சாபங்கள் தீர
சாபங்கள் தீர
ஒரு சாதாரண மனிதன் இன்னொரு மனிதனால் தேவையற்ற முறையில் அல்லது அதர்ம வழியில் தாக்கப்படும் போது தன்னையும் மீறிய சோகத்திற்கு ஆட்படுகிறான். அந்த நேரம் அவன் மனது நிகழ்ந்த நிகழ்ச்சியிலேயே நிலைத்து விடுகிறது. சுற்றுப் புறச் சூழல்கள் அனைத்தும் மறந்து தனக்கு ஏற்பட்ட அநியாயத்தை மட்டுமே நினைத்து நினைத்து மனம் உருகி ஒருநிலைப் பட்டுவிடுகிறது. அப்போது அவனிடமிருந்து வருகின்ற வார்த்தை அடிவயிற்றில் இருந்து ஒரு ஓநாயின் ஓலம் போல வெளிப்பட்டு எதிராளியை தாக்குகிறது. எதிரியை மட்டும் அல்ல எதிரியின் வம்சத்தை கூட தாக்குகின்ற அளவிற்கு அந்த வார்த்தை சக்த்தி மிகுந்த சாபமாகி விடுகிறது. இதனால் பல தலைமுறைகள் காரணமே இல்லாத சோதனைகளைச் சந்தித்து வாழ்வில் பல இன்னல்களை அனுபவிக்க வேண்டிய நிலை உள்ளது.
பாட்டன் முப்பாட்டன் செய்த பாவத்திற்கு ஒன்றுமே அறியாத வாரிசுகள் இன்னல்களை அனுபவிக்கலாமா? இது நடக்குமா? அவர்கள் பெற்ற சாபம் நம்மை எப்படித் தொடரும்? என்று சிலர் கேட்கலாம்.
முன்னோர்களால் பெற்ற சாபம் ஒரு தனிமனிதனை வாட்டுகிறது என்றால் அவனவன் ஜாதகப் படிதான் நல்லது கெட்டது நடக்கிறது என்று சொல்வது எப்படிப் பொருந்தும் என்றும் சிலர் கேட்கலாம்.
ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்திலும் கிரகங்களின் பலன் என்பது அவனது முன்ஜன்ம வினை அவனது முன்னோர்களின் வினை என்பதைப் பொறுத்தே அமைகிறது.
அவனது நிகழ்கால சொந்த வினைகள் நல்ல முறையில் அமைந்தால் கஷ்டங்களில் இருந்து சுலபமாக விடுபட வழிவந்து சேரும். அல்லது அத்தகைய பூர்வ வினைகளின் தாக்குதலை கிரகங்கள் இலகுவாக்கிக் குறைத்து கொள்ளவும் வழி கிடைக்கும்.
இதெல்லாம் நம்பும்படியுமில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை என்றால் எல்லாவற்றையும் இறைவன் பொறுப்பில் விட்டுவிட்டு வருவதை எதிர்கொள்வது புத்திசாலித்தனம். கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வணங்கினால் எவ்வகைச்சாபமானாலும் கழிந்துவிடுமென பக்தர்கள் கூறுகின்றனர்.
கோகிலேஸ்வரர் | திருக்கோழம்பியம் | தஞ்சாவூர் |
தர்ப்பாரண்யேஸ்வரர் | திருநள்ளாறு | புதுச்சேரி |
Leave a Reply