அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்‌கோயில், திருவண்ணாமலை

அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்‌கோயில், திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ஸ்ரீநிவாசப்பெருமாள்

தீர்த்தம்

கோனேரிதீர்த்தம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

திருமலை

ஊர்

திருவண்ணாமலை

மாவட்டம்

விருதுநகர்

மாநிலம்

தமிழ்நாடு

இத்தலம் தென்திருப்பதி என்றழைக்கப்படுகிறது. திருப்பதி வேங்கடாசலபதியே வேட்டைக்கு வந்ததாகவும் பக்தர்களைக் காக்கவேண்டி இம்மலையில் திருக்கோயில் கொண்டதாயும் புராணம் கூறுகின்றது. மிகவும் வரப்பிரஸாதியாய்க் கருதப்படுகிறார். ஆதிசேஷனே ஒரு பர்வத வடிவமாகத் தோற்றமளிக்கிறார். அதில் பக்தர்களை காக்கும் பொருட்டு திருவேங்கடமுடயனாகத் தானே தோன்றி நிற்கிறார். சகல ஜனங்களுக்கு அவரவர் விரும்பும் பலன்களைக் கொடுத்துக் கொடுத்து எழுந்தருளி உள்ளார். அம்மலையின் அடிவாரத்தில் தாமரை முதலிய மலர்கள் நிறைந்த பம்பை என்கிற புண்ணிய தீர்த்தமும் உள்ளது. அது சகல பாவத்தையும் போக்கி சகல விருப்பத்தையும் கொடுக்க வல்ல மகிமையுடையது. அதை கோனேரி தீர்த்தம் என்றும் அழைப்பார்கள். திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு நேர்த்திக்கடன் செலுத்தலாம். மலை மீது அமைந்துள்ள கோயிலின் அழகு தோற்றம் காண்போரை வியக்க வைக்கும் அழகுடையது. கோயிலுக்‌கு முன்பாக உள்ள தடாகம் அற்புதமாக உள்ளது.

திருவிழா:

புரட்டாசி மாதம் சனிக்கிழமை, புரட்டாசி சனி வாரம், மாதாந்திர சனி உற்சவம்.

கோரிக்கைகள்:

திருமணகாரியம், குழந்தை பாக்கியம், வியாபார விருத்தி, விவசாய செழி்ப்பு ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர். இவை தவிர உத்தியோக உயர்வு வேண்டுவோர் இத்தலத்தில் வேண்டிக்‌கொண்டால் கண்டிப்பாக நடப்பதாக கூறுகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

முடி இறக்குதல், கால்நடைகள் தானம் தருதல் காணிக்கையாக ஆடு, மாடுகளும் பொன்னாலும், ‌வெள்ளியாலும் செய்யப்பட்ட பலகார உருப்படிகள், பாத்திரங்கள், பரிவட்டங்கள், பணம் முதலியன செலுத்தப்படுகின்றன.

2 Responses to அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்‌கோயில், திருவண்ணாமலை

  1. subburajpiramu says:

    நல்ல பதிவு , வளரட்டும் தங்கள் நற்ப்பானி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *