எதையும் தாங்கும் இதயம் பெற

எதையும் தாங்கும் இதயம் பெற

வெற்றியும் தோல்வியும் இயற்கை. தோல்வியைக்கண்டு துவளாத மனம் வேண்டும்.

எல்லோருக்கும் பல சோதனைகள் வரும். அச்சமயங்களில் மனம் தளராத உறுதி வேண்டும்.

எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதைத்தொடங்கி வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்ற தனியாத தாகம் வேண்டும். “முன் வைத்த கால் பின்வைக்காதேஎன்பதை மனதில் கொள்ள வேண்டும்.

அனைவரிடமும் நெருங்கிப்பழகும் அவசியம் உண்டு. அவர்களிடம் சிரித்துப் பழகுகின்ற பழக்கத்தையும், குணத்தையும் பெற்றிருத்தல் அவசியம்.

மனமுண்டானால் வழி உண்டு. நம்பினோர் கெடுவதில்லை. இதுபோன்ற பழமொழிகளை மனதில் கொள்ள வேண்டும். எதைச் செய்தாலும் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை வேண்டும்.

செய்யவேண்டிய காரியங்களைத் தாமதமின்றிச் செய்ய வேண்டும். இம்முயற்சியில் பல நேரங்களில் சத்திய சோதனை வரும். மனம் தளரது காரியத்தில் கண்ணாயிருக்க வேண்டும்.

காலநேரம் பாராது கடினமாக உழைக்க வேண்டும். காரியம் கை கூடும் வரை மெய்வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது உழைத்திட வேண்டும்.

எளிமையாக, நேர்மையாக வாழல் முக்கியம்.

செய்யும் செயலில் கவனம் இருக்கவேண்டும். வெற்றி பெறும் வரை வேறு திசையில், தவறான பாதைகளில் கவனம் செலுத்தக் கூடாது. வெற்றியினால் கர்வமும், திசை திருப்பமும் வராவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு செயலில் கவனம் கொள்வது வெற்றிக்கு வழி வகுக்கும்.

சலனமற்ற விசாலமான மனம் வேண்டும். பொறுமை, சகிப்புத்தன்மை இவை தேவை. எவ்வளவு குழப்பமானாலும் பொறுமை ஒன்றினாலேயே வெற்றி கண்டு விடலாம்.

பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமையும், பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும். அதேபோல் பிறர் கூறும் கடுஞ்சொற்களையும் அவை சொல்லப்படாதது போல் பாவித்து ஒதிக்கிவிட வேண்டும். அப்போதுதான் மன அமைதி கிடைக்கும்.

விட்டுக் கொடுத்தல்அவசியம்.

இத்துடன் அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில், அழகாபுத்தூர், தஞ்சாவூர் ஆலயம் சென்று இறைவனை வழிபடுங்கள்.

2 Responses to எதையும் தாங்கும் இதயம் பெற

  1. MURUGANANDAM says:

    Very useful article. The article describes neatly about how things can be done without failure.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *