ஞாபக மறதி நீங்க

ஞாபக மறதி நீங்க

கற்பனையைவிட நிஜம் பல நேரங்களில் சுவாரஸ்யமானது ; சில நேரங்களில் பயங்கரமானதும்கூட. 80 வயதான அந்த முதியவருக்கு ஞாபக மறதி அதிகம். மூக்குக் கண்ணாடியை அணிந்துகொண்டே எங்கே என் மூக்குக் கண்ணாடி?’ என்று தேடுவதில் தொடங்கிவந்த பாதையை மறந்து திண்டாடுவது, சுற்றி இருப்பவர்களை அடையாளம் தெரியாமல் தவிப்பது என வளர்ந்து ஒரு கட்டத்தில் தான் யார்?’ என்பதே அவருக்குத் தெரியாமல் போய்விட்டது. திடீரென ஒரு நாள், வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மறுபடி வீடு திரும்பவில்லை. பல நாட்களுக்குப் பிறகு, அவரைக் கண்டுபிடித்தார்கள். முகத்தையே மறைத்துவிட்ட தாடி, மெல்லிசான தேகம், ஒட்டிப்போன வயிறு என்று ஒட்டுமொத்தமாக உருமாறிப்போயிருந்தவரை அந்தக் குடும்பமே சென்று அழைத்தது. ஆனல், அவருக்கு ஒருவரைக்கூட ஞாபகத்தில் இல்லை. பைக் சாவியையோ, செல்போனையோ எங்கே வைத்தோம் என்று தெரியாமல் தேடுவது இயல்பானதுதான். ஆனால், மறதி என்பது இத்தனை ஆபத்தான நோயா?

ஆனந்த விகடன்

ஞாபக மறதிக்கு பித்த அதிகரிப்பே காரணம். மேலும் மூளைக்கு தேவையான சத்துக்கள் குறைவதால் ஞாபக மறதி உண்டாகும். இக்குறையை நீக்க மணலிக் கீரை மசியல் செய்து சாப்பிடுவது நல்லது. ஒரு கப் புளிப்பில்லத மோருடன் ஒரு தேக்கரண்டி தேன் 5மிளகுகளின் பொடி ஆகியவற்றைக் கலந்து தினமும் பருகிவர ஞாபக மறதி குறையும்.

அத்துடன் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று மனமுருக வேண்டிக்கொண்டால் ஞாபக மறதி குறையும்.

அரைக்காசு அம்மன் இரத்னமங்கலம் சென்னை
யோகராமச்சந்திர மூர்த்தி படவேடு திருவண்ணாலை

லோகாம்பிகா அம்மன்

லோகனார்காவு

கோழிக்கோடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *