இருதய நோய் நீங்க

இருதய நோய் நீங்க

திருச்சி நடுநகர் அரிமா சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இதமாய் காப்போம் இதயம்என்ற தலைப்பில் இருதய நோய் சிகிச்சை நிபுணர் செந்தில்குமார் நல்லுசாமி பேசியது:

அதிக கொழுப்புச் சத்து, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு உள்ளது.

40 வயதுக்கு மேல் உள்ள ஆண்களும், 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களும் ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

மூச்சுத் திணறல், தோள்பட்டை வலியுடன் கூடிய மார்பு வலி, நடக்கும்போது, ஓடும் போது, உயரமானப் பகுதிகளில் ஏறும்போது மார்பு வலி ஏற்படுதல் போன்றவை மாரடைப்புக்கான அறிகுறிகள்.

ஒருவருக்கு தொடர்ந்து 20 நிமிஷங்களுக்கு மேல் படபடப்புடன் மார்பு வலி ஏற்பட்டால் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

இருதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் கொழுப்புச் சத்துகள் அதிகமாகி ரத்த ஓட்டத்தை தடுப்பதால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது.

பொதுவாக, இருதய நோய் உள்ளிட்ட எந்த நோயும் நம்மைத் தாக்காமல் இருக்க தினமும் அரைமணி நேரமாவது சீரான உடல் பயிற்சி செய்வது நல்லது.

மேலும், இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஏறத்தாழ இரண்டு மணி நேரத்துக்கு முன்பே சிறிய அளவு உணவு சாப்பிட வேண்டும். முடிந்தளவு சாதத்தை தவிர்ப்பது நல்லது.

இருதய நோயைத் தவிர்க்க நினைப்பவர்கள் முதலில் புகைப் பிடிப்பதையும், மது அருந்துவதையும் நிறுத்த வேண்டும்.

இதுதவிர, இறைச்சி, எண்ணெய் பலகாரங்கள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

எந்தச் சூழ்நிலையிலும் மன அழுத்தத்துக்கு ஆளாகமல் இருத்தல் அவசியம். ஒரே நேரத்தில் பல வகையான சிந்தனைகளில் ஈடுபடுவதால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

நாம் எப்போதும் நேர்மறை எண்ணத்துடன் இருந்தால்தான் நமக்கு நேர்மறையான முடிவுகள் கிடைக்கும்என்றார்.

பலவகையான இதய நோய்கள் உள்ளன. தகுந்த மருத்துவரை நாடி மருத்துவம் பார்த்துக்கொள்ளவும். தற்பொழுதெல்லாம் மருத்துவம் பார்ப்பதற்கு தன் சொத்தையெல்லாம் விற்றுவிடவேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கு வசதி இல்லாதவர்களும், மருத்துவரால் கைவிடப்பட்டவர்களும், மகேசனைத்தான் நாடவேண்டும். கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்றால் நோய் தீருவதாகப் பக்தர்கள் நம்புகின்றனர்.

இருதயாலீசுவரர்
திருநின்றவூர்
திருவள்ளூர்
மனத்துணைநாதர் வலிவலம் நாகப்பட்டினம்

5 Responses to இருதய நோய் நீங்க

  1. உங்கள் பதிவுகளை http://www.hotlinksin.com/ இணையதளத்தில் பகிர்வதன் மூலம் ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.

  2. Siva says:

    What can I do to stop taking to crestor

  3. Moorthy s says:

    நன்றி நன்றி

  4. Crestor can harm an unborn baby or cause birth defects. Do not use this medicine if you are pregnant.

    Before taking Crestor, tell your doctor if you have ever had liver or kidney disease, diabetes, or a thyroid disorder, if you are of Chinese descent, or if you drink more than 2 alcoholic beverages daily.

    In rare cases, Crestor can cause a condition that results in the breakdown of skeletal muscle tissue, leading to kidney failure. Call your doctor right away if you have unexplained muscle pain, tenderness, or weakness especially if you also have fever, unusual tiredness, and dark colored urine.
    Slideshow: The Lowdown on Lipitor: What You Need To Know
    The Lowdown on Lipitor: What You Need To Know

    You should not take rosuvastatin if you have liver disease, or if you breast-feeding a baby.

    Avoid eating foods that are high in fat or cholesterol. Crestor will not be as effective in lowering your cholesterol if you do not follow a cholesterol-lowering diet plan.
    Consult good doctor and ask for alternative.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *