தொழில்களில் தடங்கல் நீங்க

தொழில்களில் தடங்கல் நீங்க

என்ன காரணமென எண்ணிப்பாருங்கள். உங்கள் அணுகுமுறையில் கோளாறு இருக்கலாம். திருத்திக் கொள்ளுங்கள். நீங்கள் விற்கும் பொருள் அழிவற்றதாயிருக்கலாம்; காலத்திற்கு ஏற்றதாயில்லாமல் இருக்கலாம்.

தொழிலுக்கு போட்டியாகப் பலர் வந்து விட்டார்கள். அதனால் தொழில் வளர்ச்சியில் மந்தநிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் என் கடனை அடைக்கமுடியவில்லை, தொழிலை விரிவுபடுத்த முடியவில்லை. இன்னும் பல வகையில் தடங்கல்கள் ஏற்படுகிறதுஎன்றார் ஒருவர்.

உண்மைதான். இன்று எல்லா துறைகளுமே போட்டியில் தான் நடைபெறுகிறது. போட்டியில்லாவிட்டால் பொறுப்பு இருக்காது. போட்டி இல்லாவிட்டால் பொருளில் தரம் இருக்காது. அதைவிட போட்டி இல்லாவிட்டால் தொழில் வளர்ச்சி இருக்காது.

தற்கால போட்டிநிலை கண்டு சற்றேனும் கலங்காதே. உனது தொழிலையும் மாற்றிக்கொள்ளாதே. நீ இன்று செய்யும் தொழிலைச் சார்ந்த இன்னொன்றை ஆரம்பித்துக்கொள். அதனால் உனக்கு இன்னும் பயன் கூடும். பாதுகாப்பாகவும் இருக்கும்என்று அரிவுறுத்தினார் அவர் நண்பர்.

மேலும் இன்று செய்யும் தொழிலில் எந்த வகையில் செலவுகளை குறைக்க முடியும்; விற்பனையை கூட்ட இன்னும் என்ன வழி உள்ளது என்று எண்ணிப்பார். தொழில் சார்ந்த சிந்தனையிலேயே இரு. சரியான முடிவுக்கு வந்தவுடன் அதை உடனே செயல்படுத்து. கூடவே உனது தொழில் நண்பர்களை நன்கு கவனித்துவா. அவர்கள் வளர்ச்சி பெறுவது எதனால் என்பதைக் கண்டு பிடி. வெற்றி நிச்சயம். அப்போது உனக்கு இன்னும் பல வகையில் யோசனைகள் தோன்றும். வழி தான்னாலே பிறக்கும். இன்றைய விளம்பர உலகில் காய்கறிக் கடைக்குக் கூட இன்டர்நெட்டில் விளம்பரம் செய்யத்துவங்கி உள்ளனர். ஆகவே உனது தொழிலைப் பற்றி உன்னால் முடிந்த அளவு விளம்பரம் செய். சமீபத்தில் ஒரு பெண் தொழிலதிபர் கூறுகிறார். வண்டிக்கு பெட்ரோல் போன்றது விளம்பரம். பெட்ரோல் இல்லா விட்டால் எப்படி வண்டி பாதியில் நின்று போகுமோ அதுபோல, எனது பொருள் எவ்வளவு தான் மார்க்கெட்டில் விற்பனையானாலும் விளம்பரத்தை நிறுத்திவிட்டால் விற்பனை சிறுத்து, தொழில் நின்று விடும் என்றாராம். உன்னால் முடிந்த அளவு உனக்கு தெரிந்த வழிகளில் விளம்பரம் செய். ஆகவே நடந்ததை மறந்து, இனி நடக்கப்போவதை எண்ணி உனது வேலையை துவங்கு. ஓர் நொடி கூட வீண் செய்யாதேஎன்றார் நண்பர்.

ஒரு செருப்பு வியாபாரி ஆப்பிரிக்காவிற்கு 2 பேரை அனுப்பி நம் செருப்புக்கள் அங்கே விலைபோகுமாவெனப் பார்த்துவரச் சொன்னார். ஒருவன் வந்து, “எல்லோரும் வெறுங்காலுடன் நடக்கின்றனர்; ஆகவே நம் செருப்பை அங்கே விற்க முடியாதுஎன்றான். மற்றவன் வந்து, “எல்லோரும் வெறுங்காலுடன் நடக்கின்றனர்; ஆகவே நம் செருப்பை அங்கே விற்க வாய்ப்புக்கள் உள்ளனஎன்றான். நோக்கு(பார்வை) எப்படியிருக்கிறதோ அதற்குத் தக்கபடி எண்ணங்கள் மாறும். வியாபாரத்தில் வித்தியாசமான கோணத்தில் உத்திகளைக் கையாண்டு பாருங்கள்.

பில்லி, சூனியம் ஆகியவற்றில் நம்பிக்கை வைத்து கைப்பொருளை இழக்காதீர்கள்.

தொழிலில் எவ்வளவுதான் என்னுடைய உழைப்பைப் போட்டாலும், ஏதோ தடங்கல் ஏற்பட்டு முன்னேற்றம் வராமலேயே இருந்தது. நாளுக்குநாள் வட்டி கட்டி ஏழையானேன். வருமானம் இல்லாமல் தொடர்ந்து மாதமாதம் லட்சக்கணக்கில் வட்டி கட்டி வந்ததால், மனபாரம் ஏற்பட்டு உடலும் பாதிப்புக்குள்ளானது. அப்பொழுது என் நண்பர், சாமியிடம் சென்று ஆசீர்வாதம் வாங்குங்கள். உங்கள் பிரச்சினை சரியாகிவிடும்என்று சொன்னார். நானும் சாமியிடம் ஆசீர்வாதம் வாங்கினேன். அதிலிருந்து எல்லாம் சரியாகிவிட்டது என்றார் ஒரு பிருகஸ்பதி. ஓர்ந்து பாருங்கள்.

பகுத்தறிவு இருக்கட்டும். கீழ்கண்ட ஆலயம் சென்று இறைவனை வேண்டித்தான் பாருங்களேன்.

அருள்மிகு வண்டுறைநாதர் திருக்கோயில், திருவண்டுதுறை, திருவாரூர்

2 Responses to தொழில்களில் தடங்கல் நீங்க

  1. kayalvizhiiii says:

    kalvith thadai ninga enna parikaram? arrears ezhuthi pass seyya enna parikaram?send a mail please.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *