அருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோயில், எழுமேடு

அருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோயில், எழுமேடு, கடலூர் மாவட்டம்.
**************************************************************************************

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பச்சைவாழியம்மன்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் எழுமேடு
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

பச்சைப் பசேலென வயல்கள் சூழ்ந்திருக்க, அந்த ஊரையும் மக்களையும் காப்பதற்கு, பச்சை மரம் ஒன்றின் மீது குடியமர்ந்தாள் அம்மன். ஊர்ப் பெரியவரின் கனவில் வந்து, அம்மனே இந்தத் தகவலைச் சொல்லியருளினாளாம். விடிந்ததும் தகவலைக் கேள்விப்பட்டு ஊரே சிலிர்த்தது. அம்மனுக்கு கோயில் எழுப்பி, பச்சை நிற மேனியளாக அம்மனின் திருமேனியை பிரதிட்டை செய்து வழிபடத் துவங்கினர்.

கோயில் பிரகாரத்தில் கருப்பண்ண சாமி, கொடிமரம், குதிரை வாகனம் ஆகியவை உள்ளன. அம்மனுக்குப் பூசை செய்யும் போது, அவளுக்கு பிடித்த சிலம்பையும், உடுக்கையையும் கொண்டு இசைத்தபடியே பூசை செய்வது இக்கோயிலின் தனி சிறப்பு.

கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, எழுமேடு முதலான ஊரைச் சேர்ந்தவர்கள், தங்கள் வீட்டில் நடக்கும் மங்கல காரியங்களுக்கு அம்மனின் உத்தரவு கேட்டே செய்கின்றனர். அம்மனின் தோளில் எலுமிச்சை பழத்தை வைத்து, செய்யப் போகும் காரியத்தை மனதில் நினைத்துக் கொள்வர். பழம் கீழே விழுந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருவிழா: ஆடிவெள்ளி, ஆடி அமாவாசை

திருமண பாக்கியம் கிடைக்கவும், கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழவும், பிரிந்தவர்கள் ஒன்று சேரவும் இங்குள்ள அம்மனை வேண்டிக்கொள்கின்றனர்.

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு பச்சைப் புடவை சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

(நன்றி – தினமலர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *