அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில், கெங்கமுத்தூர்

அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில், கெங்கமுத்தூர், பாலமேடு, மதுரை மாவட்டம்.
***********************************************************************************************

காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த நாகம்மனை தரிசிக்க செல்லலாம்.

மூலவர்: – நாகம்மாள்

தல விருட்சம்: – வேம்பு

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – பாலமேடு, கெங்கமுத்தூர்

மாவட்டம்: – மதுரை

மாநிலம்: – தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் அம்மன், பசுமையான தென்னஞ்சோலைக் குள்ளே புற்றாக வளர்ந்து காட்சி அளித்து வந்தாள்.

நாளடைவில் தாய் கருமாரி, வேம்பு மரத்தடியில் சக்தியாக உருமாறி நின்றாள் இந்த சக்திசொரூபம் தான் ஒருமுறை ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு நாக அம்மனாக மாறினாள்.

வெள்ளத்தில் வலம் வந்த நாகம்மாள், இந்த இடத்தைத்தான் தனக்குரிய இடமாக தேர்ந்தெடுத்தாள். அத்துடன் மக்களுக்கு அருள் வழங்கும் வகையில் கருமாரியையும், பெரிய நாகம்மானையும், ராக்காயியையும் தன்னுடன் இணைத்து ஒன்று சேர்ந்து ஒங்கார சொரூபமான நாகம்மாள்என்ற திருநாமத்துடன் விளங்குகிறாள்.

பார்வதியின் 108 அவதாரத்தில் ஒன்றுதான் இந்த நாகம்மாள் அவதாரம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காகத்தான், அன்னை பராசக்தி, நாகம்மாள் அவதாரம் எடுத்துள்ளாள் என்கிறது புராணம்.

ஆண்டவனின் ஆபரணம் :

ஒரு முறை காசிப முனிவரின் மனைவிகளில் ஒருவரான கத்துரு என்பவள் ஆதிசேடன் முதலிய பாம்புகளைப் பெற்றாள். வினதை என்பவள் கருடனைப்பெற்றாள்.

கருடனும் பாம்புவும் விரோதி போல எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. இதனால் அனந்தன் போன்ற பாம்புகள் பயந்து போய் கருடனின் கால்களில் விழுந்து எங்களை, உங்கள் உடலில் ஆபரணமாக அணிந்து கொள்ள வேண்டுமென்று வேண்டிக்கொண்டன. உடனே கருடனும் அதே போல் செய்து நட்புக் கொண்டது.

இதன் பின் பாம்புகள்ளெல்லாம் நாக உலகம் போய் சேர்ந்தன. இந்த நாக உலகத்தில் இருந்துதான், நாகங்கள் திருமாலுக்குப் படுக்கையாகவும், சிவனுக்கு ஆபரணமாகவும், கருமாரி அம்மனுக்கு குடையாகவும் சென்றடைந்தன.

நாகம்மாளின் அவதாரம்:

இறைவன் உருவமற்றவர் என்றும், இறைவனை எந்த உருவத்திலும் வழிபடலாம் எனவும் பதஞ்சலி முனிவர் கூறியுள்ளார். எனவே தான் பார்வதி தேவி, இந்தப் பூமியில் நல்லதை நடத்துவதற்காக நாகம்மாள்அவதாரம் எடுத்தார்.

இத்தலத்தின் வடக்கே சிறு மலையில் தாடகை நாச்சியம்மன் கோயிலும், தெற்கே கல்லுமலை அருகே முருகப்பெருமான் கோயிலும் அமைந்துள்ளன.

சாத்தியார் அணையின் அருகே இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் நாகம்மாள் கோயில் கொண்டுள்ளாள்.

மண்டைக்காடு பகவதி அம்மன் தலத்தை பெண்களின் சபரிமலைஎன்பார்கள். அதே போல் இங்கு முழுவதுமே பெண்கள் வழிபாடு தான். இருந்தாலும் ஆண்களும் வழிபடலாம்.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி முதல் தேதி முதல் பத்தாம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.

நாகதோசம், செவ்வாய் தோசம், மூலநட்சத்திர தோசம், மாங்கல்ய தோசம், சர்ப்ப தோசம் உள்ளவர்கள் இங்கு வந்த வழிபட்டு தங்கள் தோசங்களை போக்கிக் கொள்கின்றனர்.

முழுவதுமே சேவை அடிப்படையில் செய்யப்படும் இத்தக்கோயிலுக்கு, குழந்தைச் செல்வம் வேண்டியும், தீராத நோயை தீர்க்கும் படியும் இங்கு வந்து நாகம்மாளை வழிபடுகின்றனர்.

அம்மனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *