வாஸ்து குறைபாடு நீங்க
வாஸ்து குறைபாடு நீங்க
வாழ்க்கை வளமாக அமைய வாஸ்து சாஸ்திரம், நமக்கு வழிகாட்டுகிறது. வாஸ்து முறையுடன் அமைந்த வீட்டில் அமைதியும், அன்பும், செல்வமும் பொங்கி வழியும். இங்கு முக்கியமான மூலைகளான ஈசான மூலை, அக்னி மூலை, குபேர மூலை, நிருதி ஆகிய மூலைகளில் இருக்கவேண்டிய, இருக்கக்கூடாத பொருட்களைப்பற்றிப் பார்ப்போம்.
ஈசான மூலை (வடகிழக்கு) வழியே சகலசௌபாக்கியங்களும் வீட்டிற்குள் வருகின்றது, எனவே இம்மூலையை சுத்தமாக வைக்க வேண்டும். ஈசான மூலையில் பூஜையறை, குழந்தைகள் படிப்பறை, படுக்கையறை, வயதுமுதிர்ந்தவர்களின் படுக்கையறைகளை அமைக்கலாம். ஈசான மூலையை அடைப்பதுபோல் நிலைப்பேழை வைக்கக்கூடாது. அம்மி, ஆட்டுக்கல், விறகு சுமை, தேவையற்ற பழைய பொருட்களையும் அடைத்து வைக்கலாகாது.
வீட்டின் பிரதான ஈசான மூலையில் கழிப்பறை, குளியலறை, செப்டிக்டேங்க், துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது. பரணில் ஈசான மூலையில் பொருட்களை வைக்கக்கூடாது.
வீட்டின் ஈசான மூலை கீழ்நிலைத் தொட்டி, கிணறு போன்றவை அமைக்க வேண்டிய இடம். ஈசான மூலையில் நீரோட்டம் இல்லாத போது, தென்மேற்கு, தென்கிழக்கு தவிர்த்து கிணறு தோண்டவும். பிறகு ஈசான மூலையில் கீழ்நிலைத் தொட்டி அமைக்கவும்.
அக்னி மூலை– தென்கிழக்கு மூலை. இங்கு சமையற்கூடம் இருக்க வேண்டும். பெண்களின் மன, உடல் நலத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் மூலை ஆதலால் பழுதில்லாமல் அமைக்க வேண்டும். வீட்டின் பிரதான அக்னி மூலையில் சமையற்கூடம் அமைக்க இயலா விடினும் சமையற்கட்டின் அக்னி மூலையில் அடுப்பு (மண்ணெண்ணை, எரிவாயு போன்றவை) இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். விதிவிலக்காக வாயு (வடமேற்கு) மூலையில் சமையற்கூடமும், அடுப்பும் அமைக்கலாம். அக்னி மூலையில் குடிநீர், நிலைப்பேழை, கழிப்பறை, குளியலறை, இருக்கக்கூடாது. வீட்டின் பிரதான அக்னி மூலையில் கிணறு, கழிப்பறை, குளியலறை, கழிவுத் தொட்டி,(செப்டிக்டேங்க்) துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது. வீட்டின் அக்னி மூலையில் மின்சாதனங்களை வைக்கலாம்.
செல்வம் தங்கவும், பணவிருத்திக்கும் குபேர(வடக்கு) மூலை, நிருதி (தென்மேற்கு)மூலையில் பணப்பெட்டி, நிலைப்பேழை வைக்கவும். சுவற்றில் பணப்பெட்டியை பதிப்பதாயின் நிருதியில் பதிக்கவும். வீதியைப்பார்த்துத் தான் வாயிற்படியை அமைக்க முடியும். எனவே, தெற்கு, மேற்கு வாயிற்படிகள் தவிர்க்க முடியாதவைகளே. தெற்கு, மேற்கு திசையில் தலைவாயில் அமைக்கும்படி நேரினும், ஈசானமூலை, அக்னிமூலையை சரியாக அமைத்துக் கொண்டால் போதும். தெற்கு, மேற்கு தலைவாயில் அமைந்த வீட்டின் கொல்லைப்புறமாக ஈசான,
அக்னி மூலைகள் அமைவதை கவனிக்கவும்.
கழிப்பறை,குளியல் அறைகளை வடமேற்கு (வாயு) மூலையில் அமைக்கவும். நிருதியில்(தென்மேற்கில்) படுக்கையறையை ஒட்டி கழிப்பறை அமைக்கலாம்.
கழிவுத்தொட்டி கண்டிப்பாக வடமேற்கில் தான் இருக்க வேண்டும். சில இடங்களில் விதிவிலக்காக இந்திரன் (கிழக்கில்) மூலையில் கழிப்பறை அமைக்கலாம். பொதுவாக வீட்டில் எந்த இடங்களில் எடைமிக்க பொருட்களை வைக்கலாம் என்பதற்கும் நியதி உண்டு.
- சுபதினம்
இதுபோல 10008 வகை கண்டிஷன்கள். இதில் ஏதவதொன்று சரியாக அமையாவிடில் போச்சு. வாஸ்து சாத்திரக்கரர்கள் “அதனால்தான் உங்கள் வீட்டில் இப்படியெல்லாம் கெட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பரிகாரம் செய்யவேண்டும். நான் வந்து பார்க்கக் கட்டணம் இவ்வளவு; பரிகாரம் செய்யக் கட்டணம் இவ்வளவு; என்று காசைக் கரந்துவிடுவார்கள்.” எச்சரிக்கை.
மனையடி சாஸ்திரம் புத்தகம் வாங்குங்கள். முடிந்தவரை அதில் சொல்லியபடி வீடு கட்டுங்கள். அதில் கோளாறு; இதில் கோளாறு என்று சொல்லுபவர்களின் சொற்களைக் காதில் வாங்காதீர்கள். வாழ்வில் நல்லதும் நடக்கும்; கெட்டதும் நடக்கும். வாஸ்து சரியில்லாததால்தான் கெட்டது நடக்கிறது என நம்பாதீர்கள்.
இறைநம்பிக்கை இருப்பின் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று வேண்டிக்கொள்ளுங்கள்.
அக்னிபுரீஸ்வரர் | அன்னியூர் | திருவாரூர் |
அக்னிபுரீஸ்வரர் | திருப்புகலூர் | திருவாரூர் |
மகாலிங்கேஸ்வரர் | விராலிப்பட்டி | திண்டுக்கல் |
பூமிநாதர் | மண்ணச்சநல்லூர் | திருச்சி |
Leave a Reply