அருள்மிகு அருளாலீசுவரர் திருக்கோயில், அழிசூர்

அருள்மிகு அருளாலீசுவரர் திருக்கோயில், அழிசூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

அருளாலீசுவரர்

தாயார்

அம்புஜ குசலாம்பாள்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

அழிசூர்

மாவட்டம்

காஞ்சிபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த அழகிய கிராமம் அழிசூர். அழிஞ்சல் மரத்தடியில் இலிங்கம் அமைத்து அகத்தியர் வழிபட்டதால் அழிசூர் என அழைக்கப்படுகிறது. கி.பி. 1123-ம் ஆண்டு விக்கிரமச் சோழனின் ஐந்தாவது ஆட்சியாண்டில் இக்கோயில் கட்டப்பட்டது. சுங்கந் தவிர்த்த சோழர் சதுர்வேதி மங்கலம் என்பது அழிசூர் கிராமத்தின் முந்தைய பெயராகும். செய்யாறு நதியின் தென்கரையில், சோழர் காலத்தில் கட்டப்பட்டது இந்த ஆலயம்.

இக்கோயில் கிழக்கு முகமாக அமைக்கப்பட்டிருந்தாலும், நுழைவுவாயில் தெற்கு நோக்கி உள்ளது. கல்தூண் ஒன்று துவஜஸ்தம்பமாக நடப்பட்டுள்ளது. வெளிப்பிரகாரத்தில் நந்தி மற்றும் பலிபீடம் உள்ளது. இங்குள்ள நந்திதேவரை வில்வம், அருகம்புல், வெல்லம், ஏலக்காய் கலந்த பச்சரிசி கொண்டு வழிபட்டால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை.

பிரதோஷ காலங்களில் இவரை வழிபட்டால் கடன் தொல்லை, எதிரிகள் தொல்லை நீங்குவதுடன் நோயற்ற வாழ்வு கிடைக்கும். அன்னை அம்புஜ குசலாம்பாள் அபயஹஸ்தத்துடன் அருட்காட்சி தருகிறார். தேவியை தரிசித்த பின் முருகனையும், பைரவரையும் தரிசிப்பது சிறப்பு. மங்கல விநாயகர், முருகன், பைரவர், அம்புஜ குசலாம்பாள், இலட்சுமி நாராயணர் சன்னதிகள் உள்ளன.

திருவிழா:

பிரதோஷம், சிவராத்திரி.

கோரிக்கைகள்:

கடன் தொல்லை, எதிரிகள் தொல்லை நீங்குவதுடன் நோயற்ற வாழ்வு கிடைக்க இங்குள்ள நந்திதேவரை வணங்கி செல்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *