அருள்மிகு காயத்ரி அம்மன் திருக்கோயில், சிதம்பரம்

அருள்மிகு காயத்ரி அம்மன் திருக்கோயில், சிதம்பரம்-608 001, கடலூர் மாவட்டம்.
*******************************************************************************************

+91 4144- 223 450 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் 7.30 இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – காயத்ரி

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – சிதம்பரம்

மாவட்டம்: – கடலூர்

மாநிலம்: – தமிழ்நாடு

மன்னன் ஒருவன் தனக்கு ஏற்பட்ட தோட நிவர்த்திக்காக, தல யாத்திரை சென்றான். வழியில் அவனைச் சந்தித்த அந்தணர் ஒருவர், காயத்ரி மந்திரத்தால் அவர் பெற்ற புண்ணியத்தை மன்னனுக்குக் கொடுத்தார். இதனால் மன்னனின் தோடம் நீங்கியது. மகிழ்ந்த மன்னன், அந்தணருக்கு பொருள் கொடுத்தான். அதை வாங்க மறுத்தவர், காயத்ரிக்கு கோயில் கட்டும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி மன்னன் இங்கு காயத்ரியை மூலவராக வைத்து தனிக்கோயில் கட்டினான்.

சிவனுக்குரிய நந்தியை இவளது சன்னதிக்குள் பிரதிட்டை செய்துள்ளனர். கோட்டத்தில் அட்டபுச(8கை) துர்க்கை, அமிர்த கலசம் ஏந்திய மகாலட்சுமி, சரசுவதி உள்ளனர்.

மூலவர் காயத்ரி மேற்கு நோக்கி, ஐந்து முகம், ஆயுதம் ஏந்திய பத்து கரங்களுடன் தாமரை மலரில் அமர்ந்திருக்கிறாள். இவள் மூன்று அம்ச அம்பிகையாக காட்சி அளிக்கிறாள். பாதம் அருகில் ஸ்ரீசக்ரம் உள்ளது. இவள் காலையில் காயத்ரி, மதியம் சாவித்திரி, மாலையில் சரசுவதியாக அருளுவதாக ஐதீகம். இவளே மும்மூர்த்திகள் மற்றும் முத்தேவியரின் அம்சமாக இருக்கிறாள்.

பவுர்ணமி பூஜை : காயத்ரி, சூரியனுக்கு சக்தி தருபவள் என்பதால், சூரியனுக்கு உகந்த சிம்ம (ஆவணி) மாத பவுர்ணமியை ஒட்டி இவளுக்கு விழா நடக்கும். பவுர்ணமி நாட்களில் 1008 முறை காயத்ரி மந்திரம் சொல்லி, யாகம் வளர்த்து விசேட பூசையும் நடக்கிறது. குழந்தைகளின் கல்வி சிறக்க, இவளுக்கு சிவப்பு நிற மலர் மாலை அணிவித்து, வடை, பாயசம் படைத்து வணங்குகின்றனர். நவராத்திரியில் இலட்சார்ச்சனையும், விசயதசமியன்று பரிவேட்டை நிகழ்ச்சியும் நடக்கும்.

குழந்தைகளின் கல்வி சிறக்க வணங்குகின்றனர்

இவளுக்கு சிவப்பு நிற மலர் மாலை அணிவித்து, வடை, பாயசம் படைத்து வணங்குகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *