையெடுப்பின் போது, இந்து கோயில்கள் அழிக்கப்பட்டன. அச்சமயத்தில் இந்த காளியை பாதுகாக்க எண்ணி, அம்மன் சிலையை கண்மாய்க்குள் இருந்த கிணற்றில் கல்லைக்கட்டி போட்டு விட்டனர்.
பல ஆண்டுகள் கழித்து கண்மாய் தூர் வாரும்போது, சிலை வெளிப்பட்டது. பின்பு அம்பிகையை தற்போதுள்ள இடத்தில் பிரதிட்டை செய்தனர். தன்னைக் காக்கும் சோதனையை மக்களுக்கு தந்த அம்பிகை, அந்த சோதனையில் வென்ற மக்களை இப்போதும் பாதுகாத்து வருகிறாள்.
கோயில் வயல்வெளியில் இருப்பதால், இந்த அம்மனுக்கு,”பிள்ளைவயல் காளியம்மன்” என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆண்டு தோறும் ஆடி முதல் வெள்ளியன்று காப்புக்கட்டு, தீமிதி திருவிழாக்கள் நடக்கும். கடைசி வெள்ளியன்று பூச்சொரிதல் திருவிழா சிறப்பாக நடக்கும். மாதந்தோறும் சிறப்பு பூசைகள் நடந்து வருகிறது.
திருமணமான தம்பதியர் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் அடுத்தாண்டு அவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
பிறக்கப்போகும் பிள்ளைகளுக்கும், பிறந்த குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வேண்டியும் பிரார்த்தனை செய்கிறார்கள். திருமணம் தடைபடும் பெண்கள் திருமணம் நடைபெற ஒவ்வொரு வெள்ளியும் தவறாமல் சென்று, விளக்கேற்றி வழிபடுகின்றனர். இப்படி வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
Leave a Reply