அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில், கொல்லூர்
அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில், கொல்லூர் -576 220, குந்தாப்பூர் தாலுகா, உடுப்பி மாவட்டம். கர்நாடகா மாநிலம்.
+91- 8254 – 258 245, 094481 77892 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 5 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
தீர்த்தம்: – அக்னி, காசி, சுக்ள, மது, கோவிந்த, அகஸ்தியர், அர்ச்சனை குண்டு
பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர்: – கொல்லூர்
மாநிலம்: – கர்நாடகா
பாடியவர் – ஆதி சங்கரர்.
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் மூகாசுரன் எனும் அசுரன் சிவனை நோக்கி தவமிருந்தான். அவன் தவப்பயனை அடைந்துவிட்டால் உலகிற்குத் துன்பம் ஏற்படும் என்பதால், தேவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர்.
அம்பிகை, மூகாசுரனின் தவத்தைக்கலைத்து, அவனுடன் போரிட்டாள். அவன் அம்பிகையிடம் சரணடைந்தான். அவனது வேண்டுகோளுக்கிணங்க இத்தலத்தில் அவனது பெயரையே தாங்கி, “மூகாம்பிகை” என்ற பெயரில் தங்கினாள்.
அம்பிகை இக்கோயிலில் பத்மாசனத்தில், இரு கைகளில் சங்கு, சக்கரத்துடன், காளி, மகாலட்சுமி, சரசுவதி ஆகிய முத்தேவியரின் வடிவில் அருள்புரிகிறாள். ஐம்பொன்னால் ஆன காளி, சரசுவதி சிலைகள் மூகாம்பிகையின் இருபுறமும் உள்ளன. முத்தேவியருக்கும் தினமும் சிறப்பு பூசை நடக்கிறது.
ஆதிசங்கரர் இங்கு மூகாம்பிகையை, சரசுவதியாகப் பாவித்து வணங்கி, “கலா ரோகணம்” பாடி அருள் பெற்றார். சரசுவதி பூசையன்று சரசுவதி சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அன்று குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்காக நடக்கும் வித்யாரம்ப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கிறது.
சகலநோய் நிவாரணி:
ஒரு முறை ஆதிசங்கரர் மூகாம்பிகையை நினைத்து இங்கு தவம் புரிந்து, எழ முயன்றபோது அவரால் முடியவில்லை. சங்கரருக்காக அம்பாளே கசாயம் தயாரித்துக் கொடுத்ததாகவும், அதனால், அன்றிலிருந்து இரவு நேர பூசைக்கு பின் அனைவருக்கும் கசாயம் பிரசாதமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த கசாயத்தைச் சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. இத்தலத்திலிருந்து தான் ஆதி சங்கரர் “சவுந்தர்ய லகரி” எழுதியுள்ளார்.
குடஜாத்ரி மலை:
கொல்லூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் குடஜாத்ரி மலை இருக்கிறது. அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிச் சென்ற போது அதிலிருந்து விழுந்த துண்டுப்பகுதி குட்ஜாத்ரி மலையானது என்பர். இதில் 64 வகை மூலிகைகளும், 64 தீர்த்தங்களும் உள்ளன. இந்த மலையில் கணபதி குகை, சர்வக்ஞபீடம், சித்திரமூலைக் குகை உள்ளன. இந்த குகையில் ஆதிசங்கரரும், கோலமகரிசியும் தவம் செய்ததாகவும், இவர்கள் தேவைக்காக அம்பாளே ஒரு நீர் வீழ்ச்சியை இங்கு தோற்றுவித்ததாகவும் கூறுவர்.
கோயில் உள்பிரகாரத்தில் பஞ்சமுக கணபதி, சுப்ரமணியர், பார்த்தேசுவரர், பிராண லிங்கேசுவரர், சந்திரமவுலீசுவரர், நஞ்சுண்டேசுவரர், ஆஞ்சனேயர், மகாவிட்டுணு, துளசி கிருட்டிணன், வீரபத்திரர் சன்னதிகள் உள்ளன.
இவர்களை வழிபாடு செய்த பின் தாய் மூகாம்பிகையை வழிபாடு செய்ய வேண்டும். தினமும் இரண்டு முறை இங்கு அன்னதானம் நடைபெறுகிறது.
ஆதிசங்கரர் முதன் முதலில் இங்கு வந்தபோது கோல மகரிசி என்பவர் வழிபட்ட சுயம்பு இலிங்கம் மட்டுமே இத்தலத்தில் இருந்தது. இந்த இலிங்கத்தில் அம்பாள் அரூபமாக அருள்பாலிப்பதை உணர்ந்த ஆதிசங்கரர், அங்கிருந்த மேடையில் அமர்ந்து தியானம் செய்வார். அம்பாள் மூகாம்பிகை வடிவில் ஆதிசங்கரருக்கு காட்சி கொடுத்துள்ளார். அந்த உருவத்தை அடிப்படையாக கொண்டு மூகாம்பிகை சிலை பிரதிட்டை செய்யப்பட்டது. இந்த அம்மனுக்கு அபிசேகம் கிடையாது. அலங்காரம், மலர் அஞ்சலி, ஆராதனை மட்டுமே நடக்கும். இலிங்கத்திற்கு மட்டுமே அபிசேகம் நடக்கும். இந்த இலிங்கத்தின் நடுவில் ஒரு தங்கக் கோடு இருக்கிறது. இந்த தங்கக் கோட்டை அபிசேகத்தின் போது காணலாம். இதில் இடது புறம் பிரம்மா, திருமால், சிவனும், வலது புறம் சரசுவதி, இலட்சுமி, பார்வதியும் அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த இலிங்கத்தை வணங்கினால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். இங்கு ஆதிசங்கரர் பிரதிட்டை செய்த கரம் இருக்கிறது. கோல மகரிசி வழிபட்டதால் இத்தலம் கொல்லூர் ஆனது. பொதுவாக கிரகண நேரத்தில் கோயில்கள் நடை சாத்தப்படும். ஆனால் இங்கு கிரகண நேரத்திலும் தொடர்ந்து பூசை நடக்கும். இங்கு பூசை செய்வதற்கு பிரம்மச்சாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை.
பங்குனி உத்திரத்தில் கொடியேற்றி மூலநட்சத்திரத்தில் தேர்த்திருவிழா நடக்கும். இந்த திருவிழாவின் போது மூகாசுரனுக்கும் விழா எடுக்கப்படுகிறது. நவராத்திரி, தீபாவளி. சரசுவதி பூசையன்று மூகாம்பிகை சன்னதியில் உள்ள சரசுவதி தேவி பக்தர்களின் தரிசனத்திற்காக வெளியே பவனி வருகிறாள்.
மூகாம்பிகை சரசுவதி அம்சமாகத் திகழ்வதால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கப் பிரார்த்தனை செய்கிறார்கள்.
அம்மனுக்குப் புத்தாடை சாற்றி சிறப்பு பூசை செய்யலாம்.
kollur mookambikai yathra weekly package reservation tickets and first class room in kollur and trrain get down car to temple rteturn rly station by guide contact me -9500145650 -me do all arangments me not doing for business me come for darsan so only
Thankx