நல்ல நண்பர்கள் கிடைக்க
நல்ல நண்பர்கள் கிடைக்க
ஒரு நல்ல நண்பன், எப்போதுமே, தனது சக நண்பனின் முன்னேற்றம் மற்றும் நலன் சார்ந்த விஷயங்களிலேயே அக்கறையாக இருப்பான். தனது நண்பன் தீமைகளின் பக்கம் சென்றால்கூட, புத்திசொல்லி திருத்த முயற்சிப்பான்.
“உடுக்கை இழந்தவன் கைபோலாங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.”
ஒருவேளை, தான் ஏதேனும் கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தாலும்கூட, தன் நண்பன் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகாதபடி தடுப்பான். அந்த நல்ல நண்பன் சீரிய சிந்தனைக்கும், அறிவு முன்னேற்றத்திற்கும், ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கும் எப்போதும் துணை நிற்பான். அவனும் உயர்வதோடு, தன் நண்பனும் உயர அவன் காரணமாக இருப்பான்.
இத்தகைய நட்பு கிட்ட கீழுள்ள ஆலயத்துள்ள இறைவனை வழிபடக் கிட்டும்.
சுந்தரேஸ்வரர் | திருவேட்டக்குடி | புதுச்சேரி |
Leave a Reply